ஓடி செல்லும் பதட்டத்தில சிவாவும் பிரபுவும் வெவ்வேறு வழிகளில் சென்றார்கள்.
சிவா நெடு தூரம் ஓடி சென்று திரும்பிய போது பிரபு அவன் பின்னால் இல்லை.ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரும் தென்படவில்லை.
மெதுவாக அருகில் இருந்த வாசலின் படிக்கட்டில் அமர்ந்ன்தான்.அவனுக்கு மூச்சு வாங்கியது.
திடிர் என்று அந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டது.ஒரு பெண் வெளியே வந்தாள்.
"யாரு நீங்க ஏன் இங்க உக்காந்துகிட்டு இருக்கீங்க", என்றாள்.
சிவா அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"நான் பிஸ்கட் விற்க வந்தேன்.வர வழியில் நாய் துரத்தியது.ஆதனால் ஓடி வந்தேன்.கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?",என்று கேட்டான்.
அவள் உள்ளே சென்று இவனை நம்பாதவள் போல தன் பின் கதவை சாத்தி சென்றாள்.
வெகு நேரம் ஆகியும் அவள் வராததால் அவன் அங்கு இருந்து புறப்பட எழுந்தான்.அப்போது கதவு மீண்டும் திறக்கப்பட்டது.
வெளியே வந்தவளைப் பார்த்து சிவா திடுக்கிட்டான்.***************
"அடி அறிவு கெட்டவளே.அந்த பிஸ்கட் விலையே 5 ரூபாய் தான்.அதை 10ரூபாயிக்கு விற்றுவிட்டு இலவசமா ஒன்னு கொடுத்தான் என்று பெறுமை வேற உனக்கு",என்று திட்டினார் பேராசிரீயர்.
"அப்படியா",என்று அதிர்ச்சி அடைந்தாள் அவர் மனைவி.
"நான் கொடுத்த பிஸ்கட்டை என் வீட்டிலேயே 250 ரூபாயிக்கு வியாபாரம் செஞ்சுட்டு போயிருக்கானுங்க.ஏவன் நு தெரியட்டும்.அப்புறம் வச்சுக்குறேன்",என்று கோவத்தில் கொப்பளித்தார் கோபாலன்.அன்று இரவு சிவாவால் தூங்க முடியவே இல்லை.ஆரதனாவின் அழகிய முகம் தன் கண் முன்னே வந்து கொண்டே இருந்தது.யாரை பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவளை இன்று பார்த்துவிட்டான்.மகிழ்ச்சியாக இருந்தாலும்.யாருக்கோ சொந்தமான ஆரதனாவை இப்போது பார்க்கவே அவனுக்கு புடிக்கவில்லை.அவளுக்கு இப்போது ஒரு வயது குழந்தையும் இருந்தது.
நடந்ததை நினைத்துப் பார்த்தான்.சிவா நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.திடுக்கிட்டான்.
"ஆரதனா",என்றான்.
"ஹே சிவா!!",என்று அவள் ஆனந்தத்தில் கத்தினாள்.
அவளிடம் இருந்து தண்ணீரை வாங்கி குடித்தான்.தன்னை அமைதி படுத்திக் கொண்டான்.
அவளை மீண்டும் பார்த்தது ஒரு வித வலியை தந்தது.
"உள்ளே வா",என்று அழைத்தாள்.
அழகான வீடு.பெரிதாக இல்லை ஆனால் இருவருக்கு போதுமானது.இப்படி ஒரு வீட்டில் அவளோடு தாம் வாழ வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டதுண்டு.அந்த ஆசை இப்பவும் அவன் மனதில் ஒரு ஓரமாக இருந்தது.
தப்பான எண்ணம் இது என்று தன்னை தானே திட்டிக் கொண்டான்.
"நீ இந்த ஊரில் எப்படி",என்று கேட்டான்.
"அவருக்கு இங்க தான் வேலை",என்றாள்.
"நீ இங்க என்ன பன்னுர",என்றாள் பதிலுக்கு.
"நான் இங்கே தான் M.B.A பன்னுறேன்",என்றான் சிவா.
வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தான்.சுவரில் அவளின் கல்யாண புகைப்படம் இருந்தது.அவள் கணவன் அழகாக இருந்தான்.இருவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர்.
அவனுக்கு சற்று என்று கோவம் வந்தது உடனே கிளம்ப வேண்டும் போல் இருந்தது.
திடீர் என்று உள்ளே இருந்து ஒரு குழந்தை நடந்து அவள் அருகே வந்தது.
அவள் அதை தூக்கி முத்தமிட்டாள்.அது அவன் குழந்தை இல்லை என்றாலும் அவள் குழந்தை அவள் இரத்தம் என்று நினைக்கும் போது ஒரு வித பாசம் ஏற்பட்டது.அதன் அருகில் சென்று தூக்கினான்.முதலில் வர மறுத்த அந்த குழந்தை அவன் தன் பையில் இருந்து பிஸ்கட் ஒன்றை கொடுத்தடும் வந்தது.அதை கையில் துக்கும் போது பல உணர்ச்சிகள் அவன் உடம்பில் பொங்கியது.
"என்ன பேரு",என்று கேட்டான்.
"ரக் ஷிதா",என்றாள்.
ரக் ஷிதாவை முத்தமிட்டுவிட்டு அங்கு இருந்து பிரியா விடை பெற்றுக் கொண்டான்.
வெளியே வந்து பிரபவுக்கு போன் செய்தான். அவனிடம் நடந்ததை சொல்ல வேண்டும் என்று தோன்றியது ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.அவன் இனி அவளை அடிக்கடி பார்க்க போகிறான் என்று அவன் மனதில் தோன்றியது.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...