"கம்பெனிக்கு நேரத்துக்கு வரனும் இல்லன்னா, ரெட் லைன் அடிக்கப்படும், ஒத்தர் ஒழுங்கான ரீசன் இல்லாம 3 தடவைக்கு மேல் ரெட்லைன்ல பெயர் இருந்தால் அவரின் சம்பளத்தின் ஒரு பகுதி வெட்டப்படும்.மேலும், வேலை நேரங்களில் அங்கும் அங்கும் தேவையில்லாம அலையக்கூடாது, வெட்டுப்பேச்சுகள் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 நிமிட ப்ரேக் இரண்டு தரப்படும். சிசிடிவி கமரால்ல உங்க வேலைகளை நான் கவனிப்பேன். உண்மையாகவும், பொறுப்பாகவும் ஒழுங்கா வேல செய்யனும். யாருக்காவது ஏதும் கஷ்ட காலம் என்றால் தயங்காது கூறலாம், நா தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன். மேலும் வேலை நேரங்களை தவிர்த்த மற்றைய நேரங்களில் உங்கள் நண்பனாக கூட என்னை கருதலாம். நான் சொன்னதுபோல இருந்தால் நானும் உங்களை அன்புடன் கவனிப்பேன். இன்று என்னுடைய முதலாவது நாள் என்பதால உங்கள நேர காலத்துடன் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கிறேன். அத்துடன் யாராவது மேலதிக வேலை செய்ய வேண்டும் என்றால் வந்து சொல்லுங்க. அதுக்கும் தகுந்த சம்பளம் என்கிட்ட இருந்து கிடைக்கபெறும்" என்று ஆதி கூற, அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்.
அவன் பேசும் போது, அவனது உதட்டு அசைவையும், கையசைவையும் திவ்யா கண் வாங்காது அவனை பார்த்து கொண்டு இருந்தாள். இதுக்கு முன்னால பாஸ்ஸாக பார்க்கல்லய்யே
ஆறடி உயரமும், வெண்ணிற நிறமும், சற்று மெலிந்த உடலமைப்பு, அழகாக வாரப்பட்ட முடியும், சின்ன கூரிய கண்கள், நேர்த்தியாக சவரம் செய்யப்பட்ட தாடி, கை நீட்டப்பட்ட அவனின் நிறத்துக்கு ஏற்ற லோங் சீல்வ் ஷேர்ட் அணிந்து முழங்கை வரை கையை மடிக்கப்பட்டு இருந்தது. மதி சொன்னதுபோல அழகா தான் இருக்கிறாரே என்று மனம் கூறலாயிற்று. அவரது வழிகாட்டலும், சொன்னவைகளும் அவனின் திறமையை கொடிகட்டி காட்டிக் கொண்டு இருந்தது. .
அனைவரும் ஆதியின் கட்டளைப்படி கிளம்ப முற்பட்ட கதிரையின் சத்தத்திற்கு திவ்யா உலகிற்கு வர, திவ்யாவும் கதவு அருகே செல்ல,
"எக்யூஸ் மீ மேடம் திவ்யா, எல்லோருக்கும் வீட்டுக்கு போக சொன்னேன் தான் பட் உன்ன சொல்ல இல்லையே. சக்தி சேர் உன்ன ரொம்ப புகழ்ந்தார். எனக்கு அவசரமாக டிசைனிங் ஒன்னு வெப்சைட்டுக்கு தேவ. அத வரைந்து தந்துட்டு வீட்டுக்கு செல்லலாம். பட் வேல முடியாம உன்ன நா அனுப்புறல்ல. மைன்ட் இட். அது இரவு 12 மணி ஆனாலும் எனக்கு பரவல்ல. உனக்கு அவசரமா போகனும்னா அவசரமா செய். இல்லன்னா மெதுவா ஆற அமர செஞ்சாலும் எனக்கு பிரச்சின இல்ல" என்று சொல்லி அந்த அறையை திறந்து விறுவிறு என்று வெளியேறினான் ஆதி.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...