ரியா college வந்த நாள் முதல், ஆதி senior என்ற தகுதியில் அவளை பகிடிவதைக்கு உற்படுத்தியது, ரியாவிற்கு பிடிக்காத பாடங்களை கற்பித்தல், ஆதி முதலில் காதலில் விழுந்தாலும் ரியா தன்னை எந்த இடத்தில் வைத்து இருக்கிறாள் என்று தெரிய செய்த நாடகம், அதில் ஆதி-ரியா காதல் கைக் கூடியது, ஆனால் இரு குடும்பத்தினரினதும் எதிர்ப்பு, காலபோக்கில் ஆதியின் வீட்டில் எதிர்ப்பு குறைய, கூடுதலான எதிர்ப்பு ஜாதி, பணம், அந்தஸ்தால் ரியாவின் குடும்பத்தால் வந்தது, இறுதியில் ஆதியை வேண்டுமென்று அவமானப்படுத்தி accident ஆக வைத்தது, ஆதியை பார்க்க ரியா கடைசியாக வீட்டை விட்டு காரில் வரும்போது accident இல் மாட்டி, உயிரிழந்து விட்டதாக வைத்தியர் சொல்ல, ஆதி வைத்தியசாலையில் துடி துடித்தது, கடைசி தடவை ரியாவின் முகத்தை அவ்வளவு கெஞ்சியும் பார்க்க விடாமல் செய்தது, ஆதியின் தாயிற்கு இவனின் நிலை கண்டு மாரடைப்பு வந்தது. கல்லூரி வந்தும் ரியா நினைவில் வாழ்ந்தது,
எல்லாவற்றையும் கூறி, college இல் நடைபெற்ற சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்று காட்டினர்.
திடீரென ரியா தலையை பிடிக்க, அவளை அமர வைத்து, தண்ணீர் கொடுத்து,
"are you okay?? தலைவலி ஓவரா வந்தால் ஏதும் மருந்து குடிப்பாயா??" என்று கேட்க,
ஆம் என்று தலையாட்டி, கைப்பையை காட்ட, அனிதா மருந்தை கொடுத்து பருக விட்டாள்.சிறிதுநேரம் அவளை தனியாக அமைதியான இடத்தில் அவளை நிறுத்திவிட, ரியாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. ஆதியின் காதலின் ஆழம் ஒருபக்கம் விளங்க, தனது பெற்றோர் மேல் கடும் கோபம் வரவே, தன்னை சுதாகரித்துக் கொண்டு எல்லாரும் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து,
" மகேஷ், I want to meet ஆதி" என்று எல்லார் முன்னிலையிலும் கேட்க,
"how do you know his name??" என்று ஒருவன் கேட்க,
"உனக்கு பழையதெல்லாம் நினைவுக்கு வந்துவிட்டதா??" என்று இன்னொருவன் கேட்க,
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...