சில வரங்களுக்கு பிறகு திடீர் என்று சிவாவின் அப்பாவும் அம்மாவும் சிவா வை பார்க்க வந்தார்கள்.
"வாங்க பா வாங்க மா.உட்காருங்க",என்றான் பிரபு.
"என்னப்பா நல்லா இருக்கியா.படிப்பு எல்லாம் எப்படி போகுது",என்றார்.
"படிப்பு அது பாட்டுக்கு போயிட்டு இருக்க நான் என் பாட்டுக்கு வேற பக்கம் போயிட்டு இருக்கேன் அப்பா",என்றான் கேலியாக.
"சிவா எங்க பா",என்றார்.
"இங்க தான் பா இருந்தான்.எங்கனு தெரியலை.இருங்க போன் பன்னுறென்",என்றான்.
சிவாவுக்கு தகவல் சொன்னான்.
"என்ன அப்பா திடீருனு வந்து இருக்கீங்க",என்றான் பிரபு.
"பொன்னுக்கு நிச்சய புடவை எடுக்கனும் அப்படியே சிவாவுக்கும் எடுத்தரலாம்னு வந்தோம்",என்றார்.
"ஓ அப்படியா யாருக்கு பா நிச்சயம்",என்றான் பிரபு.
"சிவா கு தான் பா.அவன் எதுவுமே சொல்லலையா",என்றார்.
பிரபு திடுக்கிட்டான்.
"என்ன நான் சொல்லலை.வாங்க பா வாங்க பா",என்று கூறிக் கொண்டே உள்ளே வந்தான் சிவா.
"உனக்கு பொன்னு பார்த்தத சொல்லலையா பா",என்றார்.
சிவா அதிர்ந்து போனான்.அவன் அதை மறந்தே போனான்.
பிரபு அவனை பார்த்து முறைத்தான்.
"இல்.......லபா நான் சொல்லலை",என்றான்.
"உனக்கு நிச்சயம் ஆக போரதையும் நீ சொல்லவே இல்லையே டா",என்றான் பிரபு கடுப்பாக.
"நிச்சயமா என்ன பா சொல்லுறான்",என்றான் சிவா.
"ஆமா பா அன்னிக்கு சரி நு சொன்னியே அந்த பொன்னு கூட தான்",என்றார்.
சிவா அதிர்ந்த் போனான்.
"அப்பா அதுக்குள்ள ஏன் பா.அவன் இன்னும் படிப்பை கூட முடிக்கலை.வேலை கூட இல்லை",என்றான் பிரபு.
"இல்ல பா நாங்க கட்டாய படுத்தல தம்பி தான் போன வாட்டி ஊருக்கு வந்தப்போ ஒத்துகிச்சு அதனால தான் நாங்க பொன்னு வீட்டுல பேசினோம்.போன வாரம் பொன்னோட அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துருச்சு.அதனால சீக்கிரம் நிச்சயம் வச்சுகலாம் நு நினைக்கராரு.நமக்கும் அது நல்லது தான.அதான் ஒத்துகிட்டோம்",என்றார்.
"என்ன கேட்காம ஏன் ஒத்துகிட்டீங்க",என்றான் சிவா.
"நீ தான் ஏற்கனவே ஒத்துகிட்டயே டா.உன் சம்மதத்தோட தான் எல்லாம் நடக்குது",என்றான் பிரபு.
"அய்யோ அப்போ நான் வேற மன நிலைமைல இருந்தேன்" ,என்றான்.
"ஆனா ஒத்துகிட்ட.இது ஒரு பொனோட வாழ்கை.உன் மன நிலை பொறுத்து மாத்திக்க முடியாது",என்றார் அப்பா.
"அவன விடுங்க அப்போ.எப்போ நிச்சயம்",என்றான் பிரபு.
"அடுத்த வாரம் வெள்ளி கிழமை",என்றார் அப்பா.
"நான் கூட்டீட்டு வரேன்.நீங்க கவலை படமா போங்க அப்பா",என்றான் பிரபு.
