ஆரதனா அறுவாமனையை ஓங்கினாள்.அதை பார்த்த ஷங்கர் விரைவாக அவள் கையை பற்றி அவளை உள்ளே தள்ளினான்.அறுவாமனையை தூக்கி ஒரு ஓரத்தில் விசினான்.
"அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து நீ தப்பிச்சு போயிருவியா.இனி தான் என் விளையாட்டே இருக்கு",என்று கூறி அவளை நெருங்கினான்.
அவள் பயந்து பின்னாடி செல்ல துவங்கினாள்.
அவன் அவள் அருகில் வந்தான்.அவள் சுவற்றில் பல்லி போல ஒற்றிக் கொண்டு இருந்தாள்.அவன் அவளுக்கு மிக அருகில் வந்து தனது இரு கைகளையும் அவளுக்கு இரு புறம் சுவற்றில் வைத்து அவளை நகர விடாமல் சிறை பிடித்தான்.
ஆரதனா பயத்தின் உச்சத்தில் இருந்தாள்.
"என் கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி செய்யாதே.செய்தால் உன் குழந்தை கழுத்த நெருச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்",என்றான்.
அவள் சிலை போல் உறைந்து நின்றாள்.அவன் மெதுவாக அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.
ஆரதனா அறுவருப்பாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஆரதனா நிஜமாவே எனக்கு உன்ன ரொம்ப புடுச்சு இருக்கு.உன்ன நானே கல்யாணம் பன்னிக்குறேன்.இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ஒத்துப் போ.உன் நினப்பு என்ன கொல்லுது.என்னால ஒரு வேலையும் செய்ய முடியலை.தூங்க முடியலை.இதுக்கு முன்னாடி நான் இப்படி இருந்ததே இல்ல",என்றான்.
"நான் ஒரு குழந்தைக்கு தாய்.எனக்கு கல்யாணம் ஆயிருச்சு அத மறந்தராத",என்றாள்.
"ஆனா உன் கணவன் உன்கூட இல்லையே.ஒரு வேலை இருந்தா கூடா.நான் இப்படி தான் நடந்து இருப்பேன்",என்று கூறி சிரித்தான்.
"ச்சே நீயும் ஒரு மனுஷனா",என்றாள்.
"என்ன மிருகம் ஆகினது நீ",என்று கூறி அவள் இடையில் கையை வைத்தான்.
அவள் இதழ்களை ஒரு முறை பார்த்தான்.மெதுவாக முத்தமிட அவள் அருகில் சென்றான்.
ஆரதனா அவள் முழு பலத்தையும் பயன்படுத்தி அவனை தள்ளிவிட்டாள்.அவன் தடுமாறி கீழே விழுந்தான்.அவள் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.
ஓடிய வேகத்தில் ஒரு கல் தடுக்கி விழ சென்றாள்.
யாரோ ஒருவரின் கை அவளை விழாமல் பிடித்தது.
நிமிந்து பார்த்தாள்.திடுக்கிட்டாள்.அவள் கண்ணில் நீர் வழிந்தது.அவள் உடம்பில் இரத்த ஓட்டம் கட்டுக்கு அடங்காமல் ஓடியது.
"சிவா",என்றாள் கலக்கமாக.
தடுமாறி விழுந்தவன் வெளியே ஓடி வந்தான்.இவர்களை பார்த்தான்.
ஆரதனா பயத்தில் சிவாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
சிவாவுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்தது.ஒரு இரும்பு தூண் போல் ஆரதனா முன் வந்து நின்றான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...