ஷங்கர் அவன் நண்பனோடு பேசிக் கொண்டு இருந்தான்.
"மச்சி எப்படியோ நினைத்ததை சாதிச்சுட்ட டா",என்றான் நண்பன்.
"ஆமா டா இப்போ தான் சந்தோசமா இருக்கு",என்றான் ஷங்கர்.
"ஆனாலும் நீ குழந்தைய எல்லாம் வச்சு மிரட்டுவனு நான் எதிர் பார்க்கவே இல்லை டா",என்றான் நண்பன்.
"சும்மா தான் மிரட்டனேன் டா.ஒரு பொன்னுக்காக குழந்தைய கொல்லுர அளவுக்கு நான் கொடுமைகாரன் இல்லை.அந்த குழந்தை என்கிட்ட நல்லா ஒட்டிகிச்சு.எனக்கு அதை நிஜமாகவே ரொம்ப புடிக்கும் டா",என்றான் ஷங்கர்.
"எப்படியோ இன்னிக்கு நீ நினைத்தது நடக்க போகுது",என்றான் நண்பன்.
"ஆமாம்.அவ என்னை வேண்டாம் நு ஒதுக்க ஒதுக்க அவ மேல இருக்க வெறி தான் அதிகம் ஆகுது.இன்னிக்கு என் ஆசை நிறைவேர போகுது.",என்றான் ஷங்கர்.ஆரதனா அன்று பள்ளிக்கு போகவில்லை.இரவு முழுக்க அவளுக்கு தூக்கம் வரவில்லை.எதையோ இழந்தவளை போல உணர்ந்தாள்.வெகு நேரம் யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தாள்.ஒரு போதும் ஷங்கரின் ஆசைக்கு ஒத்துழைக்க கூடாது.தன் மானத்தை காபாற்றிக் கொள்ள அவனை கொலை செய்ய கூட தயங்க கூடாது.ஒரு வேலை அது அவளால் முடியவில்லை என்றால் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும்.முதலில் ரக் ஷிதாவையும் கொன்றுவிட்டு தானும் சாக வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.ஆனால் ரக் ஷிதாவின் முகத்தை பார்க்கும் போது அவளை கொல்ல மனம் வரவில்லை.எனவே முடியும் வரை போராடி பார்ப்போம்.நிலைமை கை மீறி போனால் அறுவாமனையால் தன் கழுத்தை அறுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தாள்.ரக் ஷிதாவை கடவுள் கையில் ஒப்படைத்தாள்.மணி 9 ஆனது ரக் ஷிதாவுக்கு சாதத்தை ஊட்டி தூங்க வைத்தாள்.
உள்ளத்தில் மரண பயத்தோடும் ஒரு கையில் அறுவாமனையோடும் காத்திருக்க துவங்கினாள்.சிவா உடனே கிளம்பினான்.பஸ்ஸில் போய் கொண்டு இருந்தான்.தன் கைபேசியில் இருக்கும் ஆரதனாவின் புகைபடத்தை பார்த்துக் கொண்டே வந்தான்.அழகான நினைவுகள் அவன் கண் முன் தோன்றியது.
ஆரதனாவின் அழகிய முகம் அவன் கண் முன் வந்தது.அவளோடு வாழ போகும் அழகிய வாழ்க்கையை ஒரு முறை நினைத்து பார்த்தான்.இருவரும் ரக் ஷிதாவோடு கோவிளுக்கு சென்றார்கள்.சாமிக்கு அர்சனை செய்தார்கள்.ஐயர் திருநீர் குங்குமம் தந்தார்.ஆரதனா திருநீர் இட்டுக் கொண்டாள்.பின் சிவாவுக்கு வைத்துவிட்டு கண்ணில் படாமல் இருக்க ஊதிவிட்டாள்.சிவாவின் மனம் ஒரு பறவை போல் பறந்தது.அவளை பார்த்து கண் அடித்தான்.ஆரதனா வெட்கத்தில் முகம் மலர்ந்தாள்.
"சிவா என் நெற்றியில் குங்குமம் வைங்க",என்றாள்.
சிவா அக மகிழ்ந்து போனான்.அவள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான்.மனதிற்கு நிறைவாக இருந்தது.தான் வேண்டும் என்று ஏங்கிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்ததாகவே நினைத்தான்.திடீரென அவன் போன் ஒலித்தது.கண்களை திறந்து பார்த்தான்.அப்போது மணி 6.அவன் தன்னை மறந்து ஆரதனாவின் நினைவில் உறங்கிவிட்டான்.
எடுத்து பேசினான்.
"சிவா எங்க பா இருக்க",என்றார் அம்மா பதட்டமாக.
"அம்மா நான் கோயம்புத்தூர் போய்கிட்டு இருக்கேன் ",என்றான்.
"நீ உடனே கிளம்பி ஊருக்கு வா",என்றார் அம்மா.
"அம்மா என்ன ஆச்சு நான் ஒரு அவசர வேலையா போய்கிட்டு இருக்கேன்",என்றான்.
"பிரியாவோட அப்பாவுக்கும் உன் அப்பாவுக்கும் காலைல தகராரு ஆகிருச்சு.அதுல அவங்க ஆளுங்க சில பேர் அப்பாவை அடிசிட்டாங்க டா",என்றாள்.
சிவா அதிர்ச்சி அடைந்தான்.பினவன் முகம் கோவத்தில் சிவந்தது.
"உடனே கிளம்பி வறேன்",என்று கூறி பஸ்ஸை விட்டு இறங்கினான்.
ESTÁS LEYENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
No Ficciónகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...