"சரி பா நான் வறேன்",என்று கூறி கிளம்பினார்கள்."எதுக்கு டா என்ன கேட்காம வாக்கு குடுக்குர.நான் போக மாட்டேன்",என்றான் சிவா.
"நீ போகாட்டி அங்க ஒரு சாவு விழும்.ஏற்கனவே பொன்னோட அப்பாவுக்கு நெஞ்சு வலி.நீ போகாம அவர சாகடிச்சுராத",என்றான் பிரபு.
"அதுக்காக நான் என் வாழ்கைய தியாகம் செய்ய முடியுமா",என்றான் சிவா.
"பின்ன என்ன வெங்காயத்துக்கு ஒத்துகிட்ட",என்றான் பிரபு.
"அய்யோ பிரபு என்ன புரிஞ்சுகோ டா.ஆரதனா என்னை காதலிப்பா நு நான் நினைக்கவே இல்லை டா",என்றான்.
"உன்கிட்ட எத்தனையோ தடவை சொல்லீட்டேன்.அவ வாழ்க்கைல தலையிடாத அவள நிம்மதியா வாழ விடுனு.கேட்டயா",என்றான் பிரபு.
"டேய் என்னால அவள மறக்க முடியல டா",என்றான் சிவா.
"நடிக்காத டா.இதல்லாம் இப்படி தான் முடியும் என்று உனக்கு தெரியாதா.ஒரு பொன்னுக்கு சரி நு சொல்லீட்டு வந்து இன்னூர்தி கூட டூர் போயிருக்க.என்ன அவ கதைய அங்க முடிசுட்டியா.இப்போ நிச்சயத்துக்கு ரெடி ஆயிட்ட",என்றான் பிரபு.
சிவா கோவமாக அவன் சட்டையை பிடித்தான்.
"கைய எடு டா.நான் சொன்னது எது பொய் நு சொல்லு பார்ப்போம்.உங்கள பத்தி எல்லாம் எனக்கு தெரியாதா",என்றான் பிரபு.
"நான் நிச்சயத்தை நிறுத்த போறேன்",என்றான் சிவா.
"அப்படியே மூணு பேருக்கு கொல்லி வச்சுட்டு வந்துரு",என்றான் பிரபு.
"என்ன சொல்லுர",என்றான் சிவா திகைப்பாக.
"பொன்னோட அப்பா நிச்சயம் நின்னா நெஞ்ச புடிச்சுட்டு விழு்ந்துருவாரு.அதை பார்த்த உங்க அப்பா இந்த நிலைமைக்கு நாம்ம தன காரணம் நு அவரும் உங்க அம்மாவும் அவமானம் தாங்க முடியாம எதாவது பன்னிக்குவாங்க.மூணு பேருக்கும் கொல்லி வச்சுட்டு இங்க வா.உன்ன கஷ்டபட்டு வளர்த்த உன் அப்பா அம்மாவுக்கு நீ செய்யுர நன்றி கடன் இது தான்",என்றான் பிரபு.
சிவா நொந்து போய் கட்டிலில் அமர்ந்தான்.
"இப்போ நான் என்ன டா பன்னரது",என்றான்.
"நீ செஞ்ச தப்ப நீ தான் பரிகாரம் செய்யனும்.உனக்கும் ஆரதனாவுக்கும் இருக்கும் காதல் யாருக்கும் தெரியாது ஆன இது அப்படி இல்ல.இரண்டு குடும்பம் சம்மந்தபட்டது.உன் அப்பா அம்மா மானம் இதுல அடங்கி இருக்கு.நாளை பின்ன எதுவும் பிரச்சணை நா அதே ஊருல இருக்க அவங்க தான் அதை சந்திக்கனும்.அதனால நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு",என்றான் பிரபு.
சிவாவுக்கு குழப்பமாக இருந்தது.நன்கு யோசித்து ஒரு முடிவு எடுத்தான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...