ஒரு வாரம் கடந்தது.சிவா முதல் கிராமத்துக்கு புறப்பட்டான்.பிரபு அவனுடன் சென்றான்.
இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்கினர்.
இந்த கிராமம் வறண்டு இருந்தது.பச்சை வயல்களும் இல்லை குழந்தைகள் விளையாட நீர் வரப்பு இல்லை.
"டேய் இந்த படங்கள்ல எல்லாம் கிராமம் இப்படி தான் நு காட்டி ஏமாற்றராங்க டா",என்றான் பிரபு.
"ஆமா டா இது ஏதோ பாலைவனம் மாதிரி இருக்கு",என்றான் சிவா.
"இங்க ஆரதனா இருப்பா நு எனக்கு நம்பிக்கை இல்லை",என்றான் பிரபு.
"பாலைவனத்தில் ஒரு சோலையா இருப்பா டா",என்றான் சிவா.
"அய்யோ இவன் தொல்லை தாங்க முடியலையே",என்றான் பிரபு.
இருவரும் நடந்து சென்றனர்.
தண்ணீர் தாகம் எடுக்கவே ஒரு வீட்டின் அருகே நின்றார்கள்.
"அம்மா அம்மா",என்றான் பிரபு.
"நம்மல பிச்சைகாரனாவே ஆக்கீட்டாங்க டா",என்றான் சிவா.
வெளியே ஒரு இளம் பெண் வந்தாள்.பாரதிராஜா படத்தில் வரும் கதாநாயகி போல பாவாடை தாவணி.தலையில் மல்லிகை பூ.கை நிறைய வலையல் என பொன்னுக்கே உரிய குணங்களோடு அழகாக இருந்தாள்.
பிரபு அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.
"யார் நீங்க",என்றாள்.
பிரபுவுக்கு ஒரு இனிய இசை மட்டுமே கேட்டது.
"நாங்க இங்க ஒருத்தர் தேடி வந்து இருக்கோம்.தாகமாக் இருக்கு தண்ணீர் தர முடியுமா",என்றான் சிவா.
"சரி இருங்க",என்று கூறி உள்ளே நுழைந்தாள்.
"நீ சொன்னது சரி தான்",என்றான் பிரபு.
"என்ன",என்றான் சிவா.
"பாலைவனத்தில் ஒரு பூஞ்சோலை",என்றான் பிரபு.
தண்ணீர் சொம்பை அவள் கொண்டு வந்தாள்.சிவாவை முந்திக் கொண்டு வாங்கினான் பிரபு.அவள் கை அவன் மீது படவே அவன் உடம்பு சிலிர்தது.இளையராஜாவின் பின்னனி இசை ஒலித்தது.
வாங்கி குடித்தான்.
"இந்த பொன்ன இங்க பார்த்து இருக்கீங்களா",என்றான் சிவா போனில் இருக்கும் புகைப்படத்தை காட்டி.
அவள் அதை உற்று பார்த்துவிட்டு,"தெரியாதுங்க",என்றாள்.
"நீங்க என்ன பன்னரீங்க",என்றான் பிரபு.
"நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்",என்றாள்."அப்படியா உங்க பேரு என்ன",என்றான் பிரபு.
"போதும் வா டா.என் லவ கெடுத்துட்டு இப்போ நீ டெவலப் பன்ன பாக்குறியா",என்று கூறி சிவா அவனை இழுத்து சென்றான்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஏதோ குரல் கேட்க இருவரும் திரும்பினார்கள்.
"என்னங்க என் பேரு துலசி",என்று கத்தினாள்.
பிரபு அவளை பார்த்து சிரித்தான்.
"உங்கள மாதிரியே உங்க பேரும் அழகா இருக்கு",என்று கட்தினான்.
அவள் வெட்கத்தில் முகம் மலர்ந்தாள்.
சிவா அவனை இழுத்து சென்றான்.ஆரதனா மதிய உணவுக்காக
வீடு திறும்பிக் கொண்டு இருந்தாள்.
ஷங்கர் அவன் நண்பனோடு எதிரில் வந்தான்.
"வணக்கம் டீச்சர்",என்றான்.
"வணக்கம் சார்",என்றாள்.
"புது வீடு சௌகரியமா இருக்கா",என்றான்.
"ரொம்ப சௌகரியமா இருக்கு சார்.ரொம்ப நன்றி சார்",என்றாள்.
"எங்க ரக் ஷிதாவ காணம்",என்றான்.
"பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்து இருக்கேன்",என்றாள்.
"ஓ சரிங்க டீச்சர்.நீங்க போங்க",என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
இவர்களை பார்த்துக் கொண்டு இருந்தான் நண்பன்.
"என்ன டா நடக்குது",என்றான்.
"என்ன டா",என்றான் ஷங்கர்.
"நீ டீச்சர் நு உருகரதும் அந்த பொன்னு சார் சார் நு ஆசையா பேசரதும்.என்ன டா நடக்குது",என்றான்.
ஷங்கர் வெட்கபட்டான்.
"எனக்கு அவங்கள புடிச்சு இருக்கு டா.கல்யாணம் பன்னிக்க ஆசை படுறேன்",என்றான்.
"டேய் உனக்கு என்ன பைத்தியமா புடிச்சு இருக்கு",என்றான் நண்பன்.
"ஏன் டா",என்றான் ஷங்கர்.
"உங்க அப்பா எவ்வளவு பெரிய பணக்காரர்.உனக்கு எப்படிபட்ட பொன்ன பார்ப்பாரு நீ கல்யாணம் ஆகி குழந்தை இருக்க பொன்ன போய் ஆசை படுர",என்றான்.
"இவள கல்யாணம் பன்னா உனக்கு என்ன கிடைக்கும்.அவசரபடாத டா",என்றான் நண்பன்.
"அப்படியா சொல்லுர ஆனா அவள புடிச்சு இருக்கு டா.அவள பார்த்தாளே மனசு ஏதோ செய்யுது",என்றான்.
"அவ்வளவு ஆசையா இருந்தா ஓரமா வச்சுக்கோ ஆன கல்யாணம் வேண்டாம்.கருகல்ல போயிட்டு விடியரதுக்குள்ள வந்துரு",என்றான்.
"எல்லாம் சரி தான்.அவ ஒத்துக்குவாளா",என்றான் ஷங்கர்.
"கொஞ்ச கொஞ்சமா பேசி பாரு.தனியா இருக்கா.பண தேவை கண்டிப்பா இருக்கும்.மசிஞ்சாலும் மசியும்",என்றான்.
"சரி பேசி பார்க்குறேன்",என்றான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...