ஆரதனா இடுப்பில் இருந்த ரக் ஷிதா வேகமாக இறங்கி ஷங்கர் அருகில் சென்றாள்.அவன் காலை கடித்தாள்."ஆஆஆ",என்று அவன் வலியில் கத்தி ரக் ஷிதாவை தள்ளி விட்டான்.இந்த நேரத்தை பயன்படுத்தி சிவா சுதாரித்துக் கொண்டான்.எழுந்து அவனை எட்டி உதைத்தான்.ஒரு வெறியோடு அவனை மாறி மாறி அடித்தான்.ஆரதனாவுக்கு இப்போது சிவாவை பார்க்கவே பயமாக இருந்தது.
"உன்னவிட்டா என்னையும் அவளையும் வாழவே விட மாட்ட",என்று கூறி பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து அவன் தலையில் போட போனான்
அவன் பயந்த முகத்தோடு வேண்டாம் என்று கை அசைத்தான்.ஆரதனா ஓடினாள்.சிவாவை தடுத்தாள்.
"விடு ஆரதனா என்னை விடு இவன் செத்தா தான் நமக்கு நிம்மதி",என்றான்.
"சிவா இவனை கொன்னுட்டு நீ ஜேயிலுக்கு போகனுமா.உன் வாழ்கைய ஏன் நீ இவனுக்காக தொலைக்கனும்",என்றாள்.
அவன் கல்லை தூக்கி ஓரமாக போட்டான்.
"டேய் ஒரு பொன்னோட உடம்பை வலுகட்டாயமாக அடையரது வீரம் இல்லை.அவ மனச அடையனும்.உனக்காக ஒருத்தி உருகுனா,உன் மேல அக்கரை காட்டினால்,உனக்காக எதையும் செய்ய தொடங்கினா அப்போ நீ பெரிய ஆளு.பணம் இருகரதுக்காக எந்த பொன்னும் உன்மடியில் வந்து விழும் நு நினைக்காத.ஒரு பொன்னு ஒருத்தன மனசார நினச்சுட்டானா அவன் கூட மட்டும் தான் வாழ்வா.வேற எவனையும் திரும்பி கூட பார்க்க மாட்டா.ஒரு ஆம்பளை இவ தான் நு முடிவு பன்னீட்டான் நா வெற யாருகாகவும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டான்.நான் ஆம்பளை டா",என்றான்.
ஆரதனா அவன் அருகில் வந்து அவன் கையை பிடித்தான்.இருவரின் கண்களும் சந்தித்தன.
"உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா",என்றாள்.
"ஆக போகுது ",என்றான்.
அவள் முறைத்தாள்.
"உன் கூட",என்று கூறி கண் அடித்தான்.
அவள் வெட்கத்தில் மலர்ந்தாள்.
ஷங்கர் மயக்கத்தில் இருந்தான்.
"சீக்கிரம் கிளம்பு ஆரதனா.விடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு.மொதோ பஸ்ஸை பிடித்து ஊருக்கு போகலாம்",என்றான்.
"ஆனா உன் தலையில் அடிபட்டு இருக்கு",என்றாள்.
"அத நான் பாத்துக்குறேன்.நீ உடனே கிளம்பு",என்றான்.பஸ்ஸில்.........
"சிவா",என்றாள் ஆரதனா.
"சொல்லு மா",என்றான்.
ரக் ஷிதா அவன் நெஞ்சில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
"நீ எப்படி சரியான நேரத்தில் என்ன காப்பாற்ற வந்த",என்றாள்.
சிவா பெருமூச்சு விட்டான்.
"அதுக்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லனும்",என்றான்.
அவள் குழப்பமாக பார்த்தாள்.
"நீ இருக்குர இடம் வைத்தியநாதன் சார் மூலமா தெரிஞ்சுது .உடனே கிளம்பினேன்.ஆனால் வீட்டில் ஏதோ பிரச்சனை நு உடனே வர சொன்னாங்க.நானும் ஊருக்கு போக கிளம்பினேன்.மறுபடியும் அப்பா போன் பன்னினார்.என்ன வேலையா கோயம்பத்தூர் போர நு கேட்டார்.நி கிடைச்ச விஷயத்தை சொன்னேன்.என்னை பார்த்துக்க இங்க நிறைய பேர் இருக்காங்க.நீ போய் அந்த பொன்ன கூட்டீட்டு வா நு சொன்னாரு",என்று சொல்லி முடித்தான்.
அவள் கண்களில் நீரோடு அவனை பார்த்து கை கூப்பினாள்.அவன் அவள் கையை பிடித்தான்.
"ஏய் ஏன் இப்போ கண் கலங்கர.இனி நமக்கு எப்பவுமே நல்லது நான் நடக்கும்",என்றான்.
ஆரதனா அவன் தோளில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.(முற்றும்)
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...