"எங்க டா போன",என்றான் பிரபு கோவமாக.
"சும்மா பைக்குல ஒரு ரவுன்டு போனேன்.வர வழியில டிராஃபிக் டா",என்றான் சிவா.
"எத்தன வாட்டி போன் பன்னனேன் தெரியுமா.உனக்கு ஏதோ ஆயிருச்சுன்னு பயந்துடேன்",என்றான்.
"எனக்கு என்ன டா ஆக போகுது",என்றான் சிவா.
"ஏன் டா இந்த நேரத்துல வெளிய போயிருக்க போனும் எடுக்கல.என்னனு நான் நினைக்குறது",என்றான் பிரபு.
"நீ சும்மா பயப்படுர அதல்லாம் ஒன்றும் ஆகாது போய் தூங்கு ",என்று கூறிவிட்டு சிவா தன் படுக்கைக்கு போனான்.
பிரபு அவனை வினோதமாக பார்த்தான்.இவனுக்கு என்ன ஆனது.எங்கே போய்விட்டு வந்து தன்னிடம் பொய் சொல்கிறான் என்று குழம்பினான்.எனினும் நல்லது நடந்தால் போதும் என்று நினைத்தான்.சிவா கண்களை மூடிக் கொண்டு நடந்ததை நினைத்துக் கொண்டான்.
அவன் இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தன.அன்று அவன் நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் காலையில் எழுந்து தன் போனை எடுத்து பார்த்தான்.ஒரு புது நம்பர்ல இருந்து குருங் செய்தி வந்து இருந்தது.எடுத்து பார்த்தான்.
அதில் குட் மார்னிங் என்று அனுப்பப்பட்டது.சற்று உற்று பார்த்த போது தான் அது ஆரதனாவின் நம்பர் என்று அவனுக்கு நினைவு வந்தது.
தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு இருந்தான்.
"என்ன டா லூசு மாதிரி முழிச்சோனதுமே போன பார்த்து சிரிச்சுகிட்டு இருக்க",என்றான் பிரபு.
சிவா அவனை கட்டி அனைத்து முத்தமிட்டு சிரித்துக் கொண்டே வெளியே சென்றான்.
பிரபு அவனை பார்த்து குழம்பி போனான்.ஆரதனாவுகும் சிவாவுக்கும் மீண்டும் நல்ல நட்பு மலர்ந்தது.பிரவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது ஆனாலும் சமாளித்தான்.
ஒரு நாள் இருவரும் வெளியே சென்று இருந்தனர்.அது ஒரு பூங்கா. ரக் ஷிதா புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர்.கல்லூரி நினைவுகளை எல்லாம் பேசிக் கொண்டு இருந்தனர்.
திடீர் என்று சிவாவுக்கு அவள் பிறந்த நாள் நினைவுக்கு வந்தது.கேட்களாம வேண்டாம என்று குழம்பிக் கொண்டு இருந்தான்.சற்று என்று "உன் பிறந்த நாள் அன்னிக்கு நான் குடுத்த கார்டை பார்த்தையா.எனக்கு என்ன குறை ஏன் என்ன வேண்டாம் நு சொல்லீட்ட",என்றான்.
அவள் திடுக்கிட்டாள்.
"நீ எதை பற்றி கேட்குரனே எனக்கு தெரியல",என்றாள்.
"உன் பிறந்த நாள் அன்னிக்கு நான் குடுத்த வாழ்த்து அட்டைய நீ பார்த்தையா இல்லையா",என்றான்.
"பார்க்கலை",என்றாள்.
சிவா அதிர்ச்சியில் உறைந்து போனான்.
"ஏன் பார்க்கலை",என்றான்.
"அது....... அது வந்து துலைந்து விட்டது ",என்றாள் தயக்கமாக.
சிவாவுக்கு தலை சுற்றியது .
தான் இது நாள் வரை அவளை நினைத்து உருகியது.அவள் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்று இது நாள் வரை நொந்து போனது எல்லாம் வீண் என்று நினைக்கும் போது அவனுக்கு எரிச்சல் வந்தது.வெளிபடையாக பேசாதது தான் இது எல்லாதுக்கும் காரணம் என்று புரிந்து கொண்டான்.இனியாவது அவளிடம் வெளிபடையாக பேச வேண்டும் என்று எண்ணினான்."சொல்லு சிவா நீ என்ன சொல்ல வர.அதுல என்ன இருந்தது.நான் உன்னை வேண்டாம் நு சொன்னேனா",என்றாள். குழப்பமாக.
சிவா பெரு மூச்சுவிட்டேன்.
"கல்லூரியில் படிக்கும் போது நான் உன்னை காதலித்தேன்.உன்னிடம் அந்த காதலை சொல்ல தைரியம் இல்லாமல் ஒரு வாழ்த்து அட்டை மூலம் தெரிய படுத்தினேன்.ஆனால் என் கெட்ட நேரம் அதை நீ பார்க்கவே இல்லை.உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று நினைத்து வருந்தினேன். ஆனால் இப்போது கடவுள் என் பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.உண்மை காதல் தோற்று போகாது",என்றான்.அவன் அவள் பதிலை எதிர்பார்த்து அவளை திரும்பி பார்த்தான்.அவள் புல் வெளியில் விளையாடிக் கொண்டு இருந்த ரக் ஷிதாவை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"ஆரதனா",என்றான் ஆனால் அவளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அவள் கையை தொட்டான்.அவள் அவனை நெருப்பாக பார்த்தாள்.அவள் பார்வையின் உஷ்னம் தாங்காமல் அவன் கையை எடுத்தான்.
"என் நிலைமை உனக்கு சந்தோஷத்தை தருதுல.என் கணவனை இழந்து கை குழந்தையோட கஷ்ட படுறது கடவுள் உனக்கு சாதகமாக கொடுத்த முடிவு அப்படி தான",என்றாள் கோவமாக.ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
சிவா அவள் பின்னால் ஓடினான்.
"ஆரதனா நில்லு",என்று அவள் கையை பற்றி இழுத்தான்.
"நில்லு எதுக்கு இப்போ கோவப்படுர",என்றான் சிவா.
"இப்போ என்ன சொல்ல வர அப்போ சேராத நம்ம காதல் இப்போ சேரனும் நா.ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ அப்பொவும் சரி இப்பொவும் சரி உன்னை நான் ஒரு நல்ல நண்பனா தான் நினைக்குறேன்.தப்பான எண்ணத்தோட என்னை நெருங்க நினைச்ச.உன்னை பார்க்கவே எனக்கு புடிக்கலை",என்று கூறி வேகமாக நடந்தாள்.
அவளை கனத்த இதயதோடு அவளை பார்த்தான்.

ESTÁS LEYENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
No Ficciónகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...