"மச்சி அவ போன் இப்போ ஆன் ல இருக்கு டா.சும்மா ஒரு மேசேஜ் அனுப்பி பார்த்தேன்",என்றான் சிவா.
"அப்படிய இரு வறேன்",என்று கூறி பிரபு தன் கைபேசியை எடுக்க சென்றான்.
தன்னிடம் இருந்த ஆப்பைக் கொண்டு அவள் போன் எந்த ஊரில் இருக்கிறது என்று கண்டுபிடித்தான்.
"டேய் உன் ஆளு காரமடையில் இருந்து கனியூர் குள்ள ஏதோ ஒரு ஊரில் இருக்கா",என்றான்.
"டேய் காரமடை தெரியும் கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு இந்த கனியூர் எங்க இருக்கு",என்றான் சிவா.
"அதுவும் 100 கிமி குள்ள தான் டா இருக்கு",என்றான் பிரபு.
சிவா தன் போனில் இருக்கும் வரைபடத்தை பார்த்தான்."டேய் நீ சொன்ன இரண்டு ஊருக்கு நடுல 6 7 கிராமம் இருக்கு டா",என்றான் சிவா.
"கிராமத்துல 4 சந்து 40 வீடு தான் டா இருக்கும்.அதுல கண்டுபுடிக்க முடியாதா.பாத்துகலாம் டா",என்றான்.
"சரி டா ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கிராமம் போறேன்",என்றான் சிவா.
பிரபு சிரித்தான்.
"என்ன டா",என்றான் சிவா.
"கையில கிடைச்சப்போ விட்டுட்டு இப்போ ஊரு ஊரா தேட போர.உனக்கு இந்த தண்டனை தேவை தான்",என்றான்.
சிவா அவன் முகத்தில் தலை அனையை வீசினான்.----------------------
ஆரதனா பள்ளியில் வேலை பார்க்க தொடங்கி ஒரு வாரம் ஆனது.அவள் ரக் ஷிதாவோடு வீட்டுக்கு சாப்பிட சென்று கொண்டு இருந்தாள்.
அப்போது பள்ளிகூடத்துக்கு ஒருவர் வந்தார்.35 வயதுக்குள் இருக்கும்.கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு இருந்தார்.
"நீங்க தான் ஆரதனா வா",என்றார்.
"ஆமா நீங்க",என்றாள்.
"நான் அய்யாவோட பையன் ஷங்கர்",என்றான்.
"ஓ ஹலோ சார்",என்றாள்.
"நான் ஒரு மாசமா ஊருல இல்லை அய்யா உங்கல பத்தி சொன்னாரு அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம் நு வந்தேன்",என்றான்.
"ஓ சரிங்க",என்றாள்.
"சாப்பிட கிளம்பீட்டீங்களா",என்றான்.
"ஆமா",என்றாள்.
"வாங்க அப்படியே பேசீட்டே நடக்கலாம்",என்றான்.
உரிமையோடு ரக் ஷிதாவை தூக்கிக் கொண்டான்.
"உங்க பேரு என்ன",என்றான் ரக் ஷிதாவை பார்த்து.
"அவளுக்கு இன்னும் பேச்சு வரலை",என்றாள்.
"ஓ அப்படியா.நீங்க என்ன படிச்சு இருக்கீங்க",என்றான்.
"நான் BSc படிச்சு இருககேன் சார்",என்றாள்.
"இவ்வளவு படிச்ச டீச்சரஎங்க பள்ளிகூடத்துக்கு சொல்லி தர வந்து இருக்கரது இது தான் முதல் தடவை",என்றான்.
"உங்க அப்பா எனக்கு குடுத்த வாழ்க்கை ",என்றாள்.
"அதை கேட்கனும் நு இருந்தேன்.ஏன் நீங்க படிச்சத யார்கிட்டயும் சொல்லாமல் கூலி வேலை செஞ்சுகிட்டு இருந்தீங்க",என்றான்.
"யார் கிட்டயும் சொல்லனும் நு தோனலை சார்.கூலி வேலை செய்யரதே மனசுக்கு நிம்மதியா இருந்தது",என்றாள்.
"நீங்க ரொம்ப வித்தியாசமானவங்க",என்றான்.
ஆரதனா சிரித்தாள்.
"நீங்க என்ன சார் படிச்சு இருக்கீங்க",என்றாள்.
"நான் பத்தாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சேன்.அதுக்கு அப்புறம் படிப்பு ஏரலை.அப்பாவோட சேர்ந்து விவசாயம் பார்த்துகிட்டு இருக்கேன்",என்றான்.
"உலகத்திலேயே உன்னதமான வேலை விவசாயம்.அதை நீங்க செய்யரீங்க.உங்கல பார்த்தா பெருமயா இருக்கு.படிக்கல நு கவலை படாதீங்க",என்றாள்.
ஷங்கர் அவளை ஒரு முறை பார்த்தான்.அவள் பேச்சும் எளிமையான தோற்றமும் ஆனவம் இல்லாத குணமும் அவனை ஏதோ செய்தது.
பேசிக் கொண்டே வீட்டுக்கு வந்தாள் ஆரதனா.
"நீங்க இங்கையா தங்கி இருக்கீங்க.இது மாட்டு கொட்டகையா இருந்துச்சு",என்றான் அதிர்ச்சியாக.
"பழகி போச்சு சார்.கஷ்டமா தெரியலை",என்றாள்.
"இல்ல இல்ல இனிமேல் நீங்க இங்க தங்க கூடாது நாளைக்கே ஒரு நல்ல வீடா உங்களை குடி வைக்குறேன்",என்றான்.
"ரொம்ப நன்றி சார்.வாங்க சாப்பிடலாம்",என்றாள்.
"இல்லீங்க நீங்க சாப்பிடுங்க நான் வறேன்",என்றான்.
அவள் சிரித்து வழி அனுப்பி வைத்தாள்.அவன் உடல் அங்கு இருந்து நடந்தாலும் அவன் மனம் ஒரு குழந்தை போல் அவள் பின்னாலேயே சென்றது.
![](https://img.wattpad.com/cover/73782891-288-k70506.jpg)
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...