"நாளை உன்ன பொண்ணு பார்க்க எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்னு வர்ராங்க. அழகா நல்ல தங்கச்சி மாதிரி ரெடியா இரு. விளங்குதா?? " என்று கண்டிப்பாக ரித்திக் அண்ணா ராகவியிடம் கூற,
ராகவியின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உதிர்ந்தன. ஒன்னும் பேசாது வாங்கிக் கொண்டு அறையை விட்டு செல்ல முற்பட்ட ராகவியை ஒரு கரம் தடுத்தது."என்ன ராகவி, நா அவ்வளவு இரக்கம் இல்லாத படுபாவி என்று நினைத்தாயா? உன் ஒவ்வொரு ஆசையையும் பார்த்து பார்த்து நிறைவேற்றிய உன் அண்ணன் இதை நிறைவேற்றி வைக்க மாட்டாருன்னு நினைத்தாயா?? முதல்ல உன் மேல கோபம் வந்தா உன் கண்கள்ள அவன் மீதான காதலை கண்டேன். நீ சொன்ன தகவலை எடுத்து சிவா பற்றி என் நண்பர்களை வைத்து தேடினேன். என் தேடுதல் பற்றி உனக்கு நல்லா தெரியுமா? எப்படி அலசி ஆராய்வேன்னு. முதல்ல உன்ன காதலிக்கிறானா? என்று உறுதி செய்து கொண்டேன்.
தேடுதல்ல அவன் நான் நினைத்தத விட நல்லவனா தான் இருக்கான். நேத்து முன்தினம் அவன நேரடியா கதைத்து, வீட்டு நிலைமைகள எல்லாம் அறிந்து, நேற்று அவங்க வீட்டுல போய் பேசினேன். முதல்ல அவர்கள் தயங்கினாலும், என் முன்னால சிவா சமாதானம் செய்து அவங்கள சம்மதிக்க வைத்தான். அதுவர உன்கிட்ட ஒன்னும் சொல்ல வேணான்னு சொன்னான். நீ சும்ம தேவல்லாம மனச குழப்பிக் கொள்வியாம். நாளைக்கு பொண் பார்க்க வருவது சிவா வீட்டில இருந்து தான். இத சொல்லாம கொஞ்சம் உன்ன குழப்பி, உன் ரியெக்ஷன பார்க்கனும்னு தான் சும்ம பொண்ணு பார்க்க வர்ரதா சொன்னேன். இப்போ சந்தோசமா?? என் தங்க தங்கச்சிக்கு??? " என்று கூறியது தாமதம், சந்தோசத்துடன் அண்ணனை கட்டியணைத்தாள் ராகவி.
"லவ் யூ அண்ணா. இல்லாம இருக்குமா??? எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா??? " வார்த்தைகள் திக்க, அண்ணனின் சேர்ட்டை ராகவியின் சந்தோச கண்ணீர் துளிகள் நனைக்கலாயிற்று.
" இப்போது, எதற்கு அழுற ராகவி?? நீ அழுத காலம் எல்லாம் முடிந்தது என்ட அரும தங்கச்சியே. இப்படி அழுதா நாளைக்கு முகம் வீங்கி அசிங்கமா இருந்தா நான் பொறுப்பு இல்லடா. Sorry டா இவ்வளவு காலம் உன்னை சோதித்ததுக்கு. சரி ஏதும் மேக்கப், பேஷியல், ஹெயார் கட் இப்படி ஏதாவது செய்ய சலூன் போகனுமா?? காசு வேண்டுமா??" என்று அண்ணன் பாசத்துடன் கேட்க, "அது ஒன்னும் தேவல்ல. நான் சும்மாவே அழகு தான். " என்று வாயடிக்க,
" இவ்வளவு காலம் ஒளிந்து இருந்த தங்கை இன்று தான் வெளில வந்து இருக்கா" என்று ராகவியின் கன்னத்தை கிள்ளியபடி சொன்னான் ரித்திக்.
" நான் அம்மா, அப்பாகிட்ட எனக்கு தெரிந்த இடம் என்று சொல்றேன். இல்லன்னா இது காதல் கீதல் என்று தெரிந்தா அப்பா உன்ன கொன்று புதைப்பாரு. இப்படி எல்லாம் தெரிந்தும் லவ் பண்ணீயே, நீயெல்லாம் வேற லெவல் டி" என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றான் பாச அண்ணன்.
DU LIEST GERADE
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romantikஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...