நள்ளிரவில் வீட்டை வந்தடைந்த ஆதிக்கு பூகம்பமொன்றே வெடித்தது.
"என்ன இவ்வளவு நேரம் ஆகியும் யாரும் தூங்கவில்லையா? ஸ்வர்ணா நீ எப்போது வந்தாய்?? சொல்லாமல் கொல்லாமல் வந்திருக்கிறாய்??" ஆதி என்றவுடன்,
"உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?? திருமணத்திற்கு இன்னும் 2 நாட்கள் கூட இல்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கே போனாய்? திவ்யா எதற்கோ அழைப்பு விடுத்து பார்த்து நன்றாக பயந்து போய் இருக்கிறாள். திவ்யா அழுது முடித்துவிட்டாள். ஏன்டா இப்படி பண்றாய்? வேண்டுமென்றா இப்படி செய்கிறாய்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? தொலைபேசியை அணைக்கிற அளவிற்கு என்ன வேலை?? " என்று பெற்றோரும் ஸ்வர்ணாவும் மாறி மாறி கேள்விகள் கேட்க,
" just stop it" என்று வீடே கதற ஆதி சொல்ல, பேய் அறைந்ததுபோல் அவர்பள் நின்றனர்."இந்த திருமணம் நடக்காது. நான் இன்னும் ரியாவை தான் காதலிக்கிறேன். இன்று சென்னைக்கு தான் போய் வந்தேன். அவள் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறாள் என்று தகவல் கிடைத்தது. அவளை நான் எப்படியாவது தேடி கண்டுபிடித்து தாலி கட்டுவேன். இல்லாவிட்டால் சன்னியாசியாக மாறி விடுகிறேன்" என்று கூற கன்னத்தை தாயின் கரம் பதம்பார்த்தது.
" தாலி கட்டும்போது சொல்லி இருக்கலாமே திருமணத்தை நிறுத்த சொல்லி. திருமண பத்திரமும் அடித்து கொடுத்து, நாளை குடும்பத்தினர் கூட வருவாங்க. என்ன சொல்றது அவங்க கிட்ட?? எங்களை அவமானப்படுத்தவே இருக்கிறாயா? திவ்யாவின் நிலை பற்றி யோசித்தாயா?? உன்னை மட்டுமே யோசிக்காதே. திருமணம் வரை போய் நிறுத்தப்பட்டது என்று அவளை யார் திருமணம் செய்வார்கள்?? உன் தங்கைக்கு இந் நிலை வந்தால் நீ என்ன செய்வாய்?? சரி மாப்பிள்ளை என்று அவனின் காதலியை தேடி சேர்த்து வைப்பாயா? ரியா ரியா ரியா.... அவள் உன் கடந்த காலம் டா. உன் விருப்பம் கேட்டு தானே அவள் வீட்டிற்கு சென்று பெண் கேட்டோம். இனி எப்படி எல்லாருக்கும் முகம் காட்டப்போகிறோமோ?? " என்று சொல்ல,
" I don't want to ask anything more. Just stop it. ஒருத்தியை காதலித்துவிட்டு அவளை மனதில் வைத்து கொண்டு என்னால் இன்னொருத்தியுடன் வாழ முடியாது. நாளை காலை திவ்யாவிடம் சொல்வேன். அவன் என் காதலை புரிந்து கொள்வாள் என்று நம்பிக்கை இருக்கிறது." என்று கண்கலங்க கூறி, அவர்கள் பேச முதல் படியேறி சென்றான் ஆதி. அவன்போவதை பார்த்து செய்வதறியாது நின்றனர் அப் பெற்றோரும் ஸ்வர்ணாவும்.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...