ஷங்கர் கிளம்ப தயார் ஆனான்.புது சட்டை பேண்ட் அணிந்து கொண்டான்.வாசனை திரவியத்தை உடம்பு முழுக்க அடித்துக் கொண்டான்.
அறை மணி நேரம் கண்ணாடி முன் கழித்தான்.மணி அப்போது 11:30.இப்போது கிளம்பினால் மெதுவாக நடந்து போக சரியாக இருக்கும் என்று எண்ணினான்.
"கணக்குபிள்ளை",என்றான்.
"என்ன தம்பி",என்றார்.
"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வறேன்.வீட்டை பார்த்துக்கோங்க",என்றான்.
"தம்பி அய்யா வந்து கேட்டா நான் என்ன சொல்லுரது",என்றார் கணக்குபிள்ளை.
"அய்யா நாளைக்கு தானே ஊரில் இருந்து வராரு",என்றான் ஷங்கர்.
"இல்ல தம்பி வேலை முடிஞ்சது.கிளம்பிடேன் நு போன் பன்னினார்.இப்போ வர நேரம் தான்",என்றார் அவர்.
"அய்யா இன்னிக்கா வராரு.ச்சே இந்த மனுசன் எதுக்கு இவ்வளவு சீக்கிரம் வராரு",என்று நொந்து கொண்டான்.
"ஆமா தம்பி.நீங்க இந்த நேரம் வெளிய போரீங்கன்னு தெரிஞ்ச திட்டுவாரு அதான் கேட்டேன்",என்றார்.
"நான் பக்கத்து ஊருக்கு என் நண்பனோட படத்துக்கு போறேன் வர விடியற் காலைல ஆகும் நு சொல்லீருங்க",என்றான்.
"சரிங்க தம்பி",என்றார்.
ஷங்கர் வீட்டில் இருந்து கிளம்பினான்.ஆரதனா எதுவும் சாப்பிடாமல்.என்ன செய்வது என்று அறியாமல் கதவோரம் அமர்ந்து கொண்டு இருந்தாள்.தன் தாய் தந்தையிடம் சொல்லலாம் என்றால் ரக் ஷிதாவை அவன் எதாவது செய்து விடுவானோ என்று பயந்தாள்.சிவாவிடமிருந்து பல முறை போன் வந்தது ஆனால் தன் பிரச்சனையை தான் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் தன்னை பாதியில் விட்டு சென்றவனை நம்ப அவள் தயாராக இல்லை.அவன் நினைவு வாட்டினாலும் தன் நிலைக்கு முழுக்க முழுக்க அவனே காரணம் என்று நினைக்கும் போது அவளுக்கு ஆத்திரம் வந்தது.போனில் இருந்த தன் கணவனின் புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.
"நீங்க இறந்து போகாமல் இருந்து இருந்தால் நான் ஏன் இன்னொருவனை காதலிக்க போறேன்.எனக்கு ஏன் இந்த அவலம்.யாரும் என்னை மனுஷியா பார்க்க மாட்டேன்குராங்க.வெறும் உடலும் சதையுமா தான் பாக்குராங்க.எனக்கும் ஒரு மனது இருக்கு.அதில் ஆசைகள் இருக்கு.கௌரவமாய் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.அதை ஏன் யாரும் புரிந்து கொள்ள மாட்டேங்குராங்க",என்று கூறி விம்மி விம்மி அழுதாள்.
சரியாக 12 மணி ஆனது.கதவு தட்டப்பட்டது.ஆரதனா உடல் நடுங்கி போனது .கண்களில் நீர் வழிந்தது.ரக் ஷிதா தூங்கிக் கொண்டு இருக்கும் அறையை லேசாக மூடினாள்.கடைசி முறையாக அவள் முகத்தை பார்த்தாள்.இனி அவளை பார்பாளா என்பது அவளுக்கே தெரியவில்லை.நடுங்கிய கைகளோடு அறுவாமனையை எடுத்துக் கொண்டு கதவை நெருங்கினாள்.
கதவை மெதுவாக திறந்தாள்.ஷங்கர் அங்கே நின்று கொண்டு இருந்தான்.அவளை பார்த்ததும் அவன் சிரித்தான்.
"என்ன ஆரதனா நான் வருவேன் நு கதவோரமாவே காத்துகிட்டு இருக்கியா",என்றான்.
ஆரதனா தன் பின் பக்கம் அறுவாமனையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
"ஷங்கர் உங்ககிட்ட நான் கெஞ்சி கேட்டுகுறேன்.திரும்ப போயிடுங்க.நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டென்.என்ன நிம்மதியா வாழ விடுங்க",என்றாள்.
ஷங்கர் சிரித்தான்.
"பைதியகாரி.போரதுக்கா வந்தேன்.மொதல்ல பயமா தான் இருக்கும்.போக போக பழகீரும்.வாசலயே எவ்வளவு நேரம் நிக்குரது.உள்ளே போகலாம் வா",என்றான்.
"வேண்டாம் ஷங்கர் தப்புக்கு மேல தப்பு பன்னறீங்க.என்ன விட்டுருங்க போயிடுங்க",என்றாள்.
"ஆரதனா நேரத்தை கடத்தாதே.சொன்னது மறந்து போச்சா.ரக் ஷிதாவை நிரந்தரமா பிரியனுமா",என்றான்.
"சொல்லுரதை கேட்டு இப்போவே வெளியே போ இல்லாட்டி",என்றாள் கோவமாக.
"இல்லாட்டி",என்று கூறி அவளை கிண்டலாக பார்த்தான்.
"இல்லாட்டி செத்து போயிடுவ டா",என்று கூறி அறுவாமனையை வேகமாக அவன் மீது ஓங்கினாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...