சிவா என்ன தான் சத்தியம் செய்தாலும்,ஆரதனாவை மறப்பது மிக கடினமாக இருந்தது.அவள் எப்போது தனக்குள் புகுந்தாள் ஏன் அவனால் வேறு ஒரு பெண்ணை மனதால் நினைக்க கூட முடியவில்லை என்று அவனுக்கு புரியவே இல்லை.அவள் நினைவு தீரா வலியை தந்தாலும் அவளை பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பது சுகமாக தான் இருந்தது.
ஒரு மாதம் கடந்துவிட்டது.அவள் அதே ஊரில் இருந்தும் அவளை பார்க்க முடியவில்லை பேச முடியவில்லை.ஒரு முறை மட்டும் அவளை தன் கணவனோடு ஒரு துணி கடையில் பார்த்தான்.பேச வேண்டும் என்று தோன்றியது பின் அவன் சத்தியம் செய்து கொடுத்தது நியாபகத்துக்கு வர.அங்கு இருந்து விரைவாக வெளியேரினான்.
அவளோடு பகிர்ந்து கொண்ட அந்த பசுமையான நினைவுகளை யோசித்து பார்த்தான்.
ஒரு முறை labயில் 6 பெர் கொண்ட அணிகளாக பிரித்துக் கொண்டு இருந்தார்கள்.அன்று ஆரதனா கல்லூரிக்கு வரவில்லை.மறுநாள் வந்த போது அவளை கடைசி அணியான சிவாவின் அணியில் சேர சொன்னார்கள்.முதலில் தயங்கிய அவள் பின் ஒற்றுக் கொண்டாள்.கொஞ்ச கொஞ்சமாக இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.எங்கெ சென்றாலும் சிவா பிரபு ஆரதனா மற்றும் லாவன்யா என்னும் சக தோழி ஒன்றாகவே சென்றனர்.
ஒரு முறை அதே வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் ஆரதனாவுக்கு காதல் கடிதம் குடுத்தான்.
"சிவா இங்க பாரு",என்றாள் ஆரதனா மதியம் சாப்பாட்டின் போது.
சிவா பிரித்து படித்தன்.
அவனுக்கு மிகுந்த கோவம் வந்தது.
"என்ன அது",என்று கேட்டான் பிரபு.
"காதல் கடிதம்",என்றான் சிவா பல்லை கடித்துக் கொண்டு.
"யாரு டீ கொடுத்தா",என்றாள் லாவன்யா.
"பிரேம்",என்றாள் ஆரதனா.
"என்ன பதில் சொல்ல போர",என்றான் பிரபு.
"தெரியலை",என்றாள் ஆரதனா.
"நீயும் அவன காதலிக்குரீயா",என்றான் சிவா.
"இல்லை ஆன அவன் மனசு நோகாதபடி இல்லைனு சொல்லனும்.எதாவது யோசனை சொல்லுங்களேன்",என்றாள்
"எனக்கு ஆள் இருக்கு நு சொல்லீரு",என்றாள் லாவன்யா.
"அவனை வேண்டாம் நு சொல்ல என் பேரை நான் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்",என்றாள் ஆரதனா.
"காதல் எல்லாம் வேண்டாம் நம்ம ஃபிரஸா இருக்கலாம் நு சொல்லு",என்றான் பிரபு.
"வேற வினையே வேணடாம்.",என்றாள்
"என்ன சிவா அமைதியா இருக்க",என்றாள் ஆரதனா.
"நீ என்ன சொல்லனும் நு நினைக்கறியோ அதை தெளிவா சொல்லு.வீண் நம்பிக்கை கொடுகாதே",என்றான் சிவா.
அப்போது பிரேம் வந்தான்.
"ஆரதனா உன்கூட கொஞ்சம் பேசனும",என்றான்.
அவள் எழுந்து சிறிது தூரம் சென்றாள்.
சிவா பிரபு லாவன்யா அவர்களை பார்த்தார்கள்.
இருவரும் பேசஆரம்பித்தனர்.திடீர் என்று ஆரதன கத்தினாள்.மூவரும் திடுக்கிட்டு அவர்களை பார்த்தார்கள்.
பிரேம் கையில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது.மற்றோரு கையில் இருந்த கத்தியை வைத்து ஆரதனாவை மிரட்டிக் கொண்டு இருந்தான்.
சிவா அழுந்து ஓடினான்.பிரபு பிரேமை பின்னால் இருந்து பிடித்துக் கொண்டான்.
சிவா அவன் கையில் இருந்த கத்தியை மெதுவாக வாங்கினான்.பின் அவனை பலார் என்று அறைந்தான்.
"ஒரு பொன்னு உன்ன வேண்டாம் நு சொன்னா கையை அருத்துக்குவியா.ஏன் நல்லதா எதும் பன்னி அவளை காதலிக்க வைக்க மாட்டியா.போ டா போயி காயத்துக்கு மருந்து போடு.பிரபு அவன கூட்டிகிட்டு போ டா",என்றான் சிவா கோவமாக.
ஆரதனாவை மீண்டும் அவர்கள் இருக்கைக்கு கூட்டிக் கொண்டு வந்தான்.அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தாள்.அவள் கையை பற்றி சமாதானம் செய்தான்.அவள் அவன் தோள் மீது சாய்ந்தாள்.
அப்போதே சிவாவுக்கு முதல் முறையாக அவள் மீது காதல் மலர்ந்தது.அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்று அவனுக்கு தோன்றியது.

STAI LEGGENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Saggisticaகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...