சிவா M.B.A இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தான்.3மாதத்துக்கு ஒரு முறை தன் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.ஆனால் கடந்த 4 மாதங்களாக அவன் தன் வீட்டுக்கு போகவே இல்லை.அவன் கடைசியாக போன போது அவன் வீட்டில் கல்யாண பேச்சு எடுத்தார்கள்.அவன் இப்போது வேண்டாம் தனக்கு வேலை கூட இன்னும் கிடைக்கவில்லை என்று எவ்வளவோ சொல்லி பார்த்தான் ஆனால் அவர்கள் கேட்கவில்லை.ஆதனால் கோவித்துக் கொண்டு வந்தவன் அங்கு போகவே இல்லை.பிரபு எவ்வளவோ கூப்பிட்டும் அவன் வராததால் முதன் முறையாக அவன் தனியாக ஊருக்கு சென்றான்.பிரபு இல்லாமல் வகுப்பில் சிவாவுக்கு போர் அடித்தது.எனினும் வேறு வழி இல்லாமல் கவனித்தான்.
திடீர் என்று உள்ளே மார்கெட்டிங் பேராசிரீயர் வந்தார்.
அவர் பின்னே ஒருவர் ஒரு பேரிய பையை தூக்கிக் கொண்டு வந்தார்.அதில் பிஸ்கட் பாக்கெட்கள் இருந்தன.
"உங்களில் ஆளுக்கு 50பிஸ்கட் பாக்கெட்கள் தரப்படும்.அதை நீங்கள் 15 நாட்களுக்குள் விற்று விட வேண்டும்",என்றாரஅனைவரும் திதுக்கிட்டார்கள்.
"டேய் நம்ம மார்க்கெட்டிங் ஏ இல்லை நம்ம ஏன் டா இதல்லாம் விற்கனும்",என்றான அருகில் இருந்த ஒருவன.அவன் சொன்னது அவர் காதில் விழுந்தது."உங்களுக்கு எல்லா பயிற்சியும் கொடுக்க சொல்லி எனக்கு உத்தரவு.அதனால புலம்பாமல் எப்படி விற்கனும் நு யோசியுங்க.இதில் உங்கள் இன்டர்னல் மார்க் அடங்கி இருக்கு",என்றார் அவர்.
அனைவரும் அதிர்ந்து போயினர்.மறுநாள் பிரபு ஊரில இருந்து வந்தான்.தன் அறைக்கு வந்தான் ஆனால் சிவா அங்கே இல்லை.
சிவா குளித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
பிரபு ஒரு பாக்கெட பிஸ்கட்டை பிரித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
"டேய் அத ஏன் டா பிரிச்ச",என்றான் சிவா.
"இரவு சரியாவே சாப்பிடல டா.இப்போ பசிக்குது.என்ன
டா பிஸ்கட் இது.இவ்வளவு மட்டமா இருக்கு",என்றான் பிரபு.
"அந்த மட்டமான பிஸ்கட்டை தான் நம்ம இன்னிக்கு தெரு தெருவா விற்க போறோம்.சீக்கிரம் குளிச்சுட்டு வா",என்றான் சிவா.
"என்ன கிண்டலா.நான் வர மாட்டேன",என்றான் பிரபு.
"உனக்கு இன்டர்னல் மார்க
வேனும்னா வா இல்லாட்டீ போ",என்றான் சிவா.
"அட கொடுமையே வந்து தொலைக்குறேன்",என்றான் பிரபு.
சரி ஊரில் என்ன விஷேஷம்.அம்மா அப்பா நல்லா இருக்காங்களா",என்றான் சிவா.
என் அம்மா அப்பா நல்லா தான் இருக்காங்க.அவங்கள பாத்துக்க தான் நான் இருக்கேனே.ஒரு சிலர் தன்னை பெத்து வலர்த்த அம்மா அப்பாவை மறந்துட்டு இருக்குறாங்க.நன்றி கெட்டவனுங்க",என்றான் பிரபு."எது பேசினாலும் நேரடியா பேசு டா",என்று கோவப் பட்டான் சிவா.
"உன் அப்பா அம்மா அப்படி
என்ன தப்பு பன்னீட்டாங்க.உன்ன கல்யாணம் பன்னிக்க சொன்னாங்க அவ்வளவு தான.பொறுமையா அவங்களுக்கு புரிய வை.அதை விட்டுட்டு இங்கேயே இருந்த எப்படி",என்றான் பிரபு."நீ போய் பார்த்தையா.ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை",என்றான சிவா .
"நிறுத்து டா.இப்படி பேசாத.அடுத்த வாட்டீயாவது அவனையும் கூட்டிகிட்டு வா.அவனுக்கு புடிக்கலை என்றால் நாங்க கல்யாணத்தை பற்றி
பேசவே இல்லை நு சொன்னாங்க.அவங்க மனச புரிஞ்சு நடந்துக்கோ",என்றான் பிரபு.
இப்போது சிவாவுக்கு நிம்மதியாக இருந்தது.
"சரி போறேன்.இப்போ நீ போயி சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா",என்றான் சிவா.இருவரும் தன் பிஸ்கட் பாக்கெட்களை எடுத்துக் கொண்டு தெரு தெருவாக விற்க ஆயத்தம் ஆனார்கள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...