ஆரதனாவுக்கு தான் செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை.கைபேசி ஒலிக்கும் போது எல்லாம் அது யார் என்று பார்பதுக்கு ஓடினாள்.கதவை யாராவது தட்டினால் அது சிவாவாக இருக்க வேண்டும் என்று ஏங்கினாள்.அவனை கடைசியாக பார்த்து ஒரு வார காலம் ஆகிவிட்டது இது வரை அவனிடம் இருந்து போனோ மெசேஜோ வரவில்லை.தான் பேசவும் அவள் கர்வம் இடம் குடுக்கவில்லை.அவனையே நினைத்துக் கொண்டு இருந்தாள்.
காதல் பாடல் கேட்கும் போது எல்லாம் அவனை நினைத்துக் கொண்டான்.ஒரு வேலை தன்னை அறியாமல் அவனை காதலிக்க துவங்கிவிட்டேனா என்று எண்ணும் போது அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.இப்படியே இன்னூரு வாரமும் கழிந்தது.இப்போது ஆரதனாவுக்கு வருத்தம் கலந்த பயம் வந்தது.ஏன் அவன் இது வரை பேசவில்லை.அன்று நடந்ததை எப்படி அவனால் மறக்க முடியும்.இல்லை அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று எண்ணி பயந்தாள்.
அவன் எண்ணுக்கு ஒரு எம்டி மெசேஜை அனுப்பினாள்.சிவா பரிச்சைக்கு படித்துக் கொண்டு இருந்தான்.ஆரதனாவிடம் இருந்து ஏற்பட்ட பிரிவை தனது படிப்பில் கவனம் செலுத்த பயன்படுத்திக் கொண்டான்.எனினும் அன்று நடந்தது அவ்வப்போது நியாபகம் வர அவனுக்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது.அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான் ஆனால் அவளை எப்படி எதிர் கொள்வது என்பதை எண்ணி வருந்தினான்.அப்போது அவன் போன் ஒலித்தது.பார்த்தான்.ஆரதனாவிடம் இருந்து மேசேஜ் வந்தது ஆனால் அதில் எதுவும் இல்லை.அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.ஆனால் கை தெரியாமல் பட்டு மேசெஜ் போனது என்று கூறுவாள்.எனவே அவளின் எண்ணத்தை விட்டுவிட்டு படிக்க முயற்சி செய்தான்.
ஆரதனா அவன் பதிலுக்காக காத்து இருந்தாள்.ஆனால் மதியம் வரை அவனிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை.நொந்து போனாள்.ஒரு வேலை அவன் தன்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டானோ என்று எண்ணினாள்.
"ஏங்க, தம்பி அந்த பொன்ன புடிச்சிருக்குனு சொன்னான்ல.ஒரு நல்ல நாளா பார்த்து அவங்க வீட்டுக்கு பொன்னு பார்க்க போலாமா",என்றாள் சிவாவின் அம்மா.
"அவன் வந்து பொன்ன பார்க்க வேண்டாமா",என்றார் அப்பா.
"வேண்டாம்.அவன் சரின்னு சொன்னதே பெருசு.பொன்னு வீட்டுல அவனுக்கு பரிச்சை நு சொல்லீரலாம்.அப்புறம் நிச்சயம் பன்னுரப்போ அவன் வந்து பொன்ன பார்த்துகட்டும்",என்றாள் அம்மா.
"அதுவும் சரி தான்.நான் பொன்னு வீட்டு காரங்க கிட்ட பேசறேன்",என்றார்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...