மருத்துவமனையை சென்று அடைந்தனர்.ஆரதனாவின் கணவர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.ஆரதன பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.அவளை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர்.பிரபுவுக்கு முதல் உதவி செய்யப்பட்டது.
சிவா முகம் எல்லாம் வேர்த்துப் போனது.அவன் கண்களில் நீர் கோர்த்தது.பட படப்புடன் வெளியில் காத்துக் கொண்டு இருந்தான்.
30 நிமிடங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.
"நீங்க தான அந்த பொன்ன சேர்த்தது.நீங்க அந்த பொன்னுக்கு என்ன வேனும்",என்றார்.
எதாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று தான் அவனும் ஆசைப்பட்டான்.
"தெரிஞ்சவங்க",என்றான் சிவா.
"சரி அவங்களுக்கு தலையில் அடி பட்டதுனால உள்ளே இரத்த கசிவு இருக்கு.உடனடியாக ஒரு ஆப்பிரேஷன் செய்யனும் இல்லைனா அந்த பொன்னு பொழைக்கரதே கஷ்டம்.உங்கள் கை எழுத்து வேணும்",என்றார் டாக்டர்.
சிவா அதிர்ந்து போனான்.
"சரி",என்றான் சிவா.
"அப்படியே ஆப்பிரேஷனுக்கு தேவையான பணத்தை கட்டிவிடுங்கள்",என்றார் டாக்டர்.
சிவா மெதுவாக சென்று பிரபு பக்கத்தில் அமர்ந்தான.
நடந்ததை கூறினான்.
"நீ எப்படி டா கையெழுத்து போட முடியும்.பின்னாடி அவங்க அப்பா அம்மா வந்து கேட்டா என்ன பதில் சொல்ல போற",என்றான்.
"அதை அப்புறம் பாத்துக்குலாம்.இப்போ அவளை காப்பாற்றுவது தான் முக்கியம்",என்றான்.
ஒரு நர்ஸிடம் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டான்.அவள் இரண்டு லட்சம் என்று கூற இருவரும் அதிர்ந்தார்கள்.
"அவ்வளவு பணத்துக்கு நம்ம எங்க டா போறது.யார் இந்த காலத்துல கொடுப்பா",என்றான் பிரபு.
"யாராவது பசங்ககிட்ட கேளு இல்லாட்டீ எதாவது சேட்டுகிட்ட வட்டிக்கு வாங்கிகிட்டு வா",என்றான் பிரபு.
"அவசரமா கேட்டா ரொம்ப வட்டி கேட்பான் டா",என்றான் பிரபு.
"எவ்வளவு வட்டியா இருந்தாலும் பரவாயில்லை.என் பேயரில் கடன் வாங்கு",என்றான் சிவா.
வேறு வழி இல்லாமல் பிரபு சென்றான்.
ரக் ஷிதா சிவாவிடம் இப்போது நன்கு ஒட்டிக் கொண்டாள்.அவன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.
CZYTASZ
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Literatura Faktuகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...