ஆரதனா ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள்.அவள் கண்கள் சிவாவை தேடியது.சிறிது தூரம் நடந்து சென்றாள்.அவனை தேடி அலைந்தாள்.ஆனால் அவன் தென்படவில்லை.ஒரு வேலை அவன் இன்னும் வரவில்லையா என்று யோசித்தாள்.அவனுக்கு போன் செய்தாள்.ஆனால் அவன் எடுக்கவில்லை.கணகள் அலை பாய்ந்தன.அவன் சீக்கிரம் தென்படமாட்டானா என்று மனது தவித்தது.
சிவா அவள் அவனை தேடி அலைவதை கண்டு ரசித்த்க் கொண்டு இருந்தான்.இனியும் அவளை அலைய விட வேண்டாம் என்று எண்ணி அவள் பின்னால் சென்றான்.அவள் ஒரு பென்சில் அமர்ந்தாள்.திடீர் என்று அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.ஆழ்ந்த யோசனையில் இருந்ததால் அவன் வந்ததை கூட அவள் கவனிக்கவில்லை.
"வரசொல்லீட்டு இப்படி திரும்பி உக்காந்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்",என்றான்.
அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.
முகம் மலர்ந்தாள்.வெட்கத்தில் தலையை குனிந்தாள்.
சிவா அதை பார்த்து அக மகிழ்ந்தான்.என்ன பேச போகிறாள் என்று அவனுக்கு புரிந்தது.
"சொல்லு என்ன பேசனும்",என்றான்.
"நீ அன்னிக்கு சொன்னது உண்மையா",என்றாள்.
"என்ன சொன்னேன்",என்றான்.
"அன்னிக்கு வீட்டுக்கு வந்து சொன்னியே",என்றாள்.
"அதான் என்ன சொன்னேன்",என்றான் சிரித்துக் கொண்டே.
"என்னையும் பாப்பாவையும் நல்லா பார்த்துக்குவேனு",என்றாள்.
"ஆமா சொன்னேன்",என்றான்.
"அதான் உண்மையா நு கேட்டேன்",என்றாள்.
"இல்லை சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்",என்றான்.
அவள் அவனை பார்த்து முறைத்தாள்.அவன் சிரித்தான்.அவள் கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சிவா அவள் கையை தன் கையில் எடுத்தான்.
"நான் அன்னிக்கு சொன்னது உண்மை தான்.அதுல என்ன சந்தேகம் உனக்கு",என்றான்.
அவன் தொட்டதும் அவள் உடம்பில் மின்னல் வெட்டியது.அவள் அவன் முகத்தை பார்த்தான்.அவன் கண்களில் காதல் வழிந்தது.அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"ஐ லவ் யு சோ மச்",என்றான்.
அவள் அமைதியாக இருந்தாள்.
சிவாவின் முகம் மாறியது.
"உன் பதில் என்ன",என்றான்.
அவள் அமைதி காக்க அவன் அவள் கையில் இருந்து அவன் கையை எடுத்தான்.
"இஷ்டம் இல்லை நு சொல்ல தான் இங்க வர சொன்னியா",என்றான் ஒரு வித பயத்துடன்.
அவள் சற்று என்று அவன் கையை பற்றினாள்.
"ஐ லவ் யு டூ",என்றாள்.
சிவாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.அவள் தோளில் கையை வைத்து நெருக்கமாக இழுத்தான்.அவள் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே தோளில் சாய்ந்தாள்.சிவாவுக்கு பெரியா சாதனை புரிந்தது போல் இருந்தது.உலகையே ஜெயித்ததாக எண்ணினான்.சந்தோசமாக விடுதிக்கு சென்றான்.
"நில்லு டா.எங்க டா போயிட்டு வர",என்றான் பிரபு.
"ஆரதனாவை பார்க்க போரேன் நு சொல்லீட்டு தான டா போனேன்",என்றான்.
"என்ன சொன்னா",என்றான் பிரபு.
"என்ன காதலிக்குறேனு சொன்னா",என்றான் சிவா.
பிரபு அதிர்ச்சி அடைந்தான்.
"அப்படியா.அதுக்கு நீ என்ன சொன்ன",என்றான் பிரபு.
"நான் என்ன டா சொல்லுரது.நீ தான் சத்தியம் வாங்கி என் கையை கட்டி போட்டுட்டியே",என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
"வேண்டாம் நு சொல்லீட்டியா",என்றான் பிரபு வியப்பாக.
"வேற வழி.எனக்கு நீ தன் முக்கியம்",என்றான் சிவா.
"டேய் நீ அவள தொந்தரவு பன்னாத நு தான் சொன்னேன்.அவளே உன்னை காதலிக்கும் போது நீ சரினு சொல்லி இருக்கலாமே",என்றான் வருத்தமாக.
"ஆனா நீ தான் சத்தியம் வாங்கீட்டியே டா",என்றான் சிவா.
"அவ அழுதாளா",என்றான்.
"ஆமா ரொம்ப அழுதா.எல்லாம் உன்னால தான்",என்றான் சிவா.
பிரபுவுக்கு சங்கடமாக இருந்தது.தானே அவளுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டோமே என்று வருந்தினான்.
"டேய் போ டா போய் நீயும் காதலிக்கிர நு சொல்லீட்டு வா",என்றான்.
"இப்போ போய் சொன்னா அவ செருப்பால அடிப்பா",என்றான் சிவா.
"சரி நானும் வரேன்.என்னால தான் அப்படி நி சொன்ன உண்மையிலேயே நீ அவள ரொம்ப காதலிக்குர நு சொல்லுரேன்.வா கிளம்பு",என்றான்.
"வேண்டாம் டா",என்றான் சிவா.
"ஏன் டா",என்றான் பிரபு.
"நீ இப்படி தான் சொல்லுவா நு தெரிஞ்சு நான் அப்பொவே அவள ஏத்துகிட்டேன் டா.ஒரு நடை மிச்சம் தான",என்றான் சிவா.
பிரபு அவனை பார்த்து முறைத்தான்.
சிவா சிரித்தான்.
"டேய் திருட்டு நாயே என்று பல கெட்ட வார்த்தைகள் பிரபு வாயில் இருந்து வர சிவா தனது காதை பொத்திக் கொண்டான்.
பிரபு ஒரு தலையனையை எடுத்து சிவாவை அடித்தான்.சிவா சிரித்துக் கொண்டே அடியை வாங்கிக் கொண்டான்.நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...