மறுநாள் கல்லூரியில் பேராசிரீயர் அனைவரிடமும் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்.
ஒருவனை அழைத்தார்.
"இங்க வா டா.எத்தனை பிஸ்கட் பாக்கெட் விற்று இருக்க",என்றார்.
"சார் நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.இனிமேல் தான் விற்கனும்",என்றான்.
நீ வா என்று பிரபுவை அழைத்தார்.
"நீ நேற்று எங்க இருந்த",என்றார்.
"சார் நேற்று எனக்கு காய்ச்சல்.சிவா தான் என்னை டாக்டர்கிட்ட கூட்டீட்டு போனான்.அப்புறம் எங்க ரூம் கு வந்து நான் தூங்கீட்டேன்",என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
"மருந்து வாங்குன ரசீது வேனா காட்டட்டுமா",என்றான்.
"வேண்டாம் போ.எவனோ ஒருத்தன் பொய் சொல்லி என் வீட்டில் பிஸ்கட் விற்றுவிட்டு போயி இருக்கான்.எவன் நு நீங்களே சொல்லீருங்க.நான் கண்டு புடிச்சேன் இன்டெர்னல் மார்க ஜீரோ தான் போடுவேன்",என்றார்.
அனைவரும் அமைதியாக இருந்தனர்.சிவா பயத்தில் எச்சல் விழுங்கினான்.பிரபு அலட்சியமாக அவரை பார்த்தான்.
பதில் எதுவும் வராததால அவர் கோவமாக வெளியேரினார்.
அவர் சென்ற பிறகு சிவா பிரபு பக்கத்தில் வந்தான்.
"டேய் கண்டுபுடிச்சுருவாரா எனக்கு பயமா இருக்கு டா",என்றான்.
"தேடி அலையட்டும்.தெரு தெருவா அலையாவிட்டாருல.பாத்துகுலாம் விடு",என்றான் பிரபு.***********
மாலையில் சிவா தன் அறை ஜன்னல் வழியாக வெளியே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தான்."டேய் நானும் நேற்றுல இருந்து பார்க்குறேன் நீ என்னவோ போல இருக்க.என்ன விசயம்",என்றான் பிரபு.
"நான் எப்பவும் போல தான் இருக்கேன் டா",என்றான் சிவா.
"எனக்கு தெரியாதா உன்னை பற்றி.என்னானு சொல்லு",என்றான் பிரபு.
சிவா மிகு்ந்த யோசனைக்கு பிறகு "நேற்று ஆரதனாவை பார்த்தேன்",என்றான்.
பிரபு திகைத்து போனான்.
"எங்க எப்போ",என்றான் அதிர்ச்சியாக.
சிவா நடந்ததை கூறினான்.
"சரி அவள் சந்தோஷமாக தன் குடும்பத்தோடு வாழ்கிறாள்.இப்போ நீ ஏன் ஒரு மாதிரி இருக்க",என்றான் பிரபு.
"அது நான் வாழ ஆசைப்பட்ட வாழ்கை டா.என்னால அவள மறக்கவும் முடியலை அவள வேறு ஒருத்தனோடு பார்க்கவும் முடியல",என்றான் சிவா.
"அப்போ பார்க்காத",என்றான் பிரபு.
சிவா அமைதியாக இருந்தான்.
"நீ நினைச்சுகிட்டு இருக்கரது இன்னுர்தன் மனைவியை.உனக்கு அது புரியுதா இல்லையா.அவளுக்கு இப்போ ஒரு குழந்தையும் இருக்கு.அவ கூட வாழ வேண்டும் என்று நீ இன்னும் நினைப்பது எனக்கு அறுவருப்பா இருக்கு ",என்றான்.
"நான் அவளை அடையனும் நு நினைக்கலை.அவளோடு இப்போது நான் வாழ்ந்தால் நல்லா இருக்கும் நு தான் ஆசைபபடுறேன்.அது நடக்காதுனு எனக்கும் தெரியும்",என்றான் சிவா.
"நடக்காதுனு தெரியுது ல அப்புறம் என்ன.......எதுக்கு ஆசைபடுர",என்றான் பிரபு.
சிவா பதில் எதுவும் சொல்லவில்லை.
"நீ போர பாதை சரி இல்லை.இனி அவ இருக்குர பக்கமே போக மாட்டேன்.அவளை பார்க்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பன்னிக் குடு.இல்லாட்டீ உனக்கு ஒரு நண்பன் இருக்காங்கரத மறந்துரு",என்றான் பிரபு.
சிறிது நேரம் கழித்து பிரபு அருகில் வந்தான் சிவா.
அவன் கை மீது தனது கையை வைத்து "இனி அவளை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன்.அவளை மறக்க தீவிரமாக முயற்சி செய்வேன்.இது சத்தியம்",என்றான்.
பிரபு அவனை கட்டி அனைத்துக் கொண்டான்.

YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...