பிஸ்கட் பாக்கெட்களை கொடுத்து 15 நாட்கள் ஆயின.கோபாலன் அனைவரையும் விற்ற பணத்தோடு வர சொன்னார்.
ஒரு ஒருவரையாய் அழைத்து எத்தனை விற்க முடிந்தது என்று கேட்டு கணக்கு எடுத்துக் கொண்டு இருந்தார்.
"எத்தனை விற்றாய்",என்றார்.
"30 சார்",என்றான் ஒருவன்.
"குட் உன் கலெக் ஷனை குடு",என்றார்.
பிரபு வந்தான்.
"எத்தனை விற்றாய்"
"40 சார்",என்றான் பெறுமையாக.
"எங்கே எல்லாம் சென்று விற்றாய்",என்றார்.
"நான் வீடு வீடாக சென்றேன்",என்றான்.
சிவாவை அழைத்தார்.
"நீ எத்தனை விற்றாய்",என்றார்.
"35 சார்"
"எங்கே எல்லாம் சென்று விற்றாய்",என்றார்.
"நான் கடைகள் பள்ளி கல்லூரி ஆனாதை விடுதி",என்றான்.
"ஆனாதை விடுதியா",என்று முறைத்தார்.
"இல்லை சார் அனாதை விடுதிக்கு போகலாம் நு இருந்தேன் ஆன போக முடியல",என்றான் சிவா.
"சரி இந்தா",என்று கூறி ஆளுக்கு 25 துணி துவைக்கும் பொடி பாக்கெட்களை தந்தார்.
"சார் எது எதுக்கு.எங்க வீட்டுல நிறைய இருக்கு",என்றான் பிரபு.
அவர் முறைத்தார்.
"உங்களுக்கு ஒரு வாரம் தரேன்.அதுகுள்ள இது எல்லாத்தையும் விற்கனும்.இல்லைனா இன்டெர்னல் மார்க் ஜீரோ தான் தருவேன்.மெயின் பேபர்ல பாஸ் ஆகனும் நா இன்டெர்னல பாஸ் ஆகனும் தெரியும்ல",என்றார்.
"ஆனா இது எதுக்கு.எல்லோருக்கும் இல்லாமல் எங்களுக்கு மட்டும்",என்றான் சிவா கடுப்பாக.
"என் வீட்டில் வந்து பொய் சொல்லி விற்றதுக்கு தண்டனை",என்றார்.
இருவரும் திரு திரு என்று முழித்தார்கள்.வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டார்கள்.
அவர் போன பிறகு பிரபு அதை தூக்கி வீசினான்.
சிவா அதை எடுத்தான்.
"கோவ படாமல் வா டா.எல்லாம் நம்ம தலை எழுத்து",என்றான் சிவா.
மறுநாள் கடை கடையாக ஏறி இறங்கினார்கள்.ஆனால் ஒன்று கூட விற்க முடியவில்லை.
"என்ன டா பொடி இது.யாருமே வாங்க மாட்டேங்குராங்க",என்று சலித்துக் கொண்டான்.
வெயிலில் நடக்க முடியாமல் உட்கார ஒரு இடம் தேடிய போது ஒரு கடை பூட்டி இருப்பதையும் அதன் வெளியே நிழல் இருப்பதையும் பார்த்தான்.
தன் பையை கீழே வீசினான் அதில் இருந்து பாக்கெட்டுகள் கீழே விழுந்தன.பக்கத்தில் சிவா அமர்ந்தான்.
சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
திடீர் என்று ஒருவர் இவர்கள் பக்கத்தில் வந்தார்.
"என்னப்பா இது",என்றார்.
"சார் இது துணி துவைக்குர பொடி சார்.இதுல துவச்சா துணி எல்லாம் பளிச்சுனு ஆயிடும்.வேனுமா",என்றான் பிரபு.
"என்ன விலை",என்றார்.
"கம்பனி விலை 100 ரூபாய்.நங்க M.B.A படிக்குர பசங்க.இது எங்க காலேஜ்ல ஒரு பிராஜக்ட்.அதனால பாதி விலைக்கு தரோம்",என்றான்.
"நீங்க M.B.A படிக்குர பசங்களா.இந்த காலத்து பசங்க வீட்டுக்கே பொருள் எதும் வாங்கி தர கௌரவம் பாக்குராங்க ஆனா நிங்க ரோட்டுல உட்கார்ந்து வியாபாரம் பன்னுரீங்க.இப்படியும் பசங்க இருக்கங்க நு நினைக்கும் போது பெறுமையா இருக்கு",என்றார்."ஆமாங்க அய்யா என்ன பன்னுரது.நான் படிச்சு தான் எங்க குடும்பத்தை காப்பாற்றனும்",என்றான் பிரபு.
"சரி பா ஒரு பாக்கெட் குடு",என்றார்.
"இரண்டா வாங்கிக்கோங்க அய்யா",என்றான் சிவா.
"சரி குடு பா",என்றார்.
"மச்சி இது கூட நல்லா தான் டா இருக்கு.இப்போ பாரு",என்றான் சிவா.
"அம்மா வாங்க அய்யா வாங்க தரமான வாஷிங் பவுடர.ஒரு முறை வங்கினால் வாங்கிகிட்டே இருப்பீங்க.இலவசம் கொடுத்து ஏமாற்ற மாட்டோம்.தரமான பவுடர்.வாங்க வாங்க ",என்று கூவினான்.
இவன் கத்தியதை கேட்டு கூட்டம் கூடியது.பக்கத்து கடை காரர் எட்டி பார்த்தார்.
கூட்டம் கூடுவதை பார்த்து திகைத்து போனார்.இவர்களை அங்கே தங்க விட்டால் தன் கடை வியாபாரம் பாதிக்கும் என்று பயந்து அவரே எல்லா பாக்கெட்களையும் வாங்கிக் கொண்டார்.
"மச்சி நம்ம தெரு தெருவா அலஞ்சப்போ யாரும் மதிக்கல ஓய்வு எடுக்கலாம் நு வந்தா எல்லாம் விற்று போச்சு",என்றான் சிவா மகிழ்ச்சியாக.
"அது தான் டா வாழ்கை தேடி செல்லும் போது நமக்கு கிடைக்காது.வேண்டாம் என்று ஒதுக்கும் போது தேடி வரும்",என்றான் பிரபு.
"அப்படி தேடி வரும் போது ஏத்துகறது தான நமக்கு நல்லது",என்றான் .
"நீ எங்க வர நு எனக்கு புரியுது.வா போகலாம்",என்றான் பிரபு.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...