Friends I have added the lyrics of a lovely song from love today.It is an awesome song which shows the pain of love.Listen to it and tell me if you like it.
ஆரதனாவை பார்க்காமல் ஒரு வாரம் ஓடியது.அவள் கோவம் தனியும் வரை அவளிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்று நினைத்தான்.பிரபுவிடம் தன் நிலைமையை சொல்லலாம் என்றால் அவனிடம் பேசவே பயமாக இருந்தது.அவன் பேச்சை இவன் என்றுமே கேட்டது இல்லை ஒரு வேலை கேட்டு இருந்தால் இவனுக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.
ரூமிலேயே இருந்தாள் அவள் நினைவு வரும் என்று எண்ணீ கீழே TV ருமிக்கு சென்றான்.அங்கே சில பேர் தொலைகாட்சி பார்த்துக் கொண்டு இருந்தனர்.அவர்களோடு அமர்ந்தான்.சற்று மனதுக்கு இதமாக இருந்தது.திடீர் என்று லவ் டுடெ என்னும் படத்தில் இருந்து ஒரு பாடல் வந்தது .எழுந்து வெளியே வந்து விடலாம் என்று நினைத்தான் ஆனால் ஏனோ அவன் கால்கள் நகரவில்லை.பாட்டு தொடங்கியது.
"ஏன் பெண் என்று பிறந்தாய்.ஏன் என் கண்ணில் விழுந்தாய்.ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் மூச்சை பரித்தாய்.
.................
என் வலி தீர ஒரு வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன"
கண்களை மூடிக் கொண்டான்.ஒவ்வொறு வரியும் இவனுக்காகவே எழுதப்பட்டதை போல உணர்ந்தான்.மனதின் வலி கண்களின் வழியே வெளிப்பட்டது.கண்கலில் நீர் வழிந்தது.உடனே யாரும் பார்க்கும் முன் ரூமுக்கு ஓடினான்.உள்ளே சென்று அழுதான்.
உள்ளே நுழைந்த பிரபு அவனை அதிர்ச்சியாய் பார்த்தான்.
"டேய் என்ன டா ஆச்சு",என்றான்.
"மச்சி முடியல மச்சி",என்று கூறி அவனை கட்டிக் கொண்டு அழுதான்.
"மச்சி அவள மறக்க முடியல டா",என்றான் சிவா.
பிரபு தலையில் அடித்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு மணி நேரம் அவன் பிதற்றலை பொறுமையாக கேட்டு சமாதானம் செய்தான்."இப்போ என்ன டா சொல்ல வர",என்றான் பிரபு.
"எனக்கு அவ வேனும் டா",என்றான் சிவா.
பிரபு அவனை கடுப்பாக பார்த்தான்.
"அப்போ என்ன .............. கு வீட்டுல பொன்னு பார்க்க சொன்ன",என்றான் பிரபு.
"மச்சி ஒரு வேகத்துல சொல்லீட்டேன் டா.கல்யாணத்தை நிறுத்தனும் டா",என்றான்
பிரபு பெருமூச்சு விட்டான்.
"உன்னால ஏன் சுயமா ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியல நு தெரியுமா",என்றான் பிரபு.
"ஏன்",என்றான் சிவா.
"நீ இன்னும் சுயமா உன் சொந்த காளுல நிக்கலை.அது தான் எல்லா பிரச்சணைகும் காரணம்",என்றான்.
சிவா அவனை குழப்பமாக பார்த்தான்.
"நீ ஒரு நல்ல வேலைல இருந்து சம்பாரிச்சு இருந்த.தைரியமா ஆரதனாவை பற்றி ஒரு முடிவு எடுத்து இருப்ப.இப்போ உன் ஃபீஸ் கட்டவே உன் அப்பா அம்மா கையை தான் எதிர்பார்த்துகிட்டு இருக்க அதான் உன்னால அவங்கல மீறி ஒரு முடிவு எடுக்க முடியல.இன்னூரு பக்கம் ஆரதனாவை விடவும் முடியலை",என்றான்.
"சரி இப்போ என்ன பன்னலாம்",என்றான் சிவா.
"மொதல்ல உன் ஊருக்கு போயி உன் அம்மா அப்பா கிட்ட தெளிவா பேசு.சம்மதம் வாங்கு.அப்புறம் அந்த பொன்னு வீட்டுல போய் எனக்கு வேலை இல்ல.வேலை இல்லாம சகல்யாணம் பன்ன எனக்கு இஷ்டம் இல்ல.அப்படி இப்படினு எதாது சொல்லிக்கலாம்",என்றான்.சிவா எச்சல் விழுங்கினான்.
"அது அவ்வளவு சுலபம் இல்லை",என்றான்.
"உனக்கு ஆரதனா வேனும் ந நீ இந்த ரிஸ்க் எடுத்து தான் ஆகனும்",என்றான்.
"சரி நாளைக்கே நான் ஊருக்கு போரேன்",என்றான்.
மறுநாள் தன் ஊருக்கு கிளம்பினான்."வா பா சிவா.சுமதி யாரு வந்து இருக்கானு பாரு",என்றார் அவன் அப்பா.
"அட என்னப்பா போன வாரம் தான் போன அதுக்குள்ள திரும்பி வந்துட்ட",என்றாள் சுமதி.
"இல்ல மா ஒரு முக்கியமான விஷயம் பேசனும்",என்றான் சிவா.
"மொதல்ல வந்து குளிச்சுட்டு சாப்பிடு அப்புறம் பேசிகலாம்",என்றார் அப்பா.
"இல்ல பா பேசனும்",என்றான்.
"அட பேசலாம் பா.மொதல்ல சாப்பிடு.சுமதி சீக்கிரம் டிபன் ரெடி பன்னு",என்றார்.
"அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல",என்றான்.
அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...