"ஏன் டி உங்க சொந்தகாரங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா கல்யாணத்தை நடத்த.ஏதோ ஒரு குக் கிராமத்துல வச்சு இருக்காங்க",என்றார் வைத்தியநாதன்.
"அது ஒன்னும் குக் கிராமம் இல்லை.கோயம்புத்தூர் போர வழியில் ஒரு கிராமம்.என் வீட்டு ஆளுகளை குற்றம் சொல்லாட்டி உங்களுக்கு தூக்கமே வராதே",என்றாள் அவர் மனைவி.
"சரி சரி என்னிக்கு நு பாரு",என்றார்.
"நாளை மறுநாள்.நம்ம கண்டிப்பா போகனும்",என்றாள்.
"சரி பார்ப்போம்",என்றார் வைத்தியநாதன்.-------------------------------------
ஆரதனா வீட்டில் சமைத்துக் கொண்டு இருந்தாள்.அன்று விடுமுறை என்பதால் அவள் பள்ளிக்கு போகவில்லை.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கதவை திறந்தாள் ஷங்கர் நின்று கொண்டு இருந்தான்.
அவனை பார்த்ததும் அவள் முகம் மாரியது.
"வாங்க சார்",என்றாள்.
அவன் உள்ளே வந்து அமர்ந்தான்.
"பரவாயில்லையே வீட நல்லா வச்சு இருக்கீங்களே",என்றான்.
அவள் சங்கடமாக சிரித்தாள்.
"என்ன விஷயம் இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க",என்றாள்.
"இன்னிக்கு பள்ளிகூடம் இல்லை.உங்களை பார்க்க முடியாது அதான் வீட்டுக்கே வந்தேன்",என்றான்.
"சொல்லுங்க சார் என்ன விஷயம்",என்றாள்.
"விஷயம் ஒன்னும் இல்லை.உன்ன பார்க்காம இருக்க முடியலை",என்றான்.
"நீங்க என்ன சொல்ல வரீங்க",என்றாள் கோவமாக.
"உன்ன எனக்கு புடிச்சு இருக்கு.கல்யாணம் பன்னிக்க ஆசை படுறேன்",என்றான்.
"எனக்கு யாரையும் கல்யாணம் பன்னிக்க ஆசை இல்லை.நான் வாழ்வதே ரக் ஷிதாகாக தான்",என்றாள்.
"சரி கட்டிக்க வேண்டாம் அப்பப்போ வந்து போறேன்",என்றான்.
ஆரதனா முகம் கோவத்தில் சிவந்தது.ஆனால் அமைதியாக இருந்தாள்.
"யாருக்காவது தெரிஞ்சு போயிருமோ நு நீ பயபட வேண்டாம்.இந்த வீடு ஒதுக்கு புறமா இருக்கு .நான் ராத்திரி வந்துட்டு விடிய காலைல போயிடுரேன்.என்ன சொல்லுர",என்றான்.
"நீங்க நினைக்குர மாதிரி பொன்னு நான் இல்லை",என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.
"உன் மேல இருக்குரது காதலா காமமா நு தெரியலை.ஒரு நாள் உன்கூட இருக்கனும்.அதுக்கு அப்புறமும் உன்மேல இருக்க ஆசை போகலைனா உன்ன நானே கல்யாணம் பன்னிக்குறேன்.அப்படி ஆசை அடங்கிருச்சுன்னா அப்பப்போ வந்து போறேன்.உனக்கு தேவையானது எல்லாம் செய்யுறேன் என்ன சொல்லுர",என்றான்."நான் உன்னை செருப்பால அடிக்கரதுக்குள்ள இங்கே இருந்து போயிரு",என்றாள் கோவமாக.
"என்ன டி சொன்ன",என்று கூறி அவள் அருகில் வந்து அவள் கையை பற்றினான்.
ஆரதனா அவனை ஓங்கி ஒரு அறைவிட்டாள்.அவன் அதிர்ச்சியில் வாய் அடைத்து போனான்.
"உங்க அப்பா குடுத்த வாழ்க்கை இது.அவர் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு ஆனா அதுக்காக என் மானத்தை விற்று பொளைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.அப்படி ஒரு நிலைமை வந்த நான் என் உயிரை விடுவேன்.நீ என்னை கெடுக்க வந்த நு கத்தி ஊரை கூட்டரதுக்குள்ள போயிரு",என்றாள்.
"நீயா வருவ டி.வர வைப்பேன்",என்று கூறி வெளியே சென்றான்.
அவன் போன பிறகு வேகமாக கதவை சாத்தினாள்.கதவோரம் அமர்ந்து கதறி அழுதாள்.
ரக் ஷிதா உள்ளே இருந்து வெளிப்பட்டாள்.ஆரதனா அருகில் வந்து அவள் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அவளை கட்டி அனைத்து மீண்டும் அழ தொடங்கினாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...