"மச்சி முதல் கிராமத்திலேயே அவள கண்டுபுடிச்சுரலாம் நு இருந்தேன் ",என்றான் சிவா.
"ஆனாலும் உனக்கு பேராசை டா.நோகாம நோம்பி கும்பிடலாம் நு பார்க்குர.அது நடக்காது மகனே",என்றான் பிரபு.
"நான் மறுபடியும் அவ வீட்டுக்கு போய் பார்க்க பொறேன்",என்றான் சிவா.
"எதுக்கு நல்லா பூட்டி இருக்கா நு செக் பன்னவா",என்றான் பிரபு.
"அவ திரும்பி வர வாய்ப்பு இருக்கு.பக்கத்து வீட்டுல அவ திரும்பி வந்தாளா நு கேட்க போறேன்",என்றான் சிவா.
"நீ போயிட்டு வா டா .என் உடம்பு அலைச்சல் தாங்காது",என்றான் பிரபு.
"சரி நானே போயிட்டு வறேன்",என்றான்.
மறுநாள் காலையில் ஆரதனா வீட்டுக்கு சென்றான் சிவா.அது பூட்டியே இருந்தது.அவள் வந்து போனதுக்கு ஒரு தடையயும் இல்லை.மனம் நொந்து போனான்.பக்கத்து வீட்டுகாரர் கதவை தட்டினான்.
"அட நீயா பா.இப்போ எதுக்கு வந்து இருக்க",என்றார்.
"சார் உள்ளே போய் பேசலாமே",என்றான்.
"சாரி பா உள்ளே வா",என்றார் வைத்தியலிங்கம்.
"சார் ஆரதனா இங்கே வந்தாங்களா.வீடு பூட்டியே இருக்கே",என்றான்.
"ஏன் பா உன் தொல்லை தாங்காம தான அந்த பொன்னு ஊரை விட்டு போச்சு இன்னும் ஏன் அவளை விடாம துரத்தர",என்றார்.
"நீங்க என்ன தப்பா நினச்சுகிட்டீங்க சார்.நான் ஆரதனாவை கல்யாணம் பன்னிக்க ஆசைபடுறேன்.வீட்ல கூட சம்மதம் வாங்கீட்டேன் ஆன அவ என்ன தப்பா புரிஞ்சுகிட்டு போயிட்டா",என்றான் சிவா.
"அப்படியா பா.அந்த பொன்னு ஏன் இப்படி அவசரபட்டுச்சு",என்றார்.
"தெரியலை சார்.ஆரதனா திரும்பி வந்தாலோ இல்லா நீங்க எங்கயாவது அவளை பார்த்தாலோ எனக்கு கொஞ்சம் இன்ஃபார்ம் பன்னுங்க ",என்றான்.
"சரி தம்பி உங்க போன் நம்பர் குடுட்டுட்டு போங்க.நான் அவளை பார்த்தா சொல்லுறேன்",என்றார்.
"ரொம்ப நன்றி சார்",என்று கூறி அவன் அங்கு இருந்து விடை பெற்றுக் கொண்டான். ஆரதனா காலையில் நடந்து பள்ளிகூடத்துக்கு சென்று கொண்டு இருந்தாள்.எதிரில் ஷங்கர் வந்தான்.
"குட் மார்னிங் டீச்சர்",என்றான்.நன்கு குடித்து இருந்தான்.
"குட் மார்னிங் சார்",என்றாள்.
அவன் தடுமாறி அவள் அருகில் விழ சென்றான்.ஆரதனா பயத்தில் தன் கையில் இருந்த புத்தகத்தை கீழே போட்டாள்.
"சாரி டீச்......சர்.இருங்க நான் எ......டுத்து தறே....ன்",என்று குளறினான்.
புத்தகத்தை எடுத்து அவள் கையில் தந்தாள்.அவள் மூக்கை பொத்திக் கொண்டாள்.
"ஷங்கர் நீங்க குடிப்பீங்களா",என்றாள்.
"சாரி டீச்சர் சாரி.இந்த பையன் இருக்கானே மாரி அவன் அம்மா செத்து போயிட்டாங்க.அந்த துக்கத்த கொண்டாட குடிசுட்டோம்.சாரி இனிமே குடிக்க மாட்டேன்.சத்தியமா",என்று கூறி அவள் கையில் சத்தியம் செய்தான்.ஆரதனாவுக்கு சங்கடமாய் இருந்தது.மெதுவாக அவள் கையை பிடித்தான்.
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டீச்சர்",என்றான் அவள் கையை தடவிக் கொண்டே.
ஆரதனா அவன் பிடியில் இருந்து கையை உதறினாள்.
"நேரமாச்சு நான் போகனும்",என்று கூறி விடு விடுவென நடந்து சென்றாள்.
"போ டி போ என்னிக்கு இருந்தாலும் நீ எனக்கு தான்",என்றான் ஷங்கர் அவள் போன பிறகு.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...