மறுநாள் சென்று பார்த்தாள்.ஆனால் மறுநாளும் அய்யா வரவில்லை.வேறு வழி இல்லாமல் பண தேவைக்காக கூலி வேலையில் சேர்ந்தாள்.காலை முதல் மாலை வரை நாத்து நடுவடு
களை பறிப்பது போன்ற கூலி வேலைகளை செய்தாள்.முதலில் கடினமாக இருந்தாலும் அந்த இயற்கை சூழலில் மற்ற பெண்களோடு வேலை செய்வது அவளுக்கு பிடித்துப் போனது.மாலை அனைவருக்கும் தின கூலி தரப்பட்டது.அவள் அதை வாங்கிக் கொண்டாள்.தனது முதல் சம்பளம் என்று நினைக்கும் போது பெருமிதம் கொண்டாள்.அதை கொண்டு ரக் ஷிதாவுக்கும் அவளுக்கும் உணவு வாங்கிக் கொண்டாள்.மிச்சம் இருந்த பணத்தை வீட்டுக்கார பாட்டியிடம் கொடுத்து கூடிய சீக்கிரமே வாடகையை முழுமையாக தருவேன் என்று கூறினாள்.
இப்படியே சில நாட்கள் சென்றது.அய்யா ஊருக்கு வந்த பிறகு தன்னை பற்றி கூறி வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்று இருந்தாள் ஆனால் அவர் வருவதற்குள் அவளுக்கு இந்த வேலையே பிடித்து போக அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.இந்த வறுமையான வாழ்க்கையிலும் ஒரு வித நிம்மதி அவளுக்கு கிடைத்தது.
ஒரு வாரம் கடந்து போனது.வீட்டில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது அவள் பையில் இருந்து போன் கீழே விழுந்தது.மிகுந்த யோசனைக்கு பின் அதை எடுத்து ஆன் செய்தாள்.
சிவா பிரபு அவள் அப்பா அம்மா மாமியார் மாமனார் என்று அனைவர் இடத்திடம் இருந்தும் போன் வந்து இருந்தது.மாமியாரோடு இனி பேச போவதில்லை என்று முடிவு செய்தாள்.டன் அப்பா அம்மா அவளை பற்றி வருந்துவார்கள் என்று அவர்கள் எண்ணுக்கு அழைத்தாள்.
"ஹலோ",என்றார் அப்பா.
"அப்பா",என்றாள் கலங்கிய கண்களோடு.
"ஆரதனா எங்கே மா போன.உன் மாமனார் மாமியார் இங்கே வந்து என்னன்னமோ சொல்லுராங்க.எங்க இருக்க இப்போ",என்றார்.
"அப்பா நான் நல்லா இருக்கேன்.வேற ஊருல இருக்கேன்.வேலை பார்த்துகிட்டு இருக்கேன்.முக்கியமா நிம்மதியா இருக்கேன்",என்றாள்.
"நீ ஏன் மா எங்கயோ போகனும்.இங்க வந்து இருக்கலாமே",என்றார்.
"அப்பா ஒரு சில பிரச்சனைகள்.நான் அங்கே வந்த அங்கேயும் என்னை துரத்தும்.இப்போதைக்கு நான் இருக்கும் இடம் யாருக்கும் தெரிய வேண்டாம்.நான் நல்லா இருக்கேன்.உங்ககிட்ட அடிக்கடி பேசுரேன்.அம்மாகிட்ட அப்புறம் பேசுறேன்.கவலை பட வேண்டாம் நு சொல்லுங்க",என்றாள்.
"சிவா உன்னை பற்றி கேட்டான்",என்றார்.
அவன் பெயரை கேட்டவுடன் அவள் மனம் லேசானது.ஒரு வித மகிழ்ச்சி தோன்றி உடனே மறைந்தது.அவன்கிட்ட நான் இருக்கும் இடம் பற்றியும் நான் உங்களிடம் பேசியதை பற்றியும் சொல்ல வேண்டாம்.நான் நிம்மதியாக இருக்க ஆசை படுறேன்",என்றாள்.
