ஒரு வாரத்துக்கு பிறகு...
"மச்சி ஒரு டூர் போகலாம் நு இருக்கேன்",என்றான் சிவா.
"ஓ அப்படியா டா எங்கே போறோம்",என்றான் பிரபு.
"போறோம் தான் ஆன நீ வரலை",என்றான் சிவா.
"நான் வராம யார் கூட போக போர",என்றான் பிரபு.
"என் ஆரு மா கூட",என்றான்.
"யாரு அது",என்றான் பிரபு.
"ஆரதனா",என்றான்.
"டேய் செல்ல பேர் வைங்க டா வேண்டாம் நு சொல்லலை .ஆனா இப்படி கேவலமா வைக்காதீங்க தாங்க முடியலை",என்றான் பிரபு.
சிவா சிரித்தான்.
"எங்க டா போறீங்க",என்றான்.
"ஊட்டி காட்டுப் பகுதில ஒரு மர வீட்டுக்கு போனோமே அங்க தான்",என்றான்.
பிரபு பெரு மூச்சு விட்டான்.
"சரி பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க",என்றான் பிரபு.
மறுநாள் காலையில் சிவா ஆரதனா வீட்டில் காரோடு நின்றான்.
அவள் உள்ளே இருந்து ஒரு பையோடு வந்தாள்.தூங்கிக் கொண்டு இருந்த ரக் ஷிதாவை சிவா தனது தோளில் தூக்கிக் கொண்டான்.
இருவரும் பின் பக்கம் அமர்ந்தார்கள்.டிரைவர் காரை கிளப்பினார்.
இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே சென்றனர்.
ஒரு இடத்தில் நிறுத்தி காலை உணவை முடித்துக் கொண்டனர்.
ரக் ஷிதா இப்போது முழித்துவிட்டாள்.
"ரக் ஷி குட்டி இன்னிக்கு நம்ம போர இடம் உனக்கு ரொம்ப புடிக்கும்.பச்சை பசேல் நு இருக்கும்.அருவி இருக்கும்.நீ ஜாலியா விளையாடலாம்",என்றான் சிவா.
"நம்ம போர இடத்துல அருவி இருக்கா?",என்றாள் ஆரதனா.
"ஆமா",என்றான்.
"எனக்கு அருவில நனைய புடிக்கும் ஆன நான் ஒரே ஒரு டிரெஸ் தான் அதிகமா எதுத்துகிட்டு வந்து இருக்கேன்",என்றாள்.
"சரி அங்க போயி இன்னூனு வாங்கிகுலாம்",என்றான் சிவா.
ஆரதனா வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.சிவா ரக் ஷிதாவோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.அவர்கள் ஊட்டியை அடைந்த போது மதியம் 1 ஆனது.ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்து கொண்டனர்.
பின் ஒரு பூங்காவுக்கு சென்றனர்.
அது பச்சை புல்வெளி நிறைந்து இருந்தது.இருவரும் அங்கே அமர்ந்தனர்.ரக் ஷிதா மகிழ்ச்சியாக புல்வெளியில் ஓடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்தாள்.
"இங்க உன்ன கல்யாணம் பன்னி கூட்டீட்டு வரனும்கிரது என் நீண்ட நாள் ஆசை",என்றான் சிவா.
"உன்னை நீண்ட நாள் காக்க வைத்ததுக்கு சாரி",என்றாள்.
"அதுவும் சுகமாக தான் இருந்தது.உன் நியாபகத்திலேயே பல ஊர் சுத்துனேன்.இனி உன் கூட சுத்துவேன்",என்றான்.
ஆரதனா சிரித்துக் கொண்டாள்.
அங்கு இருந்து புறப்பட்டு அவர்கள் தங்கும் இடத்துக்கு சென்றார்கள்.
"சார் வண்டி இதோட தான் சார் போகும்.இங்கே இறங்கி நடந்து போனா பத்து நிமிஷத்துல போயிடலாம்",என்றார்.
"என்ன சிவா.ஒரே காட்டு பகுதியா இருக்கு.இங்க இறங்கி நடக்க சொல்லுராரு",என்றாள் ஆரதனா.
"ஏன் பயமா இருக்கா",என்றான்.
அவள் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு "ஆமா",என்றாள்
"நீ என்ன நம்புரல",என்றான் சிவா.
"நம்புறேன்",என்றாள்.
"அப்போ பயபடாம வா.நானும் பிரபுவும் நிறைய வாட்டி இங்க வந்து இருக்கோம்",என்றான்.
சிவா இருவரின் பையை தூக்கிக் கொண்டு முன்னே நடந்தான்.ஆரதனா ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டு பின் தொடர்ந்தாள்.
பச்சை செடிகள் உயரமான மரங்கள் கீழே விழுந்து கிடக்கும் மஞ்சள் சருகு நீல நிற வானம் என இயற்கை நிறைந்த இடமாக இருந்தது.அவை கண்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. ஆரதனா அந்த இடத்தை பிரம்மிப்புடன் பார்த்தாள்.தாம் இன்னுரு கிரகத்தில் இருப்பதை போல் உணர்ந்தாள்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகிய மர வீடு தென்பட்டது.கீழே இருந்து படிகட்டுகள் மேலே சென்றன.
"ஆரதனா பாத்து வா",என்று கூறி அவன் முன்னே சென்றான்.
அவள் மெதுவாக ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டு மேலெ ஏறினாள்.
சிவா கதவை திறந்தான்.உள்ளே சென்று ஆரதனாவை பார்த்தான்.
"வலது காலை எடுத்து வச்சு வா ஆரு",என்றான்.
VOCÊ ESTÁ LENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Não Ficçãoகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...