சிவா ஒரு பையை எடுத்துக் கொண்டு ஒத்தையடி பாதையில் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான்.அவன் எப்போதும் சாப்பாடு வாங்கும் கடையில் கூட்டமாக இருந்தது.சிறிது நேரம் காத்து இருந்தான்.
"அண்ணே இங்க டிரஸ் கடை எங்கேயாவது இருக்கா",என்றான்.
"இதே ரோட்டுல போங்க தம்பி கொஞ்ச தூரத்துல ஒரு கடை வரும் தம்பி.சீக்கிரம் போங்க 8 க்கு எல்லாம் கடைய அடச்சிருவாங்க",என்றார் கடை காரர்.
"சரிங்க அண்ணே",என்று கூறி நடக்க ஆரம்பித்தான்.
ஆரதனா பொறுமையாக காத்துக் கொண்டு இருந்தாள்.
தொலைகாட்சி இல்லாததால்.அவள் தன் கைபேசியை நோன்டிக் கொண்டு இருந்தாள்.திடீர் என்று தூரத்தில் யானை பிளிரும் சத்தம் கேட்டது.அவள் கை நடுங்கி கையில் இருந்த போன் கீழே விழுந்தது.அவள் மனம் பயத்தில் பட படத்தது.போனை கீழே இருந்து எடுத்தாள்.கீழே விழுந்த அதிர்ச்சியில் அவள் போன் வேலை செய்யவில்லை.தலையில் அடித்துக் கொண்டாள்.
"இப்போ எப்படி சிவாகிட்ட பேசுரது",என்று எண்ணி பயந்தாள்.
20 நிமிடம் கடந்தது.இன்னும் அவன் வரவில்லை.கதவை திறந்து பார்க்கவும் அவளுக்கு பயமாக இருந்தது.திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆரதனா பயத்தில் உறைந்து போனாள்.அவளை சுற்றி கும் இருட்டாக இருந்தது.
தட்டு தடுமாறி மேசை அருகில் வந்தாள்.அதன் டிராவை திறந்து தொலாவினாள்.
சற்று என்று ஒரு டார்ச் லைட் கையில் தென்பட்டது.
அதை எடுத்து ஆன் செய்தாள்.ஆனால் அது விட்டு விட்டு எரிந்து பின் நின்று போனது.
அவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது."கடவுளே பிலீஸ்.எப்படியாவது இந்த டார்ச் எரியனும்",என்று வேண்டிக் கொண்டாள்.
அதன் தலையில் தட்டினாள்.இப்போது அது பளிச்சென்று எரிந்தது.
ரக் ஷிதா அருகில் சென்று அமர்ந்தாள்.அவளுக்கு வேர்த்து இருந்தது.ஒரு பேப்பரை எடுத்து விசிறிக் கொண்டு இருந்தாள்.ஒரு காலடி சத்தம் கேட்டது.பின் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"சிவா",என்று அழைத்தாள் ஆனால் பதில் வரவில்லை.
கதவு மீண்டும் தட்டப்பட்டது.
"சிவா நீ தான",என்றாள் ஆனால் பதில் இல்லை.
ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவை திறக்க முற்பட்டாள்.
ВЫ ЧИТАЕТЕ
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Документальная прозаகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...