"இப்போ உன் நிம்மதிக்கு என்ன குரச்சல்.வந்துரு மா எங்ககிட்ட",என்றார் அப்பா.
"கூடிய சீக்கிரம் வந்து விடுவேன் அப்பா.அது வரைக்கும் பொறுமையா இருங்க",என்றாள்.
அவர் மனம் இல்லாமல் போனை வைத்தார்.பேசி முடித்த பிறகு அவள் போனில் இருக்கும் வால் பேப்பரை பார்த்தாள்.அவளும் சிவாவும் எடுத்த செஃபி இருந்தது.இருவரும் ஊட்டி சென்ற போது எடுத்த புகைப்படம் அது.அந்த நாளை நினைத்துக் கொண்டாள்.
"ஆரதனா வா நம்ம ஒரு செல்ஃபி எடுத்துகலாம்",என்றான் சிவா.
அவள் அருகில் வந்து அமர்ந்தான்.பின் போனை பார்த்தான்.
"ஆரு மா இன்னும் கிட்ட வந்த தான் நீ ஃபிரேம் குள்ள வருவ",என்றான்.
அவள் நெருக்கமாக அமர்ந்தாள்.
ஒரு புகைப்படம் எடுத்தார்கள்.
"ஆரதனா இது நல்லாவே வரலை இன்னும் கிட்ட வா",என்றான்.
அவள் அவனை பார்த்து முறைத்தாள்.
"இருவரின் கணங்கள் இடிக்கும் வரை நெருங்கியாச்சு இன்னும் எப்படி டா பக்கத்துல வரது ",என்றாள்.
அவன் குறும்பாக சிரித்தான்.புகைப்படம் எடுத்த பின் அவள் கன்னத்தில் சற்றென்று முத்தமிட்டான்.அவள் அதிர்ச்சி ஆனாள் பின் அவனை அடிக்க துரத்தினாள்.
"நீ கிட்ட வா நு சொல்லும் போதே நான் சந்தேகபட்டேன் டா.திருட்டு ராஸ்கல்",என்றாள்.
"ஏய் என்ன வருங்கால கணவன இப்படி திட்டுர",என்றான்.
"இதுக்கு மேலையும் திட்டுவேன் நீ பன்ன வேலைக்கு",என்றாள்.
"சரி இந்த போட்டோவை நான் வால் பேபரா வைக்க போறேன்",என்றான்.
"ஏன்",என்றாள்.
"எப்போதும் உன்னை பார்த்துகிட்டே இருக்கனும்",என்றான்.
"நீயும் வை",என்றான்.
"எனக்கு உன்ன பார்த்துகிட்டே இருக்கனும் நு தோனாது",என்றாள் குறும்பாக.
அவன் செல்லமாக கோவித்துக் கொண்டான்.
"சரி என் தலை எழுத்து வைக்குறேன்",என்று கூறி வைத்தாள்.அதை இப்போது பார்க்க பார்க்க அவளுக்கு அழுகை வந்தது.
அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவனிடம் இருந்து போன் வந்தது.
திடுக்கிட்டாள்.
எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.போன் கட் ஆனது.மீண்டும் அவன் போன் செய்தான்.எதுத்து ஆன் செய்தாள்.
"ஆரதனா எங்க இருக்க ஆரு",என்றான்.
அவன் குரலை கேட்டு அவள் உடம்பு நடுங்கியது.கண்கள் கலங்கின.அவன் அருகில் இருக்க வேண்டும் போல் இருந்தது.ஒரு வித வலி மனதில் தோன்றியது.
சற்று என்று அவனுக்கு நிச்சயம் ஆனது அவள் நினைவுக்கு வர போனை கட் செய்தாள் பின் போனை ஆஃப் செய்து பையில் போட்டாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...