மிகுந்த மன குழப்பத்தில் இருந்தாள் ஆரதனா.அவர்கள் சென்ற பிறகு போனை எடுத்து சிவாவுக்கு கால் செய்தாள்.
"உன்கிட்ட சில விஷயங்கள் கேட்கனும்",என்றாள்.
கால் உடனே கட் ஆனது.மீண்டும் அழைத்தாள் அனால் அவன் எடுக்கவில்லை.
என்ன திமிர் அவனுக்கு.கட் செய்கிறான்.திரும்ப கூப்பிட்டால் எடுக்க மறுக்கிறான்.இனி பேச கூடாது என்று நினைத்தாள்.
அவனிடம் இருந்து 20 நிமிடம் கழித்து கால் வந்தது.
"உன் மாமனார் மாமியார் போய்விட்டார்களா ",என்றான்.
"போய் விட்டார்கள்",என்றாள்.
"சரி கதவை திற",என்றான்.
அவள் கதவை திறந்த போது அவன் வெளியே நின்றான்.
"நி எதுக்கு இப்போ இங்க வந்த",என்றாள்.
"உன்னோடு பேச தான்",என்றான்.
"அதுக்கு எதுக்கு நேருல வரனும்.போன்ல பேசுனா போதும்.போ இங்கே இருந்து",என்றாள்.
"முடியாது.இன்னிக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சுரலாம்.",என்றான்.
அவள் மறுத்தாள்.
"சரி நீ பேசுர வரைக்கும் நான் இங்கே தான் நிப்பேன்",என்று கூறி வாசலில் அமர்ந்தான்.
வேறு வழி இல்லாமல் அவனை உள்ளே அனுமதித்தாள்.
"சொல்லு என்ன கேட்கனும் என்கிட்ட",என்றான்.
"என்னை காப்பாற்றியது நீயா",என்றாள்.
"ஆமாம்",என்றான்.
"ஏன் சொல்லல",என்றாள்.
"அதை நான் விளம்பரத்துக்கோ இல்ல உன்கிட்ட நல்ல பேரு வங்கனும் நோ செய்யல.சொல்ல வெண்டிய அவசியம் வரல",என்றான்.
"எதுக்கு விடாம எனக்கு கால் பன்னிகிட்டே இருக்க.எதுக்கு காலையில என்ன பார்க்க வந்த",என்றாள்.
"உன்னோடு பேச வேண்டும் என்று நினைத்தேன்.வந்தேன்",என்றான்.
"என்ன பேசனும்",என்றாள் கைகளை கட்டிக் கொண்டு.
"நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்குறேன்",என்றான்.
"எனக்கு அது தேவை இல்லை.நான் உன்னை அப்படி நினைக்கலை",என்றாள்.
"ஏன் ஆரதனா.எனக்கு என்ன குறை",என்றான்.
"உனக்கு ஒரு குறையும் இல்லை.உனக்கு வெறு ஒரு நல்ல பொன்னு கிடைப்பாள்",என்றாள்.
"எனக்கு நீ தான் வேனும்.புரிஞ்சுக்கோ ஆரதனா.நீ என்னைவிட்டு போயி 2 வருஷம் ஆச்சு.உன்னை மறக்க நான் முயற்சி செய்யாமல் இல்ல.என்னால மறக்க முடியல.கனவில் உன்னோடு வாழ்ந்து கொண்டு இருந்தேன் ஆனால் இப்போ கடவுளே எனக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்து இருக்கிறார்.அத நான் பயன்படுத்திக்க பார்க்குறேன் அதுல என்ன தப்பு இருக்கு",என்றான்.
ஆரதனா வாய் அடைத்து போனால்.
"என்னால் வேறு ஒரு கல்யாணம் பன்னிக்க முடியாது",என்றாள்.
"அது தான் ஏன்.அவரை மறக்க முடியலையா.பரவாயில்லை.அது வரை நான் காத்து இருக்கிறேன்",என்றான்.
"யாரும் எனக்காக காத்து இருக்க வேண்டாம்.என் மனம் மாறாது",என்றாள்.
"ஏன் மாறாது",என்றான்.
அவள் பதில் சொல்லவில்லை.வேகமாக அவள் அருகில் சென்றான்.
அவள் பயத்தில் பின்னாடி சென்றாள்.அவள் முதுகு சுவரை இடித்தது.அவன் இப்போது மிக அருகில் சென்றான்.
"ஏன் முடியாது சொல்லு",என்றான்.
அவள் பயத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் ஏதோ சொல்ல வாய் எடுக்க திடீர் என்று அவன் தனது இதழை அவள் இதழில் பதித்தான்.ஆரதனா திடுக்கிட்டாள்.அவனை தள்ள முயன்றாள் ஆனால் அவன் உருவத்தை தள்ள முடியவில்லை.அவன் பிடியில் தினறினாள்.
அவள் மீது கொண்ட காதலும் அவளை பிரிந்த சோகமும்.தன்னை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் என்னும் கோவமும் அவனுள் புதைந்து கிடக்க.இன்று முதல் முறையாக அதை முத்தத்தின் மூலம் வெளிகாட்டினான்.
5நிமிடங்கள கழித்து அவளை விடுவித்தான்.
ஆரதனா அதிர்ச்சியில் அவனை பார்த்தாள்.உடம்பெல்லாம் நடுங்கியது.இது வரை பூட்டி வைத்து இருந்த அவள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டன.கண்களில் நீர் பெருகியது.
"இப்போ குடுத்தேனே ஒரு முத்தம்.அது இரண்டு வருஷமா அடக்கி வச்சு இருந்த என் அன்பு.நல்ல வாழ்கை கிடைகும் போது அத தக்க வச்சுக்க தெரியாம வரட்டு பிடிவாதம் புடிச்சு என்ன டீ பன்ன போர.நீ கல்யாணமே பன்னாமையா இருக்க போர.அப்படி பன்னும் போது உன் குழந்தையா தன் குழந்தையா வரவன் வளர்ப்பானா.நான் வளர்ப்பேன் டீ.அவள நல்ல அப்பாவா இருந்து பார்த்துப்பேன்.நீ என் உயிருனா.உன்னிள் இருந்து வந்தவள் அவள்.அவளுக்கு என்னவிட ஒரு நல்ல அப்பா கிடைப்பானா?யோசி.இப்படி பிடிவாதம் பிடிச்சு அவ வாழ்க்கைய நாசம் பன்னீராத.வேற யாரை நீ கல்யாணம் பன்னினாலும் உனக்கு நான் கொடுத்த முத்தத்தை உன்னால் மறக்க முடியாது",என்று கூறி விறு விறுவென வெளியே சென்றான்.

YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...