சில மாதங்கள் கடந்தன கல்லூரி வாழ்க்கையும் முடிந்தது ஆனாலும் அவளை மறப்பது கடினமானதாக இருந்தது.அவளை மறந்து வேறு திசையில் தன் கவனத்தை திருப்ப சிவா M.B.A. படிக்க முடிவு செய்தான்.அந்த ஊரிலேயே இருந்தால் அவ்ளை பார்க்க நேரிடும் என்று பயந்து வேறு ஊருக்கு சென்றான்.அவனோடு பிரபுவும் வந்தான்.
ஓர் ஆண்டு காலம் கடந்து போனது.ஒரு நாள் திடீரேன முகநூலில் அவள் திருமண புகைப்படத்தை பார்த்தான்.உடைந்து போனான்.இதயத்தை யாரோ கூர்மையான ஆயுதத்தால் காயபடுத்தியது போல் வலியை உணர்ந்தான்.பிரபு எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அன்று தான் முதல் முறையாக குடித்தான் சிவா.
"இவ்வளவு நாளா அவள நினைக்க கூடாதுன்னு இருந்தேன் டா.ஆனா எப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு நு பார்த்தேனோ என்னால தாங்கவே முடியல டா",என்று புலம்பினான்.
குடிக்கிறவன் கூட குடி பழக்கம் இல்லாதவன் உட்காரவே கூடாதுன்னு அன்னிக்கு தான் பிரபு தெறிந்து கொண்டான்.
எனினும் வேறு வழி இல்லாமல் இரவு முழுவதும் அவன் கதையை கேட்டான்.ஒரு வழியாக விதிந்தது.மறுபடியும் ஒரு முறை சிவா தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
"டேய் என்னை ஆள விடு டா.இராத்திரி பூராவும் இதே கதைய கேட்டு எனக்கு காதுல இரத்தம் வருது டா",என்றான் பிரபு.
ஒரு வழியாக சிவாவை சமாதானம் செய்து தூங்க வைத்துவிட்டு அவனும் உறங்கினான்.சில மாதங்கள் கடந்தன.பிரபுவும் சிவாவும் பல இடங்களுக்கு டூர் சென்றார்கள்.இந்த முறை சிவா ஊட்டியில் ஒரு காட்டுக்குள் இருந்த மர வீட்டுக்கு பிரபுவை அழைத்து சென்றான்.
பார்க்கவே மிக அழகாக இருந்தது.ஒரு மர கிளையில் கட்டப்பட்ட வீது அது.
கீழே இருந்து படி மூலம் மேலே சென்றனர்.மாடியில் ஒரு பெரிய அறை இருந்தது.இரு கட்டில்கள் மெத்தையோடு இருந்தன.
இரண்டு நாட்களுக்கு தேவையான சாப்பாடை கட்டிக் கொண்டு வந்து விட்டனர்.
"டேய் காட்டுக்குள்ள இருக்கே இங்க சிங்கல் புலி எதாவதி வருமா",என்று கேட்டான் பிரபு.
"அதல்லாம் இரவு நேரம் தான் வரும்",என்றான் சிவா.
பிரபு பயத்தில் எச்சல் முழுங்கினான்.
இருவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின் பக்கத்தில் இருந்த நீர் வீழ்ச்சிக்கு சென்றனர்.
பச்சை பசேல் என்னும் காடு.அங்கஙே கத்தும் பறவையின் சத்தம் குளித்து விளையாட ஒரு நீர் வீழ்ச்சி என இயற்கை நிரம்பி வழிந்தது.
இருவரும் நீரில் குளித்து விட்டு கரையோரம் அமர்ந்து இருந்தனர்.
"சிவா இது வரைக்கும் எத்தனையோ இடத்துக்கு டூர் பொயி இருக்கோம் ஆன இது தான் டா பெஸ்ட்.இதை எப்படி கண்டு புடிச்ச",என்று கேட்டான் பிரபு.
சிவா அவனை சோகமாக பார்த்து சிரித்தான்.
"இதல்லாம் ஆரதனாவை கல்யாணம் பன்னி கூட்டிகிட்டு வரனும் என்று நான் ஆசைப் பட்ட இடங்கள்.அவ இப்போ என்கூட இல்லை அதனால அவள் நினைவுகளோட நான் மட்டும் வந்து இருக்கிறேன",எனறான் சிவா .பிரபு வியப்பாய் அவனை பார்த்தான்."நீ இன்னும் அவளை மறக்கலையா டா"
சிவா அவனை பார்த்து சிரித்தான்.
"மறக்க முடியல டா.அவள் நினைவுகள் கொல்லுது டா.அவ கூட கனவுல வாழ்ந்துகிட்டு இருக்கேன் டா",என்றான் சிவா.
"தப்பு டா அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு டா.நீ இன்னும் அவள நினைக்குரது சரி இல்லை டா",என்றான் பிரபு வருத்தமாக.
"தெரியுது டா ஆனாலும் மறக்க முடியல டா.இப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு யார்கிட்டயும் ஏற்படல டா.பிரண்டா இருந்து பேசனதுனாலையோ என்னவோ பார்க்குர விஷயம் எல்லாம் அவளை நியாபக படுத்துதுடா",என்றான் சிவா தவிப்பாக.
"விடு மச்சி வேற ஒரு பொன்ன புடிக்குர வரைக்கும் அப்படி தான் இருக்கும்.அப்புறம் மெது மெதுவா அவள் நினைவு உனக்கு வராமல் போயிடும்",என்றான் பிரபு.
"வேற ஒரு பொன்னா",என்று கூறி சிரித்தான் சிவா.
"பார்ப்போம்",என்றான்.
எங்கே அவளை நினைத்து குடிகாரன் ஆகி விடுவானோ என்று பயந்த பிரபுவுக்கு இது ஆருதலாக இருந்தது.அந்த நாளுக்கு பிறகு சிவா குடிக்கவே இல்லை.மனம் நொந்து போகும் போதெல்லாம் எங்கேயாவது இருவரும் கிலம்பி சென்று இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள்.
அவன் வலியை காலம் தான் சரிபடுத்தும் என்று உறுதியாக நம்பினான் பிரபு.

أنت تقرأ
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
غير روائيகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...