ரியாவின் பெற்றோர் வந்திறங்கி,
"ரியா ரியா" என்று கத்திக் கொண்டு வரவே, ஆதியின் கையை பயத்தால் இறுக பிடித்துக்கொண்டாள் ரியா.
பெற்றோரின் பின்னால் தனக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியரும் வந்து கொண்டு இருந்தார்." ரியாவை checkup செய்யுங்கள்" என்று கூற,
"ஒன்றும் தேவையில்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஏன் என்னை ஊசி போட்டு தூக்கமாக்கி வீட்டுக்கு அழைத்து செல்வதா உங்கள் திட்டமா?" என்று ரியா ஆதி இருக்கும் தைரியத்தால் கர்ச்சிக்க,
" என்னடி ஓவரா பேசுற?? இந்த ஆதியை உன் கண்ணில் காட்டாமல் எவ்வளவு பாதுகாத்தேன். அதையும் மீறி அவனை தேடி வந்து விட்டாயா? உன் நினைவுகள் எப்படி திரும்பி வந்தன?? " என்று கூறி பார்க்க, அனிதாவை காண,
" இவள் தான் என் மகளை எங்களிடம் இருந்து பிரித்த ராட்சசியா? நீ வேண்டுமென்று அவளின் நினைவுகளை வர வைத்திருப்பாய் " என்று அவளை அடிக்க செல்ல,
எல்லாரும் தடுத்தனர்." நீங்கள் என்ன பெற்றோர்?? நான் வெட்கப்படுகிறேன் தாய் தந்தையே. மகள் உயிராக காதலிக்கும் ஒருவனை ஜாதி, அந்தஸ்து காரணமாக கொல்லவும் துணிந்தீர்களே. மகளிற்கு கடந்த கால நினைவுகள் வராமல் செய்து என்ன சாதிக்க துணிந்தீர்கள்? எனக்காக என்ன செய்து இருக்கிறீர்கள்? உண்மையாக என் மீது பாசம் இருந்தால் ஆதியை மருமகனாக ஏற்றுக்கொள்ளுங்கள். செய்த தப்பை சீர்த்திருத்தி ஆதியிடம் மன்னிப்பு கேளுங்கள். " என்று ரியாவின் கண்கள் சிவப்பாகியபடி கூற,
" நீ சொல்வதெல்லாம் எங்களால் கேட்க முடியாது. உன் நலவிற்காக தான் நாங்கள் எல்லாம் செய்தோம். எங்களிடம் போக வா ரியா" என்று தாய் கூற,
" நான் வர மாட்டேன். நாளை எனக்கும் ஆதிக்கும் திருமணம். ஆசிர்வாதம் கூட வழங்க முடியாவிட்டால் கிளம்பலாம். ஆசிர்வாதம் கேட்கவே இவ்வளவு தூரம் உங்களை அழைத்தேன் மா"
"உனக்கு இவ்வளவு திமிரா? உன் திமிரில் விளைவால் இனி இன்றுடன் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவுமில்லை. இனி எங்கள் முகத்தில் முளிக்க தேவையில்லை. உன் பெற்றோர் இறந்துவிட்டனர் என்று நினைத்துகொள்" என்று தந்தையும் கூறி நடக்க, பின்னால் தாயும் நடந்து வெளியே சென்றனர்.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...