இரண்டு நாட்கள் கழித்து,நெருக்கமான நண்பர்களை மட்டும் தன் வீட்டுக்கு ஆரதனா அழைத்து இருந்தாள்.
சிவா ஒரு அழகிய வாழ்த்து அட்டை ஒன்றில் தன் காதலை எழுதி ஒரு ரோஜா பூவோடு கொடுக்க முடிவு செய்தான்.
அன்று இரவு 7 மணிக்கு அவள் வீட்டுக்கு சென்றான்.
"வா பா எப்படி இருக்க.என்ன இப்போ எல்லாம் வீட்டு பக்கமே கானம்",என்று வினவினாள் ஆரதனாவின் தாயார்.
"இல்ல ஆன்டீ கொஞ்சம் பிசி",என்று வழிந்தான் சிவா.
"ஆமா ஆன்டீ கொஞ்ச நாளா கலெக்டர் வேலை பார்க்க போயிட்டான்.அதான் பிசி",என்று குறுக்கிட்டான் பிரபு.
"உனக்கு எப்போதும் குரும்பு தான்",என்று கூறிக் கொண்டே மற்றவர்களை அழைக்க சென்றாள் ஆரதனாவின் தாயார்.
"என்ன டா உன் வருங்கால மாமியார் உன்ன ரொம்ப வர வேற்கிறாங்க.உண்மை தெரிஞ்ச வெலக்கமாரு பிஞ்சுரும் மகனே",என்றான் பிரபு.
"பேசாம போடா.நானே எப்படி அவ கிட்ட சொல்லுரதுனு டென்சன் ல இருக்கேன்.போ என்கிட்டயே கொஞ்ச நேரத்துக்கு வராத",என்றான சிவா."சரி பாஸ்.இனிக்காவது சொல்லுங்க.வெற்றி உனதே",என்று கூறி விலகி சென்றான் பிரபு.
ஆரதனா ஒரு நீல நிற சுடிதார் அணிந்து இருந்தாள்.
அவளை சுற்றி பெண்கள் கூட்டம் இருந்ததால் அவன் தன் பரிசை கொடுக்க தயங்கினான்.
ஒரு சில முக்கியமான சொந்தங்கள் வந்த பின் ஆரதனா கேக்கை வெட்டினாள்.
ஒரு துண்டை எடுத்து தன் தாய் தந்தைக்கு ஊட்டிவிட்டாள்.
"அவ அங்க தான டா ஊட்டுரா.நீ ஏன் டா வாய பொலக்குர",என்று கேட்டான் பிரபு.
சிவா உடனே திறந்து இருந்த அவன் வாயை மூடிக் கொண்டான்.
அனைவருக்கும் கேக் துண்டுகள் வழங்கப்பட்டது.
"ஆரதனா பிறந்த நாள் வாழ்த்துக்கள்",என்று கூறி அவள் அருகில் சென்றான்.
"தேங்கியூ சிவா",என்றாள் ஆரதனா.
"இந்த சுடிதார்ல நீ ரொம்ப அழகா இருக்க",என்றான் கணகளில் காதல் வழிய.
"பொய் தான சொல்லுர",என்றாள் சிரித்துக் கொண்டே.
"எப்படி கண்டுபுடிச்ச",என்றான் சிவா.
"காதல சொல்லுடா ந இவன் காமேடி பன்னிகிட்டு இருக்கான்",என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டான் பிரபு.
சிவா எதோ சொல்ல வாய் எடுத்த போது யாரோ ஆரதனாவை அழைக்க அவள் விலகி சென்றாள்.
"ச்சே நல்ல வாய்ப்பை விட்டுட்டேனே",என்று நொந்து கொண்டான் சிவா.
எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிவாவும் பிரபுவும் ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.
அவர்களை நோக்கி ஆரதனா தன் தட்டுடன வந்தாள்."என்ன டா சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கா",என்றாள் சிவா பக்கத்தில் அமர்ந்தபடியே.
"நல்லா இருக்கு ஆரதனா",என்றான் சிவா.
"உன்கிட்ட ஒன்னு சொல்லனும்",என்றான் சிவா.
பிரபு அவனுக்கு அரை விழுந்து விடுமோ என்று பயந்து சற்றே விலகி அமர்ந்தான்.
"சொல்லு",என்றாள் அவள்.
சிவா தன் கையில் இருந்த வாழ்த்து அட்டையை ரோஜாவோடு கொடுத்தான்.
அவள் சற்று வியப்பாக அதை வாங்கிக் கொண்டாள்.அதை அவள் பக்கத்தில் வைத்துவிட்டு பேசிக் கொண்டே உணவை உண்டு கொண்டு இருந்தாள்.
எழுந்து செல்லும் போது அதை எடுக்க மறந்துவிட்டாள்.சிவவும் அதை கவனிக்கவில்லை.அவள் வாங்கிக் கொண்டாள் என்ற மகிழ்ச்சியில் அவன் பறந்து கொண்டு இருந்தான்.
ஆரதனாவின் அம்மா பரபரப்பாக ஓடிக் கொண்டு இருந்தார்.யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பரிமாரிக் கொண்டு இருந்தார்.
"ஆன்டீ நாங்க ராக்கேட் செய்யனும் எதாவது பேப்பர் கொடுங்க",என்று ஒரு மழழை கூட்டம் அவளிடம் கேட்டது.
"ஆன்டீ ரொம்ப பிசியா இருகேன் பா.நீங்களே தேடி போய் எதாவது பேப்பர் எடுத்துக்கொங்க",என்றாள் ஆரதனாவின் அம்மா.
சரி என்று கூறிவிட்டு அந்த சிறுவன் சென்றான்.
அவன் சோபாவில் ஒரு வாழ்த்து அட்டையை பார்த்தான்.
"ஆன்டீ நான் இதை எடுத்துக்கட்டுமா",என்று கத்தினான்.
ஆரதனாவின் தாய் அதை சரியாக கவனிக்காமல் சரி என்று கூறினாள்.
ஒரு நிமிடத்தில் சிவாவின் காதல் அட்டை ராக்கேட்டாக மாறியது.இது தெரியாத சிவா மிக மகிழ்ச்சியாக பிரபுவிடம் பேசி சிரித்துக் கொண்டு இருந்தான்.

ESTÁS LEYENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
No Ficciónகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...