💗 Episode 24 💗

1.9K 70 7
                                    


நிச்சயதார்த்த நாளும் நெருங்கியது.

"அம்மா, உன் தம்பி மகளின் நிச்சயதார்த்தம் தானே மா, please மா போம்மா" என்று ரவி கூற,
எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை அத் தாய்.

"அம்மா, உன்னிடம் தான் பேசுகிறேன்" என்று கூற,
முறைத்து கொண்டு, "உன்னை நிராகரித்தவர்களுடன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை டா. அவர்களுக்கு நாம் செய்தவைகள் அனைத்துக்கும் அவமானப்பட்டதும் போதும்டா. அந்த வாசல்படியை நான் மிதிக்க மாட்டேன். உன்னையும் போகவிடமாட்டேன். திவ்யாவை விட நல்ல மனைவி உனக்கு கிடைப்பாடா. எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று தாய் கூற, சொன்னவைகள் காதில் விழ சிலையாக நின்றான் ரவி.

" திவ்யா மறப்பது ஒன்றும் இலகுவில்லை என்று என் தாயிற்கு விளங்கவில்லையே " என்று மனம் கூற ஏதும் கூறாமல் பைக்கில் பறந்தான் ரவி.

ஆதிக்கு மனம் சரியே இல்லை. இந்த நிச்சயதார்த்தம் கட்டாயம் தேவையா? என்று மனம் அடுக்கடுத்து கேள்விகளை கேட்க, விடை தெரியாமல் விளித்தாலும், தன் தங்கையும், பெற்றோரும் கண் முன்னே தோன்ற, எல்லாவற்றையும் மறந்தான்.

காலம் விரைவாக சுழல, நிச்சயதார்த்த நாளும் நெருங்கியது.

நிச்சயதார்த்தத்திற்கு முன் தினம்,
தூர குடும்ப உறவுகளும் என்றும் இல்லாதவாறு அன்று துளிர்விட்டது, குடும்ப அங்கத்தினர்கள் நாளைய நிகழ்விற்கு வேலைகளில் ஈடுபட்டனர். திவ்யாவின் குடும்பத்தில் இதுவே முதல் கல்யாண சடங்கு. நண்பர்கள் குழுவும் அங்காங்கே கலை கட்டி பறக்க, புதுப்பெண்ணை நண்பிகள் நகைச்சுவைகளால் சிணுங்க வைத்து கொண்டிருந்தனர். திவ்யாவின் ஆசைப்படி அழகிய மருதாணி அலங்காரம் அவள் அழகை மெழுகூட்ட, வீடும் பல மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்க, ஓர் மின்குமிழ் மட்டும் அணைய பெற்றது.

முன்வீட்டு ஆதியின் வீடும் மின்குமிழ்களால் ஜொலிக்கப்பட்டு காண்போரை பொறாமையிட செய்தன. அங்கேயும் ஆட்கள் நடமாட்டத்தால் கலகலப்பாக வீடு மாற, ஆதியின் பெற்றோருக்கு மனதில் நிம்மதியும் வந்து போனது. ஸ்வர்ணாவின் மாப்பிள்ளை வீட்டாரும் வருகை தந்து, தன் மகன் விரைவில் வெளிநாடு போவதால் ஆதி-திவ்யா திருமண நாளுக்கு முன்னைய கிழமை  திருமணத்தை வைக்குமாறும், நல்ல முகூர்த்த நாளும் கூறவே, ஆதியின் குடும்பத்தினர் கல்யாண ஏற்பாடுகளுக்கு ஏற்கனவே தயாராகி இருந்தமையால் அவர்களும் சம்மதிக்க, இன்னும் அவ்வீடு சந்தோசத்தால் இரட்டிப்பானது.

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Where stories live. Discover now