சிவா பல முறை போன் பன்னியும் ஆரதனா எடுக்கவில்லை.விஷயத்தை சொல்லி அவளை சந்தொஷ படுத்தலாம் என்று பார்த்தால் அவள் எடுக்கவே இல்லை.
"டேய் அவ இன்னும் என்மேல கோவமா தான் இருக்கா போல.நீ பேசு டா.பேசி விஷயத்தை சொல்லு.நான் அங்க நாளைக்கு வந்துருவேன்",என்றான் சிவா பிரபுவிடம்.
பிரபு ஆரதனா எண்ணை அழைத்தான்.
சில நொடிகளுக்கு பிறகு எடுத்தாள்.
"சொல்லு பிரபு.எப்படி இருக்க",என்றாள்.
"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க",என்றான்.
"இருக்கேன்",என்றாள் விரக்தியாக.
"ஆரதனா சிவா கல்யாணத்தை நிறுத்திவிட்டான்",என்றான்.
"சிவா வா அது யாரு.அப்படி எனக்கு யாரையும் தெரியாது",என்றாள்.
"இன்னும் நீ அவன் மேல கோவமா இருக்க நு நினைக்குறேன்.உன் கோவம் நியாயம் தான் ஆனா .............",என்று ஆரம்பித்தான்.
"அவன் பெயரை கூட கேட்க எனக்கு இஷ்டம் இல்லை.அவன பத்தி பேசரதா இருந்தா இனி பேசாத டா",என்று கூறி போனை வைத்தாள்.
அவன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தான் ஆனால் அவள் போனை அனைத்து வைத்தாள்.
பஸ் சீட்டில் தலையை சாய்த்துக் கொண்டு வெளியே பார்த்தபடியே பயணம் செய்தாள்.
தன் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறி போனது என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.மறுபடியும் அவனை மட்டும் இல்லை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறும் எந்த ஆணையும் நம்பவே கூடாது என்று முடிவு செய்தாள்.
இரண்டு மணி நேர பயனத்தின் பிறகு பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றது.அவள் வெளியே பார்த்தாள்.அது ஒரு கிராமம்.பச்சை பசேல் என்று வயல்களும் மரம் செடி கொடிகளும் இருந்தன.
கால்கள் அவளை அறியாமல் செயல்பட்டன.
இந்த மாதிரி ஒரு சூழலில் வாழ வேண்டும் என்று ஆசைபட்டது உண்டு சிறு வயதில் ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.இனி வாழும் வாழ்க்கையையாவது தன் இஷ்டபடி வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு கையில் ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டு மறு கையில் பையோடு பஸ்சை விட்டு இறங்கினாள்.
எங்கே செல்கிறோம் என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் கால்கள் நடந்தன.வயல் பரப்பு ஒரு பக்கமும் மணல் சாலை மறுபக்கமும் இருந்தது.வயல் வரப்பை ரசித்துக் கொண்டே சாலையில் நடந்தாள்.
ஒரே ஒரு வீடு மட்டும் தூரத்தில் தென்பட்டது.ஒரு பாட்டி பாத்திரம் கழுவிக் கொண்டு இருந்தாள்.
அது ஒரு சிறிய குடிசை.அந்த பாட்டியின் அருகில் சென்று
"பாட்டி",என்றாள். ஆனால் பாட்டி திரும்பவே இல்லை.மறுபடியும் அழைத்தாள் அனால் பதில் இல்லை.
"அந்த பாட்டிக்கு காது கேட்காது கண்ணும் மங்களா தான் தெரியும்",என்றான் அதே வழியில் வந்த ஒருவன்.
அவன் ஒரு அழுக்கு படிந்த சட்டயும் லுங்கியும் கட்டி இருந்தான்.
"நீங்க புதுசா.யாரு வீட்டுக்கு வந்து இருக்கீங்க",என்றான்.
"நான் ........அது வந்து",என தடுமாறினாள்.
அவன் அவளை பார்த்தான்.
"நான் யாரு வீட்டுக்கும் வரலை ஆனா இங்க தான் தங்க போறேன்.விடு எதாவது இங்க வாடகைக்கு கிடைக்குமா?",என்றாள்.
"தாரலமா நான் உங்களுக்கு பார்த்து தரேன் ஆனா முன்பணம் குடுக்கனுமே",என்றான்.
"எவ்வளவு குடுக்கனும்",என்றாள்.
"5 மாச வாடகை குடுக்கனும்",என்றான்.
"சரி எவ்வளவு",என்றாள்.
"2000",என்றான்.
"நான் வீட பார்க்கனுமே.பார்த்தால் தான் குடுக்க முடியும் ",என்றாள்."நான் எங்க மா போக போறேன்.நான் இந்த கிராமம் தான்.காச குடுங்க உங்க கூடையே வந்து வீட காட்டுறேன்",என்றான்.
இவனோடு வாதம் செய்ய அவளுக்கு தெம்பு இல்லை வெயில் சுட்டெரித்தது.அது மட்டும் இல்லாமல் இருட்டுவதர்குள் எதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும்.
பையில் இருந்து பர்ஸை எடுத்தாள்.தன்னிடம் இருந்த 5000 ரூபாயை கொண்டு வந்து இருந்தாள்.
பணத்தை வெளியே எடுத்த அதே நொடியில் அவன் வேகமாக பணத்தை புடுங்கிக் கொண்டு ஓடினான்.
அதிர்ச்சியில் ஆரதனா அவனை பார்த்தாள்.அவனை ஓடி பிடிக்கலாம் என்றால் ஒரு கையில் பையையும் மறுகையில் ரக் ஷிதாவும் இருப்பதால் அவளால் அவனை துரத்தி பிடிக்க முடியவில்லை.
"திருடன் புடிங்க",என்று கத்தினாள் ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை.
கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்துவிட்டு தெரியாத ஊரில் அனாதையாய் நின்றாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...