போகின்ற உன்னை இழுத்து என் கை வளையத்திற்கு கொண்டுவர, நீ என்னுடன் சண்டையிட்டு போக துடித்தபோது உன் கைகளை பின்னால் கட்டி, அவளின் மென்மையான தோளில் நாடியை வைத்தபடி,"ரியா, உன்னை மனதில் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடு. நான் வேண்டுமென்றே செய்யவில்லை. இதெல்லாம் வெறும் நாடகம். ஸ்வேதாவை என்னுடன் உரையாடியது எல்லாம் நான் சொன்னபடியே. அவள் என்னை காதலிக்கவும் இல்லை. நான் அவளை காதலிக்கவுமில்லை.
எவ்வளவு நாள் நானும் one side lover ஆக இருக்க, உன் மனதில் நான் எந்த முறையில் இருக்கிறேன் பார்க்க தான் அப்படி செய்தேன்.
அன்று சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் உள்ள சுவரில் சாய்த்து நீ பேசும்போது உன் கண்களில் முக சாறலிலும் என் மேல் உள்ள காதலை கண்டு கொண்டேன். உன்னால் முன்னால் என்னை பற்றி ஸ்வேதாவை பேச சொன்னது நான் தான் டி. அவள் காதலை சொல்ல போகிறாள் என்றால் நீ உண்மையாக என்னை காதலித்தால் அக் கணம் நீ என்னை தேடி வருவாய் என்றும் உணர்ந்தேன். ஆகவே இப்படி ஒரு plan போட்டேன். நம்பிக்கையும் இருந்தது நீ வருவாய் என்று.
நீ washroom இல் அழுததை நான் பின்னால் இருந்து கண்டேன். அப்படியே வந்து கண்ணீரை துடைத்து உன்னை தழுவ நினைத்தாலும், உன் மனது ஒரு நிலையில் இல்லை என்று அறிந்து பேசாமல் விட்டேன். என்னை தேடி உன் பாதங்களால் ஓடியதை கண்டேன். காதலுடன் என்னை தேடிய உன் கண்களை நான் காணாமல் இல்லை. ஒவ்வொரு சோடிகளை தட்டி என்னை தேடினாய். இறுதியாக இங்கே இளைப்பாற வந்ததை கண்டேன். ஸ்வேதாவிற்கு கண் சாடையை காட்ட அவளும் என்னிடம் பேச தொடங்கினாள். உனக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவளை அறைந்தாய். பாவம்டி அவள். உனக்கு இன்னொரு உண்மை தெரியுமா?? ஸ்வேதா எனக்கு தங்கை முறை. அவள் என்னுடைய உறவுக்கார பொண்ணு. அதனால் தான் அவளை தேர்வு செய்தேன் என்னுடன் நடிக்க.
இறுதியில் உன் வாயால் என்னை காதலிப்பதாக சொல்லிவிட்டாய். இனி டூயட் பாட தான் பாக்கி இருக்கு.
DU LIEST GERADE
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romantikஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...