சிவாவுக்கு அவள் நினைவாகவே இருந்தது.எப்படியாவது அவளை சமாதானம் செய்து நண்பர்களாகவாவது இருப்போம் என்று கேட்க எண்ணினான்.
பல முறை போன் செய்தான் ஆனால் அவள் எடுக்கவே இல்லை.நேரில் செல்ல வேண்டும் ஆவல் தூண்டியது ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று எண்ணி பயந்தாள்.தோழியாக இருந்த போது தோளில் சாய்ந்தவள் இப்போது கையை பிடித்தாலெ தவறாக நடப்பதாக சந்தேக படுகிறாள்.எனவே அவளிடம் சற்று தள்ளி இருந்தே சமாதானம் செய்ய எண்ணினான்.
சாரி என்று பல குறுங்செய்தி அனுப்பினான் ஆனால் பதில் எதுவும் வரவில்லை.
ஆரதனா வெளியில் கோவமாக இருந்தாலும் உள்ளுக்குள் அழுது கொண்டு இருந்தாள்.சிவாவை எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் நண்பன் என்று தான் எண்ணினாள் ஆனால் அவன் தன் துயரத்தை கண்டு உள்ளே சிரித்துக் கொண்டு இருப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.கல்யாணத்துக்கு முன் ஒருவன் தன்னை காதலிக்கிறேன் என்று சொல்வது இயல்பான ஒன்று ஆனால் குழந்தையோடு இருக்கும் விதவையை காதலிக்கிறேன் என்று கூறினால் அது அவளின் தனிமையை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதர்காக தான் இருக்கும்.இந்த வலையில் அவள் விழ தயாராக இல்லை.இனி அவனை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்தாள்."என்ன டா இரண்டு நாளா சந்தோசமா இருந்த இப்போ மறுபடியும் பழயபடி எரும சானிய மூஞ்சீல அப்புன மாதிரி இருக்க.என்ன டா விஷயம்",என்றான் பிரபு.
"ஒன்னும் இல்லை",என்றான் சிவா.
"சரி வா வெளியே போயிட்டு வரலாம்",என்றான்.
"இல்ல நான் வகுப்பை கவனிக்கனும்",என்றான்.
"சும்மா வா டா",என்று கூறி அவனை இழுத்தான்.
"ஒரு வாட்டி சொன்னா புரியாத உனக்கு.நீ படிக்க வந்தியா இல்ல ஊர் சுத்த வந்தியா.போடா",என்று கத்தினான் சிவா.
அனைத்து மாணவர்களும் இவர்களை பார்த்தார்கள்.
பிரபுவின் முகம் மாறியது.தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அவனை பார்த்த சிவாவுக்கு குற்ற உணர்ச்சி தோன்றியது.யாரோ மீது இருந்த கோவத்தை இவன் மீது காட்டி விட்டேனே என்று வருந்தினான்.மாலை விடுதிக்கு வந்த போது பிரபு அறையில் இல்லை.விடுதி முழுவதும் தேடியும் அவன் தென்படவில்லை.சிவா பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தான்.
போனை எடுத்து பார்த்தானஆரதனாவிடம் இருந்து எந்த மெசேஜும் வரவில்லை.வெறுத்து போனான்.அவளுக்கு போன் செய்தான் ஆனால் அவள் எடுக்கவே இல்லை.கோவமடைந்தான்.வேகமாக கிளம்பி அவள் வீட்டுக்கு சென்றான்.
வீட்டின் கதவை வேகமாக தட்டினான்.
ஆரதனா கடவை திறந்தாள்.இவனை பார்த்ததும் அவள் முகம் சற்று கலவரமாகவெ தெரிந்தது.
"கால் பன்னினா எடுக்க மாட்டியா.எத்தனை தடவை கூப்பிட்டேன்",என்று கத்தினான்.
"யாரு மா வந்து இருக்கா",என்றது ஒரு குரல்.அவள் விலகி நின்றாள்.உள்ளே அவளின் மாமனார் மாமியார் இருந்தனர்.
சிவாவுக்கு சங்கடமாக போனது.
"உள்ளே வா",என்றாள் ஆரதனா.
"அடடே நீங்களா.வாங்க தம்பி",என்றார் மாமனார்.
ஆரதனா குழப்பமாக பார்த்தாள்.
"இந்த தம்பிய உனக்கு தெரியுமா மா",என்றார்.
"இவன் என் கல்லூரியில் படித்தவன்.உங்களுக்கு எப்படி தெரியும் ",என்றாள்.
"இவர் தான் மா உன்னை மருத்துவமனையில் சேர்த்து பணமும் கட்டினார்.இப்போ நீ நின்னு பேசுரனா அது இவரல தான்",என்றார்.
ஆரதனா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.அவன் சங்கடமாக சிரித்தான்.
"வா பா உட்காரு.நீ என்ன பன்னுர",என்றார்.
"நான் இப்போ M.B.A பன்னுறேன் சார்",என்றான்.
"நல்லது.என்ன மா பார்த்துகிட்டே இருக்க போய் காபி எடுதுட்டு வா",என்றார்.
அவள் உடனே உள்ளே சென்றாள்.
அவளை பல கேள்விகள் ஆக்கிரமித்தன.ஏன் இவன் இங்கே இப்போது வந்தான்.ஏன் தன்னை காப்பாற்றியது தான் தான் என்று அவன் கூறவே இல்லை.ஒரு வேலை அவனுக்கு எந்த தப்பான நோக்கமும் இல்லையோ",என்று யோசித்து குழம்பினாள்.
அவள் வெளியே வந்த போது அவன் இல்லை.
"ஏதோ போன் வந்துச்சு.அவசர வேலை என்று போயிருச்சு.உன்கிட்ட சொல்ல சொல்லுச்சு",என்றார் மாமனார்.
அவள் மாமியார் எதுவும் பேசவில்லை என்றாலும்.அவள் பார்வையில் இருந்தே சிவா வந்தது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை ஆரதனா புரிந்து கொண்டாள்.

ВЫ ЧИТАЕТЕ
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Документальная прозаகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...