💗 Episode 14 💗

2.7K 78 6
                                    


"Hei, Excuse me" என்று நான் அழைக்க,
என் முன்னால் வந்து நீயும் நிற்க, என் கண்களை உன்னை விட்டு எடுக்க முயன்றதில் நான் தோற்றுப்போனேன்.

"உன் பெயர் என்ன?" என்ற கேட்க,
"ரியா சிவகுமார்"
"என்ன course?"
"engineering"
"நான் யார் என்று தெரியுமா?"
"ம்ம்ம். ஆதித்யா"
"எல்லாம். தெரிந்து வைத்து இருக்கிறாய். பரவாயில்லை" என்று யோசித்தபடி,
"என்னை ஒரு பெண் என்றும், நீ ஒரு ஆணாக இருந்தால், எப்படி love propose பண்வ??? சின்னதாக நடித்து காட்டு" என்று கூற,
உடனே சற்றும் யோசிக்காமல்,
" எனக்கு மற்றவர்கள் போல் உன்னை வர்ணித்து கவிதை, பாட்டு சொல்ல தெரியாது. உன்னை கண்டதும் எனது மனம் உன்னை soul mate ஆக ஏற்றுக்கொள்ள துடித்தது. உனக்கும் என்னை பிடித்தால் love பண்ணலாம் "
" எனக்கும் பிடித்து இருந்தால்.. " என்று நான் கூற,
அப்போ, "I love you so much" என்று எனது கண்களை பார்த்து நீ பார்த்து கூற, என் மனமும் அக் கணம் துள்ளியது.
நீ உண்மையாக உணர்வுபூர்வமாக சொன்னது போல் இருந்தது.
மனம் ஏனோ அது வெறும் நாடகம் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

"நீ பதிலுக்கு சொல்ல மாட்டியா??" என்று நீ கேட்க,
"I love you too from bottom of heart " என்று உண்மையாகவே கூறினேன். உனக்கு அப்போது விளங்கியதோ இல்லையோ..

"ஆதி ஐயாவே, நான் போகலாமா?" என்று நீ கேட்ட அந் நொடியில் தான் உலகிற்கு வந்தேன்.

வாயால் சொன்னால் மட்டும் போதுமா?? உணர்த்த வேண்டாமா?? என்று நான் கேட்க, கோபத்தால் உன் கண்கள் சிவக்க,
" ஐயோ, பூ ஒன்றும் தர மாட்டியா?இவ்வளவு தானா??" என்று கேட்டேன் என்று சமாளிக்க,
தலையில் சூடி இருந்த ரோசாப்பூவை கையில் கொடுக்க,
"தினமும் இதே மாதிரி propose பண்ணிவிட்டு போ " என்று நான் சொல்லவே, நீ இறுமாப்பாக போனாய்.

உன் திமிரும், தைரியமும் என்னை கட்டிப்போட்டது. எத்தனையோ பெண்களை கண்டாலும் ஒரு வார்த்தை கூட பேசாத நான் உன்னை கண்டு பேசினேன். சிரித்தேன். ஏன் காதலிலும் விழுந்தேன். எத்தனையோ சகபாடிகள் காதலை சொல்லி, என்னிடம் வாங்கி கட்டினர். ஆனால் உன்னிடம் மட்டும் ஏனோ என் மனம் காதலை கேட்கிறது பெண்ணே.
முதல் சந்திப்பை வாசித்த திவ்யாவிற்கு ஆதியினதும் ரியாவினதும் காதல் கதை வாசிக்க ஆவல் மேலோங்கியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தங்கை வரவே டயரியை ஒளித்துக் கொண்டாள் திவ்யா.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now