வைத்தியனாதன் தனது மனைவியுடன் கல்யாணத்துக்கு கிளம்பினார்.
கல்யாண வீட்டில் ஏக வரவேற்பு.
"வாங்க வாங்க மாப்பிள்ள எப்படி இருக்கீங்க",என்றார் ஒருவர்.
"நல்லா இருக்கேங்க",என்றார்.
உள்ளே சென்று பத்து நிமிடத்திலேயே மாப்பிள்ளை தாலி கட்டிவிட்டான்.இருவரும் அட்சடை தூவி விட்டு சாப்பிட சென்றனர்.
"என்ன மா சாப்பிட்டாச்சுள்ள கிளம்பலாமா.என்னால வெயில் தாங்க முடியலை",என்றார் மனைவியிடம்.
"இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம் க",என்றாள் மனைவி.
இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
"பரவாலையே டீச்சர் சொன்ன மாதிரியே கல்யாணத்துக்கு வந்துட்டாங்க",என்றான் ஒருவன் வைதியநாதன் பின்னால் இருந்து.
"ஆமா பா நல்ல பொன்னு.எவ்வளவு படிச்சாலும் தன்மையா பழகுது",என்றார் மற்ற ஒருவர்.
வைத்தியநாதனும் மனைவியும் யாரை இவ்வளவு பாராட்டுகிறார்கள் என்று திரும்பி பார்த்தார்கள்.
"என்னங்க அது நம்ம பக்கத்து வீட்டுல இருந்த ஆரதனா இல்ல.இங்க என்ன பன்னுது இந்த பொன்னு",என்றாள் மனைவி.
"இன்னுமா உனக்கு புரியலை யார் தொல்லையும் இல்லாமல் இங்கே வந்து நிம்மதியா வாழலாம் நு வந்து இருக்கு",என்றார்.
"இருங்க நான் போய் பேசீட்டு வறேன்",என்றாள்.
"வேண்டாம் அந்த பொன்னு நம்மல பார்க்காம இருக்கரதே நல்லது.அது இருக்குர இடம் நமக்கு தெரிஞ்சிருச்சுன்னு அதுக்கு தெரிஞ்ச அப்புறம் இந்த ஊரவிட்டும் போயிரும்",என்றார்.
"அப்போ அந்த பையனுக்காவது போன் பன்னி சொல்லுங்க.அந்த பொன்னு தனியா கஷ்டபட்டது எல்லாம் போதும்.",என்றாள்.
"வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் பன்னுறேன்",என்றார் வைத்தியநாதன்.-------------------------------------
ஆரதனா பள்ளியில் இருந்து வந்து கொண்டு இருந்தாள்.அப்போது ஒரு சிறுவன் வந்து பாடத்தில் சந்தேகம் கேட்டான்.ரக் ஷிதாவை இறக்கி விட்டாள்.அவள் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
"இப்போ தான் டீச்சர் தெளிவா புரிஞ்சுது ரொம்ப தேங்க்ஸ்",என்றான் சிறுவன்.
"பரவாயில பா",என்று கூறிவிட்டு அருகில் இருந்த ரக் ஷிதாவை பார்த்தாள் ஆனால் அங்கே ரக் ஷிதா இல்லை.ஆரதனா பதட்டமானாள்.
"தம்பி இங்க என் குழந்தை இருந்துச்சே எங்க பா",என்றாள்.
"இங்க தான் டீச்சர் விளையாடிகிட்டு இருந்துச்சு",என்றான்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ரக் ஷிதா காணவில்லை.ஒவ்வொறு வீடாக சென்று தேடினாள்.யாருக்கும் தெரியவில்லை.தான் அடிக்கடி செல்லும் கோவிளுக்கு சென்று பார்த்தாள்.அங்கேயும் அவள் இல்லை.மறுபடியும் பள்ளிக்கு ஓடினாள்.இப்போது பள்ளி பூட்டி இருந்தது.பன்னையாரிடம் சொன்னாள் ரக் ஷிதாவை கண்டுபுடிக்க எதாவது செய்வார் என்று எண்ணி அவர் வீட்டுக்கு சென்றாள்.
"அய்யா பக்கத்து ஊருக்கு போயிருக்காரு.வர ராத்திரி ஆகும் டீச்சர்",என்றார் கணக்குபிள்ளை.மனம் உடைந்து போனாள்.
தனக்கு என்று இருந்த ஒரே சொந்தத்தையும் தொளைத்துவிட்டு அனாதையாக நின்றாள் ஆரதனா.
வேறு வழி இல்லாமல் அவள் தன் வீட்டுக்கு சென்றாள்.
மாலை 7 மணி ஆனது.தேடி அலைந்து கலைப்பானாள்.வீட்டுக்கு சென்றாள்.கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.ரக் ஷிதா உள்ளே விளையாடிக் கொண்டு இருந்தாள்.
ஆரதனா ஓடி சென்று ரக் ஷிதாவை தூக்கி முத்தமிட்டாள்.கண்ணில் நீர் அருவி போல வழிந்தது.
"எங்கே டா போன.எப்படி இங்கே வந்த.அம்மா உன்ன காணோம் நு துடிச்சு போயிட்டேன்",என்றாள்.
"வாங்க டீச்சர்.என்ன இவ்வளவு லேட்டா வரீங்க.பரவாலையே குழந்தைய காணோம் நு இரண்டு மணி நேரம் தேடி இருக்கீங்க",என்றான் ஷங்கர் .உள் அறையில் இருந்து இவன் வெளிப்பட்டதை பார்த்து ஆரதனா அதிர்ச்சி அடைந்தாள்.
"உன் பொன்ன நான் தான் தூக்கீட்டு வந்தேன்.இது எச்சரிக்கை தான்.எனக்கு நீ வேணும் அதுவும் நாளைக்கே.முடியாதுனு அடம் புடிச்சனா நாளைக்கும் உன் குழந்தை காணாம போகும் ஆனா திரும்ப வராது.கொன்னு பொதச்சிருவேன்",என்றான்.
ஆரதனா ரக் ஷிதாவை இறுக்கமாக பிடித்த்க் கொண்டாள்.கண்களில் நீர் கசிந்து கொண்டே இருந்தது.
"நாளைக்கு இராத்திரி 12 மணிக்கு நான் வருவேன் தயாரா இரு.ஊரைவிட்டு போலாம் இல்ல எங்க அய்யாகிட்ட சொல்லலாம் நு எல்லாம் நினைச்ச உன் குழந்தையா நீ பார்க்கவே முடியாது.ஒழுங்கா ஒதுக்கோ.நாளைக்கு பார்க்கலாம்",என்று கூறி ரக் ஷிதாவுக்கு முத்தமிட்டு வெளியேரினான்.
ஆரதனா செய்வதரியாது உறைந்து போனாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...