ஆரதனாவின் கணவன் இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.என்ன தான் சிவா வை பார்க்க வேண்டாம் என்று சொன்னாலும ஆரதனா எப்படி இருக்கிறாள் என்ற கவலை பிரபுவுக்கு இருந்தது.
ஒரு முறை அவளை சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தான்.
வ
சிவாவுக்கு தெரியாமல் ஒரு நாள் பிரபு அவள் வீட்டுக்கு சென்றான்.
வீட்டின் வாசலுக்கு வந்த போது சிறிது தயக்கமாக இருந்தது.
அவள் வீட்டில் வேறு யாராவது இருந்தால் இவன் செல்வதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று பயந்தான்.சரி போய் விடலாம் என்று நினைத்து திரும்பினான்.அப்போது கதவு திறக்கப்பட்டது.
உள்ளே இருந்து வேலை செய்யும் பெண் வந்தாள்.
பிரபுவை பார்த்து "யாரு நீங்க",என்றாள்.
"நான் பிரபு.ஆரதனா கூட படிச்சவன்.அவங்க இருக்காங்களா",என்றான்.
"உள்ளே தான் இருக்காங்க போயி பாருங்க",என்றாள்.
இவன் உள்ளே சென்றான்.ஆரதனாவின் அம்மா தென்பட்டாள்.
"அம்மா நல்லா இருக்கீங்களா",என்றான்.
"பிரபு வா பா நீ எப்படி இந்த ஊருல",என்றாள்.
"நான் இங்க M.B.A படிக்குறேன்" ,என்றான்.
இருவரும் அமைதி ஆனார்கள்.
"ஆரதனா எங்க இருக்கா",என்றான்.
"அவ உள்ளே இருக்கா.எப்போதும் அழுதுகிட்டே இருக்கா",என்றாள்.
பிரபு உள்ளே சென்றான்.
ஆரதனா படுத்துக் கொண்டு இருந்தாள்.
பிரபுவை பார்த்தது எழுந்தாள்.
"பிரபு எப்படி இருக்க",என்றாள்.
"நீ எப்படி இருக்க",என்றான்.
"ஏதோ இருக்கேன்.சிவா வரலையா",என்றாள்.
"அவன் ஒரு வேலையா வெளியே போயிருக்கான்.அப்புறம் வந்து உன்னை பார்ப்பான்",என்றான்.
"பாப்பா எங்கே",என்றான்.
"தூங்குரா",என்றாள்
"உன் கணவன்.........கேள்வி பட்டேன்.",என்றான்.
அவள் இறுக்கமாக கண்களை மூடினாள்.
"நானும் போயிருக்க வேண்டியது.யாரோ ஒருவர் என்னை மருத்துவமனையில் சேர்த்தது மட்டும் இல்லாமல் பணமும் நேரத்துக்கு கட்டி என்னை காப்பாற்றினார்.இல்லைனா இப்போ என் குழந்தை ஆனாதை ஆயிருக்கும்",என்று கூறி அழுதாள்.
பிரபுவுக்கு சங்கடமாக இருந்தது.
"அழாதே எல்லாம் சரி ஆகிடும்",என்றான்.
அவள் அம்மா அவனுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்தாள்.
"செலவுக்கு பணம் எல்லாம் இருக்கு இல்ல",என்றான் தயக்கமாக.
"பெருசா அவருக்கு பேங்க் பேலன்ஸ் எதுவும் இல்லை.சம்பளத்தை வைத்து தான் குடும்பம் ஓடுச்சு.இப்போ அப்பா பென்சன் வச்சு சமாளிக்குறோம்.எனக்கு உடம்பு சரி ஆயிட்டா எதாவது வேலைக்கு போகனும்",என்றாள்.
"சரி அதல்லாம் அப்புறம் யோசிக்கலாம் .நீ உடம்பை பாத்துக்கோ.பாப்பாவை நல்லா பாத்துக்கோ",என்றான்.
"இத செலவுக்கு வச்சுக்கோ",என்று பணத்தை அவ்ள் கையில் திணித்தான்.
"இதல்லாம் எதுக்கு
வேணடாம்",என்றாள்.
"என்ன பிரண்டா நினைச்சா இதை வாங்கிக்கோ",என்றான்."பிரன்ஷிப்குள்ள இதல்லாம்
இருக்க கூடாது",என்றாள்.
"பிரண்டு நா யாருன்னு நெனச்ச.சும்மா பேசி சிரிச்சுட்டு.கல்யாணத்துக்கு மொய் வச்சுட்டு போறவன் நா.கஷ்டதிலையும் கூட இருக்க இரத்த சம்மந்தம் இல்லாத ஒரு சொஎதகாரன் தான் பிரண்டு",என்றான்.
"சரி குடு.கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுதறேன்",என்றாள்.
"அதல்லாம் அப்புறம் பாத்துகுலாம்.இப்போ வாங்கிக்கோ",என்றான்.
"வேறு எதாவது உதவி தேவைனாலும் மறக்காம கேளு",என்று கூறி அவன் போன் நும்பரை குடுத்துவிட்டு கிளம்பினான்.
![](https://img.wattpad.com/cover/73782891-288-k70506.jpg)
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...