அவன் சென்ற பிறகும் அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டு இருந்தது.அவன் கொடுத்த முத்தத்தை நினைக்கும் போது அவள் மனம் பதறியது.உடம்பு நடுங்கியது.சிறிது நேரம் கழித்து ரக் ஷித அழும் சத்தம் கேட்டது.உள்ளே சென்று அவளை சமாதானம் செய்தாள்.ரக் ஷிதாவை பற்றி அவன் சொன்னது அவள் காதில் ஒலித்தது.ரக் ஷிதாவுக்கு பாலை கலந்தாள் ஆனால் அவள் செய்யும் வேலையில் கவனம் செலுத்தவில்லை.மனம் அவன் சொன்னதை நினைத்துக் கொண்டே இருந்தாள்.
இரவு வேலைகள் அனைத்தயும் முடித்துவிட்டு தொலைகாட்சி முன் அமர்ந்தாள்.பல சிந்தனைகள் அவள் மனதில் ஓடியது.தன் கணவன் இறந்து 4 மாதம் தான் ஆனது அதற்க்குள் தனக்கு திருமண ஆசை வரலாம.அவளின் மாமனார் மாமியார் இதை எப்படி எடுத்துக் கொள்வர்.சிவா இங்கே அடிகடி வருவதை பக்கத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.அவள் போனை எடுத்து தன் கணவனோடு எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதில் அவளும் அவள் கணவனும் ரக் ஷிதா பிறந்த போது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.போனை மடியில் வைத்துக் கொண்டு தலையை சோபாவின் மேல் சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
திடீர் என்று ரக் ஷிதா "அப்பா அப்பா",என்று எதையோ பார்த்து சொல்லிக் கொண்டு இருந்தாள்.
ஆரதனா கண்களை திறந்து "அப்பா வா டா செல்லம்",என்று கூறி போனை எடுத்து பார்த்தாள்.
ஆனால் புகைபடத்தை பார்த்த போது அதிர்ச்சி ஆனால் அதில் சிவா சிரித்துக் கொண்டு இருந்தான்.அது அவன் அன்று இரவு வந்த போது எடுத்த புகைப்படம்.
அதே சமயம் தொலைகாட்சியில் இளயராஜாவின் காதல் பாடல் ஒலித்தது.ஆரதனா தன் உடதை தொட்டு பார்த்தாள்.சற்று வீங்கி இருந்தது.தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
*************
மறுநாள் காலையில் சிவா அவன் ஊருக்கு சென்றான்.அவன் பெற்றோர் அவனை பார்த்ததும் கண் கலங்கினர்.
"என்ன டா சொல்லிடோம் நு நீ 4மாசமா இந்த பக்கமே வரலை",என்றாள் அம்மா.
"மா வந்ததூமே ஆரம்பிக்காத",என்று எரிந்து விழுந்தான்.
"போ போய் பையனுக்கு வாயிக்கு ருசியா சமச்சு போடு.நான் மதியத்துக்கு கோழி வாங்கீட்டு வரேன்",என்றார் அப்பா.
சிவா குளித்துவிட்டு வெளியே சென்றான்.
சிறிது நேரம் கோவில் குளத்தின் அருகே அமர்ந்து இருந்தான். அவள் கூறியது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.என் மனம் மாறாது என்றாள்.அவள் வாழ்க்கையில் இனி நீ தலையிடாத.அவளை நிம்மதியாக வாழ விடு என்று பிரபு கூறியது நினைவுக்கு வந்தது.மகனாக தாம் தன் பெற்றோருக்கு எதுவுமெ செய்யவில்லை.அவர்கள் பேச்சையாவது இனி கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.மனம் அமைதி ஆனது.சரியாக சாப்பாடு நேரத்துக்கு வீட்டுக்கு சென்றான்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.அம்மா ஆசையாக பரிமாரினார்.அப்பா நிறய கோழி வை அவனுக்கு என்று கூறிக் கொண்டு இருந்தார்.திடீர் என்று வந்த அழுகையை அடக்க முடியாமல் ஒரு நிமிஷம் என்று கூறி எழுந்து சென்றான்.
பின் பக்கம் சென்று சத்தம் இல்லாமல் அழுதான்.இப்படிபட்ட பெற்றோரை காயபடுத்திவிட்டேனே என்று நினைத்து கூனி குறுகி போனான்.
முகத்தை கழுவிவிட்டு உள்ளே வந்தான்.
அப்பா யாரையோ வழுகட்டயமாக வெளியே செல்ல சொல்லிக் கொண்டு இருந்தார்.
"அவன் வந்தர போரான்.அப்புறம் வாங்க.ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் வந்து இருக்கான",என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
"யாரு பா இது.என்ன எனக்கு தெரிய கூடாது",என்றான் சிவா.
அப்பாவும் அம்மாவும் திரு திருவென முழித்தார்கள்.
"நான் வரன் பாக்குரவன் பா.உங்க அப்பா என்கிட்ட ஒரு நல்ல பொன்னா உனக்கு பார்க்க சொல்லி இருந்தார்.ஒரு நல்ல வரன் வந்து இருக்கு அதான் கொண்டு வந்தேன்",என்றார்.
"நாங்க சொல்லி 3 மாசம் இருக்கும் பா.நீ வேண்டாம் என்று சொன்னதுக்கு அப்புறம் நாங்க பார்க்கவே இல்லை",என்றாள் அம்மா அவசரமாக.
"உங்களுக்கு புடிச்சு இருந்தா முடிசுருங்க",என்று கூறி உள்ளே சென்றான்.10 நிமிடம் கழித்து அப்பா உள்ளே வந்தார்.ஒரு புகைப்படத்தை அவனிடம் தந்தார்.எங்களுக்கு திருப்தியா இருக்கு.உனக்கு புடிசிருக்கானு சொல்லு என்றார்.
"சரி இப்போ வந்து சாப்பிடு",என்றார்.
மூவரும் சந்தோசமாக பேசிக் கொண்டே சாப்பிட்டனர் .சிவா உள்ளுக்குள் குமறிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் முன் சந்தோஷமாக இருப்பதை போல் காட்டிக் கொண்டான்.
இரவு தனது அறைக்கு சென்றான்.அந்த புகைப்படம் தென்பட்டது.எடுத்து பார்த்தான்.அழகிய பெண் ஒருத்தி சிரித்துக் கொண்டு இருந்தாள்.புகைப்படத்தை திருப்பி பார்த்தான்.பிரியா
B.Sc Computer Science என்று எழுதி இருந்தது.
தனது பெற்றோர் வெளியே இருந்து கவனிப்பதை தெரிந்து கொண்டு புகைப்படத்தை பார்த்து சிரித்தான்.அவர்கள் சென்ற பிறகு புகைப்படத்தை மேசை மேல் வைத்தான்.சிரிப்பு கரரைந்து போனது.கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...