"ஆரதனா எங்க வீட்டுல சம்மதம் வாங்கீட்டேன்.ஹலோ ஹலோ",என்றான் சிவா.
இனைப்பு துண்டிக்கப்பட்டது.
"ச்சே வைத்துவிட்டாளே",என்றான்.
பிரபு அறையின் உள் நுழைந்தான்.
"என்ன டா ஆச்சு",என்றான்.
"ரொம்ப நாளுக்கு அப்புறம் இன்னிக்கு போன் போச்சு டா.என் குரலை கேட்டுட்டு கட் பன்னீட்டா",என்றான் சிவா வருத்தமாக.
"டேய் மச்சி கை குடு டா",என்றான் பிரபு.
"எதுக்கு டா",என்றான் சிவா.
"நல்ல விஷயம் சொல்லி இருக்க டா",என்றான் பிரபு.
சிவா முறைத்தான்.
"ஆமா டா.இவ்வளவு நாள் போன் ஆன் பன்னவே இல்லை.அப்படியே பன்னினாலும் நீ போன் பன்ன கட் பன்னிடுவா.இன்னிக்கு ஆன்னும் பன்னி உன் குரலையும் கேட்டு இருக்கா.அப்படீன்னா அவளுக்கு உன் மேல இருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமா கொரஞ்சுட்டு வருதுனு அர்த்தம்",என்றான்.
"இல்ல டா எனக்கு என்னமோ இன்னும் அவ கோவமா இருக்கர மாதிரி தான் தெரியுது",என்றான் சிவா.
"மச்சி GPS மூலமா அவ எங்க இருக்கானு கண்டுபுடிக்க முடியும் ல டா",என்றான் சிவா.
"கண்டிப்பா முடியும் ஆனா நம்மால முடியாது",என்றான் பிரபு.
"ஏன் டா",என்றான் சிவா.
"நம்ம என்ன சிபி சிஐடி யா நம்ம கேட்டதும் ஒரு பொன்ன டிரேஸ் பன்ன.செய்தி எல்லாம் பார்குரது இல்லையா.இப்போலாம் ஒரு தலையா காதலிச்ச பொன்ன கொலை செய்யுரது தான் முக்கிய செய்தி.நீ பாட்டுக்கு அவ இருக்குர ஊரை விசாரிக்க போய் அவளுக்கு யதேச்சியா எதாவது ஆச்சுன்னா உன்ன தான் புடிப்பாங்க",என்றான்.
"டேய் நான் கொலை செய்யவா கேட்குறேன் அவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க கேட்குறேன்",என்றான் சிவா.
"என் போன்ல ஒரு அப் இருக்கு அதை வச்சு தோராயமா எந்த ஊர் எல்லைல இருந்து எந்த ஊர் எல்லைல்குள்ள அவ போன் இருக்குனு கண்டுபுடிக்கலாம்",என்றான் பிரபு.
"அப்படீன்னா உடனே கண்டுபுடிச்சு சொல்லு டா",என்றான் சிவா.
"டேய் போன் அஃப் ல இருந்தா கண்டுபுடிக்க முடியாது டா.எப்போவாவது அது ஆன்ல இருக்குரது தெரிஞ்சா சொல்லு நான் போட்டு பார்குரேன்.இப்போ படிக்குர வேலைய பாரு அடுத்த வாரம் பரிச்சை இருக்கு",என்றான் பிரபு.
"எனக்கு அவ நியாபகமாவே இருக்கு டா",என்றான் சிவா.
"அவ உனக்கு கிடைச்சாலும் உங்க வாழக்கை நல்லா இருக்கனும் நா நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா தான் நடக்கும",என்றான் பிரபு.
சிவா பெரு மூச்சுவிட்டான்.
"சரி பரிச்சை முடியட்டும்",என்றான்.ஒரு மாதம் ஆனது ஆரதனா தினமும் பன்னையார் வீட்டில் கூலி வேலை பார்த்தாள்.ஒரு நாள் ஆரதனா மஞ்சள் காய வைத்துக் கொண்டு இருந்தாள்.அப்போது அய்யாவை பார்க்க இரு வெளிநாட்டவர் வந்து இருந்தனர்.
அய்யா வெளியே வந்தார்.அவர்கள் ஏதோ கேட்டனர் ஆனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.அப்போது ஆரதனா அவர்கள் அருகில் வந்து ஆங்கிலத்தில் சரலமாக பேசினாள்.அதை பார்த்த அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்.
"அய்யா இவங்க அமேரிக்காவில் இருந்து வந்து இருக்காங்க.இந்திய கோவில்கள் பற்றி இவங்க ஆராய்ச்சி பன்ன வந்து இருக்காங்க.அதுக்காக நம்ம ஊர் கோவில்களை பார்வையிட அனுமதி கேட்க வந்து இருக்காங்க",என்றாள்.
அய்யா யோசித்தார்.
"போய் பார்க்குரதுக்கு அனுமதி தரேன் ஆனால் புகைப்படம் எதுவும் எடுக்க கூடாது நு சொல்லு மா",என்றார்.
ஆரதனா அதை மொழிபெயர்ந்தாள்.ஒருவனை அழைத்து அவர்களுக்கு கோவிலை சுற்றி காட்ட சொன்னார்.
ஆரதனா மீண்டும் தன் வேலையை பார்க்க சென்றாள்.
அய்யா அவள் அருகில் சென்று,"நீ என்னமா படிச்சு இருக்க",என்றார்.
"BSc Computer science அய்யா",என்றாள்.
"அப்படீனா எம்புட்டு மா",என்றார்.
"12 கிலாஸுக்கு அப்புறம் மூணு வருஷம் அய்யா",என்றாள்.
"இவ்வளவு படிசுட்டு ஏன் மா கூலி வேலை பார்க்குர",என்றார்.
"பணத்துக்கு வேற என்ன அய்யா பன்னுரது.குழந்தைய பார்த்துக்க பணம் வேனுமே.எனக்கும் யாரும் இல்லை",என்றாள்.
"இல்ல மா இனிமேல் இங்க உனக்கு வேலை இல்லை",என்றார்.
ஆரதனா திடுக்கிட்டாள்.
"ஏன் அய்யா நான் என்ன தப்பு பன்னினேன்",என்றாள்.
"நீ ஒரு தப்பும் பன்னல நான் தான் தப்பு பன்னீட்டேன்.இம்புட்டு படிச்ச உன்ன கூலி வேலை பார்க்க வச்சுட்டேன்",என்றார்.
"அய்யா இப்படி திடீர் நு நிறுத்தனா.நான் என்ன பன்னுரது",என்றாள்.
"கவலை படாதே மா.உனக்கு இந்த வீட்டுல தான் வேலை இல்ல நு சொன்னேன்.உன் படிப்புக்கு ஏத்த வேலை தரேன்.நீ நாளைல இருந்து பள்ளி கூடத்துக்கு வேலைக்கு போ.உனக்கு மாசம் 3000 இனி சம்பளம்",என்றார்.
ஆரதனா மகிழ்ச்சியில் திகைத்தாள்.
"ரொம்ப நன்றி அய்யா",என்றாள்.
"அது மட்டும் இல்லை உன் ஓய்வு நேரத்தில் எங்க ஊர் பசங்களுக்கு இங்கலீஷ் சொல்லி குடு மா",என்றார்.
"கண்டிப்பா அய்யா",என்றாள்.
படி படியாக அவள் நினைத்த வாழ்க்கை அவளுக்கு கிடைக்க தொடங்கியது.
![](https://img.wattpad.com/cover/73782891-288-k70506.jpg)
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...