"டேய் நீ யாருகிட்ட இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்க",என்றான் சிவா.
"அம்மா டா",என்றான் பிரபு.
"அம்மா கூடவா ஒரு மணி நேரமா பேசிகிட்டு இருக்க",என்றான் சிவா சந்தேகமாக.
"ஆமா டா",என்றான் பிரபு.
"டேய் இந்த டகால்டி எல்லாம் என்கிட்ட வேண்டாம் யாருன்னு சொல்லு",என்றான் சிவா.
"செல்லம் நான் அப்புறம் பேசுரேன்.இங்க ஒரே டிஸ்டர்பன்ஸ்",என்று கூறி போனை வைத்தான் பிரபு.
"என்ன டா வேணும் உனக்கு",என்றான் பிரபு.
"போன்ல யாரு",என்றான்.
"துலசி",என்றான் பிரபு.
"யாரு துலசி",என்றான் சிவா.
"டேய் கிராமத்து பூங்குயில்.என் தேவதை.பாலைவனத்தில் ஒரு பூஞ்சோலை",என்றான் பிரபு.
"அட ச்சே நிறுத்து.அந்த பொன்னுகிட்ட ஏது டா போன்",என்றான் சிவா.
"நான் தான் குடுத்தேன்",என்றான் பிரபு.
"அட பாவி போன் தொளைஞ்சு போச்சுனு சொன்ன",என்றான் சிவா.
"அவகிட்ட குடுத்துட்டேன்",என்றான் பிரபு.
"என்ன லவ்வா",என்றான் சிவா அலுப்பாக.
"உனக்கு மட்டும் தான் வருமா எனக்கும் வந்துரிச்சு டா.பார்த்தேன் பேசினேன் புடிச்சு இருந்துச்சு.லவ் பன்ன ஆரம்பிச்சுட்டேன்.எனக்கு வேலை கிடைச்சதும் கல்யாணம்.ஒரு குழப்பமும் இல்லை தெளிவா இருக்கேன்",என்றான் பிரபு.
"அவளுக்கு முறை மாமன் அறிவாளோட நிக்குற அண்ணன் எல்லாம் இல்லையா டா",என்றான் சிவா.
"நல்லா போய்கிட்டு இருக்குர என் லவ்வுல ஏன் டா வில்லன சேர்க்குர",என்றான் பிரபு.
"இருகனும் மச்சி இல்லைனா சுவாரசியம் இருக்காது",என்றான் சிவா.
"உன் காதல் ல இருக்கர சுவாரசியமே எனக்கு போதும் டா சாமி.சரி ஆரதனா கூட பேசுனயா",என்றான் பிரபு.
"எங்கே டா போன் ஆன் பன்னவே மாட்டேங்குரா.அப்படியே என்னிக்காவது ஆன் பன்னினாலும் நான் கூப்பிட்டா எடுக்க மாட்டேன்குரா",என்றான் சிவா.
"உன் தேடும் படலம் என்ன ஆச்சு",என்றான் பிரபு.
"மூணு கிராமம் போய் தேடியாச்சு இன்னும் அவள கண்டுபிடிக்க முடியலை.இன்னும் இரண்டு தான் இருக்கு அதுலையும் அவ இல்லைனா என்ன பன்னுரதுனே தெரியலை டா",என்றான் சிவா.
"கவலை படாதடா அவ இன்னும் அந்த ஊரில் தான் இருக்கா.நான் மறுபடியும் செக் பன்னினேன்.கண்டிப்பா அவ கிடைப்பா டா",என்றான் பிரபு.சிவாவின் போன் ஒலித்தது.எடுத்து பேசினான்.
"தம்பி நான் வைத்தியநாதன் பேசுரேன்",என்றார்.
"சொல்லுங்க சார்",என்றான்.
"என் மனைவி வீட்டு கல்யாணத்துக்கு ஒரு கிராமத்துக்கு போனேன்.அங்கே அரதனாவை பார்த்தேன்.அங்க டீச்சரா வேலை பார்த்துட்டு இருக்கா.",என்றார்.
"அப்படியா சார்.பேசுனீங்களா.என்ன பத்தி கேட்டாளா.குழந்தை எப்படி இருக்கா",என்றான் ஆர்வமாக.
"இல்ல பா பேசலை.அவ இருக்குர இடம் எனக்கு தெரிஞ்சு போச்சுனு அவ வேற ஊருக்கு போயிட்டா என்ன செய்யரது அதான் பேசாம வந்துட்டேன்.அந்த கிராமத்துக்கு போர வழி.அவ வீட்டு முகவரி எல்லாமெ உனக்கு மேசெஜா அனுப்பி வைக்குறேன்.நீ உடனே போய் பாரு",என்றார்.
"ரோம்ப நன்றி சார்.நான் உடனே போறேன.உங்க உதவியை நான் மறக்கவே மாட்டேன்",என்றான்.
"அவளை இதுக்கு மேலையும் கஷ்டபடுத்தாதே.யாரும் இல்லாத அனாதை அயிட்டா அந்த பொன்னு.கல்யாணம் பன்னி சந்தோசமா வச்சுக்கோ.எனக்கு நீங்க நல்லா இருந்தா அதுவே போதும்",என்றார்.
"கண்டிப்பா சார்",என்று போனை வைத்தான்.
பிரபு இவனை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
"மச்சி ஆரதனா இருக்குர இடம் தெரிஞ்சு போச்சு டா",என்று கூறி பிரபுவை கட்டி அனைத்தான்.
"டேய் இப்போ கிளம்பினா கூட நடு ராத்திரி ஆயிருமே.எப்படி போவ எங்க தங்குவ",என்றான் பிரபு.
"அதல்லாம் நான் பார்த்துகுறேன் டா.அவளை பார்த்தால் போதும் எனக்கு",என்று கூறி கிளம்பினான்.
ESTÁS LEYENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
No Ficciónகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...