சாப்பிட்ட பிறகு ஆரதனா ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.எங்கே செல்வது,எங்கே தங்குவது என்று தெரியாமல் முன்னேறி சென்று கொண்டு இருந்தாள்.வெளியில் சாப்பிட்ட கலைப்பு ஆற திண்னையில் அமர்ந்து மக்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.இதுவே நகரமாக இருந்திருந்தால் கதவை 9 மணிக்கே அடைத்துக் கொண்டு தொலைக்காட்சியில் நுழைந்து இருப்பார்கள்.எனவே அங்கே சென்றதுக்கு அவள் சிறிதும் வருந்தவில்லை.
மெதுவாக நடந்து சென்றாள்.
"ஏம்மா",என்ற சத்தம் கேட்டு திரும்பினாள்.
ஒரு வயதான பெண் அவள் பேரனுடன் திண்ணையில் அமர்ந்து இருந்தாள்.
"யாரு மா நீ புதுசா இருக்க",என்றாள்.
"என் பேரு ஆரதனா.எனக்கு யாரும் இல்லை பொலப்பை தேடி இந்த ஊருக்கு வந்து இருக்கேன்",என்றாள்.
"இங்க யார தெரியும்",என்றாள்.
"யாரையும் தெரியாது",என்றாள்.
"அப்போ இந்த ராத்திரில எங்க தங்குவ அந்த குழந்தைய வச்சுகிட்டு",என்றாள்.
ஆரதனா அமைதியாக நின்றாள்.
"என் வீட்டுக்கு பின் பக்கம் மாட்டு கொட்டகை ஒன்னு இருக்கு.என்னால பார்த்துக்க முடியலைனு மாடை எல்லாம் விற்றுவிடடேன்.சுத்தம் செஞ்சு வச்சு இருக்கேன் வாடகைக்கு விடலாம்னு.இன்னும் யாரும் வரலை.நீ அங்க தங்கிகுறியா",என்றாள்.
ஆரதனாவுக்கு கடவுளை அவள் உருவில் பார்த்தது போல் இருந்தது.
"ஆனா எனக்கு வாடகை ஒழுங்கா குடுத்தரனும்",என்றாள்.
ஆரதனா மீண்டும் சோகம் ஆனால்.
அவள் பணத்தை தொலைத்த கதையை சொன்னாள்.
"என்கிட்ட ATM CARD இருக்கு இங்க ATM CENTER எங்க இருக்கு நு சொன்னீங்கன்ன நாளைகே உங்களுக்கு எடுத்து கொடுத்தரேன்",என்றாள்.
"நீ கேட்குர சென்டர் எல்லாம் எனக்கு தெரியாது",என்றாள்.
"பணம் எடுக்குர பேங்க் எங்க இருக்கு நு கேட்டேன்",என்றாள்.
"அது எங்க இங்க இருக்கு பக்கத்து ஊருக்கு தான் போகனும்",என்றாள்.
ஆரதனா அதிர்ந்து போனால்.தாம் எப்படி நடந்து பக்கத்து ஊர் வரை செல்வது.பணம் எடுக்க வேறு வழியே இல்லை",என்று எண்ணி வருந்தினாள்."என்கிட்ட இப்போ பணம் சுத்தமா இல்லை பாட்டி.உங்க உதவிக்கு நன்றி",என்று கூறி நடக்க ஆரம்பித்தாள்.
"நில்லு மா.இன்னிக்கு ராத்திரி மட்டும் தங்கிக்கோ.இந்த நேரத்துல தனியா எங்கயும் போகாத",என்றாள்.
ஆரதனா மகிழ்ச்சியாக அவளுக்கு நன்றி கூறினாள்.
இருவரும் பின் பக்கமாக நடந்து ஒரு சிறிய அறையை அடைந்தனர்.
கதவை பாட்டி திறந்தவுடன் ஒரு மாட்டு சானம் மணம் வீசியது.மூக்கை பொத்திக் கொண்டாள் ஆரதனா.உள்ளே ஒரு மின்விளக்கு எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடலாம் என்கிற போல் விட்டு விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
உள்ளே ஒரு பழைய பாய் இருந்தது.ஒரு பானையில் தண்ணீர் இருந்தது.
இங்கே தங்குவது மிக சிரமமாக இருக்கும் என்று உணர்ந்தாலும்.போக போக பழகிவிடும் என்ற நம்பிக்கையுடன் அவள் உள்ளே சென்றாள்.சிவாவுக்கு அன்று தூக்கமே வரவில்லை.எங்கே சென்றாலோ என்ற பதைபதைபு இருந்தது.அவள் பெற்றோருக்கு போன் செய்து கேட்டான் ஆனால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.எங்கேயாவது கடைக்கு போய் இருப்பாள்.நாளைக்கு போய் பாரு என்றனர்.அவள் மாமியார் வீட்டுக்கு சென்று இருக்க கூடும் ஆனால் அங்கேயும் பிரச்சனை என்று எதிர் வீட்டு காரர் சொன்னார்.அங்கே போய் இருக்க வாய்ப்பு கம்மி.அப்படியே போய் இருந்தாலும் எப்படி இவனால் அங்கே சகஜமாக இனி செல்ல முடியும் என்று எண்ணி வருந்தினான்.
இப்படி செய்துவிட்டாளே.மறுபடியும் அவளை தொலைத்துவிட்டேனே என்று வருந்தினான்.
அவள் நினைவுகள் அவனை வாட்டியது.அவர்கள் ஒன்றாக இருந்த நாட்கள் அவனை நெருப்பாக சுட்டது.அவள் முகம் அவள் பேச்சு அவள் சிரிப்பு அவனை துன்புறுத்தியது.ரக் ஷிதா எப்படி இருக்கிறாள்.எந்த சூழலில் இருவரும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள மனம் ஏங்கியது.ரக் ஷிதாவை தூங்க வைத்தாள்.அவள் நினைவு சிவாவை பற்றி இருந்தது.இன் நேரம் அவன் பிரியாவோடு பேசிக் கொண்டு இருப்பான் என்று நினைக்கும் போது அழுகை வந்தது.நிஜமாகவே கல்யாணத்தை நிறுத்திவிட்டானா இல்லை மீண்டும் தன்னை நம்ப வைத்து ஏமாற்ற போரானா என்று எண்ணி துடித்தாள்.
பிரபுவிடம் மீண்டும் பேச வேண்டும் போல் இருந்தது ஆனால் எங்கே தான் இருக்கும் இடம் தெரிந்து மீண்டும் வந்து தன்னை தொந்தரவு செய்வார்களோ என்று பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டாள்.
மெதுவாக அவளும் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...