14.

2.9K 113 9
                                    

ஆர‌த‌னாவை பார்க்காம‌ல் 3 மாத‌ங்க‌ள் ஓடிவிட்ட‌ன.அவ‌ள் எப்ப‌டி இருக்கிறாள் என்று அவ‌ன் ம‌ன‌ம் ப‌த‌றிய‌து.எனினும் த‌ன் உண‌ர்ச்சிக‌ளை அட‌க்கிக் கொண்டான்.
ஒரு நாள் விடுதியில் த‌லை வாரிக் கொண்டு இருந்தான் சிவா.பிர‌பு வெளியில் சென்று இருந்தான்.
திடீர் என்று அவ‌ன் போன் அடித்த‌து.
"அட‌ பிர‌பு போனை ம‌ற‌ந்து வ‌ச்சுட்டு போயிட்டானே",என்றான் சிவா.
எடுத்து பேசினான்.
"ஹ‌லோ என்ற‌து ஒரு பெண் குர‌ல்.
"ஹ‌லோ பிர‌பு இருக்காரா",என்றாள்.
"இல்லைங்க‌ அவ‌ன் வெளியே போயி இருக்கான்.நான் அவ‌ன் பிர‌ண்டு தான்.நீங்க‌ யாரு",என்றான்.
"நான் ஆர‌த‌னா" ,என்றாள்.
அவ‌ன் திடுக்கிட்டான்.ப‌ல‌ வித‌ உண‌ர்ச்சிக‌ள் அவ‌ன் உட‌லில் ப‌ர‌விய‌து.
"சொல்லு ஆர‌த‌னா.நான் சிவா",என்றான்.
"சிவா என் குழ‌ந்தைக்கு நுருப்பா உட‌ம்பு கொதிக்குது.அம்மா அப்பாவும் இப்போ என்கூட‌ இல்லை.கொஞ்ச‌ம் வ‌ர‌ முடியுமா?",என்றாள்.
சிறிது நேர‌ம் யோசித்துவிட்டு.
"உட‌னே வ‌ரேன்",என்றான்.
அவ‌ள் வீட்டுக்கு சென்றான்.அப்போது ம‌ணீ மாலை 7.அவ‌ள் ப‌த‌ட்ட‌மாக‌ இருந்தாள்.
குழ‌ந்தையை தொட்டான்.உட‌ம்பு கொதித்த‌து.
"எதாவ‌து ஆட்டோ வ‌ர‌ சொல்லி ஆஸ்ப‌த்த‌ரி போயி இருக்க‌லாம் ல‌.இங்க‌ யாரையும் உன‌க்கு தெரியாதா",என்று திட்டினான்.
"இல்லை டா ஆட்டோ புடிக்க‌ போலாம் நு பார்த்தா குழ‌ந்தை கூட‌ யாராவ‌து இருக்க‌னும் ல‌",என்றாள்.
"ச‌ரி வா சீக்கிர‌ம் போக‌லாம்",என்றான்.
ஆர‌த‌னா முத‌ல் முறையாக‌ அவ‌ன் பைக்கில் ஏறினாள்.
குழ‌ந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ம‌ற்றொரு கையில் அவ‌ன் தோளை ப‌ற்றினாள்.
சிவாவின் உட‌ம்பில் மின்ன‌ல் வெட்டிய‌து.ஒரு வித‌ ம‌கிழ்ச்சி அவ‌னை தொற்றிக் கொண்ட‌து
வேக‌மாக‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு சென்றான்.
டாக்ட‌ர் குழ‌ந்தைக்கு ஊசி போட்டு ம‌ருந்து கொடுத்தார்.
இருவ‌ரும் வீடு திரும்பின‌ர்.
"ரொம்ப‌ தேங்க்ஸ் சிவா.",என்றாள்.
"ப‌ர‌வாயில்லை",என்றான்.
"ஏன் நீ த‌னியா இருக்க‌.உன் மாமியார் உன்கூட‌ இல்லையா",என்றான்.
"அவ‌ங்க‌ என் க‌ண‌வ‌னுடைய‌ த‌ம்பி கூட‌ இருக்காங்க‌",என்றாள்
"இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்துல‌ உன் கூட‌ இருக்கிற‌து தான‌ நியாய‌ம்",என்றான்.

மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!Where stories live. Discover now