மறுநாள் காலை ஆவலாக ஆரதனாக்காக காத்துக் கொண்டு இருந்தான்.அவள் வருவதை பார்த்து கதவு ஓரத்தில் வந்து நின்றான்.ஆனால் அவள் இயல்பாக புண்ணகைத்துவிட்டு உள்ளே சென்றாள.அவன் குழம்பி போயி அவளை பின் தொடர்ந்தான.அவள் எதுவும் சொல்லாமல் அவள் இருக்கைக்கு சென்றாள்.
சிவா அவன் இருக்கைக்கு போய் அமர்ந்தான்.
"என்ன டா செம பல்பா?",என்றான் பிரபு.
அவனை எரிச்சலாய் பார்த்தான் சிவா.
முதல் பிரேக் வருவதர்க்குள் பிரபுக்கு தலை வலியே வந்துவிட்டது.சிவா புலம்பி தீர்த்துவிட்டான்.
"டேய் என்கிட்ட புலம்பாத டா.அவகிட்டயே போயி லவ் பன்னராளா இல்லையா நு தெளிவா கேளு",என்றான் பிரபு.
அவளை நோக்கி சென்றான்.
"ஆரதனா",என்றான் தயக்கமாக.
அவள் திரும்பி பார்த்தாள்.
"நேத்து நான் குடுத்த கார்டை பார்த்தியா",என்றான்.
அவள் திடுக்கிட்டாள்.
"அது தொலைந்துவிட்டது நான் பார்க்கவே இல்லை என்று சொன்னால் வருத்தப்படுவானே",என்று எண்ணினாள்.
"பார்த்தேன் ரொம்ப நன்றி",என்றாள்.
அவன் குழப்பமாய் அவளை பார்த்தான்.
"அதுக்கு உன்னுடைய பதில்",என்றான்.
"உன்னைபோல் ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்",என்று கூறி நகர்ந்து சென்றாள்.
அவன் கண்களில் நீர் பெருகி வழிவதர்க்குல் அவன் வகுப்பு அரையை விட்டு வெளியே சென்றான்.
அவன் செல்வதை பார்த்த பிரபு அவனை பின் தொடந்தான்.
சிவா வேகமாக நடந்து கல்லூரி மைதானத்துக்கு சென்றான்.
ஒரு மரத்தோரமாக அமர்ந்து அழுதான்.
அவனை பார்த்த பிரபு கலங்கிப் போனான்.
அவன் அமைதி ஆகும் வரை காத்து இருந்து பின் அவன் அருகில் சென்று அமர்ந்தான்.
"என்ன டா ஆச்சு",என்றான்.
"அவ என்ன விரும்பல டா",என்றான்.
"அவளே சொன்னாளா.ஏன் உனக்கு என்ன கொரச்சல்",என்று கலக்கமாக கேட்டான்.
"புடிக்கல நு சொன்னா நான் வருத்தபடுவேன் நு உன்ன பிரண்டா கெடைக்க நான் கொடுத்து வச்சு இருக்கனும் நு நாசுக்கா சொன்னா",என்றான் உடைந்த குரலோடு.சரி டா ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்க மாதிரி ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்க டான் செய்யும்.ஆமாகிர பதிலை மட்டும் தான் ஏத்துக்குவேன் நா எப்படி.இல்லை கிர பதிலையும் ஏற்க்கும் பக்குவம் நமக்கு இருக்கனும்.இருக்கவன் மட்டும் தான் லவ் பண்ணனும்",என்றான் பிரபு.
சிவா அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான்.
"மச்சி திரிஷா இல்லைனா நயன்தாரா டா",என்றான் பிரபு.
சிவா அவனை பார்த்து முறைத்தான்.
"சரி புரியுது இரண்டு வருஷ காதல் மறக்க கஷ்டமா தான் இருக்கும்.ஆன அவளுக்கு புடிக்கலையே",என்றான் பிரபு.
"ஏன் டா புடிக்கல.என்ன குறை என்கிட்ட",என்றான் சிவா.
"நீ ஆஜித் ரசிகன் தான.உன்கிட்ட வந்து உனக்கு விஜய் ஏன் புடிக்கல.அவர் கிட்ட என்ன குறை நு கேட்டா என்ன சொல்லுவ",என்றான் பிரபு.
"குறை எல்லாம் இல்லை டா எனக்கு புடிக்கல அவ்வளவு தான்",என்றான்.
"அதே மாதரி தான் உன்கிட்ட குறை எல்லாம் இல்லை அவளுக்கு புடிக்கல அவ்வளவு தான்",என்றான் பிரபு.
"அப்பா டேய் அவ புடிக்கல நு சொன்னத கூட தாங்கிகுவேன் ஆனா உன் தத்துவங்கல தான் டா தாங்க முடியல",என்றான் சிவா.
இப்போது அவன் முகம் கலக்கமாக இல்லை.தெளிவாக இருந்தது.
"மச்சி அவள பார்க்கவே வெட்கமா இருக்கு டா.எதாவது படத்துக்கு போலாமா",என்றான் சிவா.
"இனிக்கு படத்துக்கு போயிருவா நாளைக்கு எங்க போவ.எப்படியும் அவள இன்னும் கொஞ்ச நாளைக்கு சகிச்சு தான ஆகனும்",என்றான் பிரபு.
"அதை நாளைக்கு பார்த்துகுலாம்.இனிக்கு போலாம் வா",என்றான் சிவா.
"சரி ரொம்ப கெஞ்சுர.உனக்காக தான் வரேன்.இல்லாட்டீ இப்படி கிலாஸு கட் பன்னர்துல எனக்கு இஷ்டமே இல்லை.அதனால செலவு எல்லாம் உன்னோடது",என்றான் பிரபு.
"நீ என்னைக்கு டா காசு செலவு பன்னி இருக்க.நானே பன்னுறேன்.வந்து தொலை",என்றான் சிவா.
இருவரும் கிலம்பி சென்றனர்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...