ஒரு மாதத்துக்கு பிறகு சிவாவும் பிரபுவும் தன் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
வழியில் பேராசிரீயரும் அவர் மனைவியும் வண்டியில் வந்து கொண்டு இருந்தனர்.
பிரபு யதேச்சியாக அவர் மனைவியை பார்த்தான்.உடனே தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.
"என்னங்க இவனுங்க தான் அன்னிக்கு வீட்டுக்கு வந்து உங்க பேர சொல்லீ ஏமாத்தியது",என்றாள் மனைவி.
"டேய்",என்று பேராசிரீயர் கத்தினார்.
"டேய் அந்த அம்மா நம்மல பார்த்து கோபாலன் சார்கிட்டா போட்டு கொடுத்திரிச்சு டா.சீர்க்கரம் போ",என்றான் சிவா.
பிரபு வேகமாக போக தொடங்கினான்.
கோபாலனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை.அவர் தன் வண்டியை திருப்பிக் கொண்டு பின் தொடர்ந்தார்.
"டேய் மச்சி.பின்னாடியே வராரு டா",என்றான் சிவா.
பிரபு போய்க் கொண்டே இருந்தான்.திடீர் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில் வண்டியை வலது பக்கம் திருப்பி வேகமாக போனான்.
அது தெரியாத கோபாலன் நேராக சென்றார்.
"எப்படி ஏமாத்துனேன் பார்த்தாயா",என்றான் பிரபு.
"மறுபடியும் அவர் வரதுக்குள்ள சீக்கிரம் போடா",என்றான் சிவா.
பிரபு வண்டியை கிளப்பி தான் வந்த வழியே திருப்ப முயன்ற போது சற்றென்டு ஒரு கார் அவர்கள் மீது மோத வந்தது.
பிரபு அதிர்ச்சியில் உறைந்து போனான்.வண்டியை சற்று என்று நிறுத்தினான்.இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
வேகமாக வந்த அந்த கார்
இவர்கள் மீது இடிக்க கூடாது என்று திருப்ப முயற்சி செய்து முடியாமல் ஒரு சுவரின் மீது மோதியது.அங்கு இருந்த மக்கள் காரின் அருகில் கூடினார்கள்.பிரபுவுக்கு காலில் நல்ல அடி.சிவா கிழே இருந்து மெதுவாக எழுந்தான்.
காரை சுற்றிக் கூட்டம் இருந்ததால் இவர்களால் என்ன ஆனது என்று பார்க்க முடியவில்லை.சிவா பிரபுவை மெடுவாக தூக்கி உட்கார வைத்தான்.
கூட்டத்தில் இருந்த ஒருவன்
"பாவம் யாருன்னு தெரியல ஒரு கணவன் மனைவி குழந்தை அதுல அந்த பையன் இறந்துட்டான்.பொன்னு மயக்கம் அயிர்ச்சு.நல்ல வேலை அந்த குழந்தைக்கு ஒன்னும் ஆகலை",என்றார்.
அதை கேட்ட சிவாவும் பிரபுவும் அதிர்ச்சி அடைந்தனர்.சிவா விரைவாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்தான்.கூட்டத்தில் இருந்த பெண் அழுது கொண்டு இருக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு சமாதானம் செய்ய
வந்தாள்.
"டேய் ரக் ஷிதா டா",என்று பதட்டமாக கத்தினான் சிவா.
பிரபு அவனை குழப்பமாக பார்த்தான்.
"ஆரதனா குழந்தை டா",என்று கூறி காரின் அருகே ஓடினான்.
பிரபு நொன்டிக் கொண்டே அவனை பின் தொடர்ந்தான்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.அவள் கணவன் தலை கவிழ்ந்தபடி கிடந்தான்.இரத்தம் அவன் தலையில் இருந்து வழிந்தது.ஆரதனா பின் இருக்கையில் மயக்கமாக இருந்தாள்.
சிவாவுக்கு பட படப்பாக இருந்தது.மனதில் ஒரு வித பயம் ஒற்றிக் கொண்டது.ஆரதனா என்று அவளை உலுக்கினான் ஆனால் அவள் முழிக்கவில்லை.ரக் ஷிதாவை அவன் தூக்கிக் கொண்டான்.அதே சமையம் ஆம்புலன்ஸ் வர.அவர்களோடு பிரபு சிவாவும் ஏறிக் கொண்டனர்.
வழியில் சிவா ஆரதனவுக்கு எதுவும் ஆக கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...