ஆரதனா வேலை அனைத்தும் முடித்துவிட்டு வந்து அமர்ந்தாள்.அவள் நினைவு சிவாவை சுற்றியே இருந்தது.இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று யோசித்தாள்.அவன் கல்லூரியில் இருப்பான் என்று அவளுக்கு தெரியும் அதனால் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள்.
தனது போனை எடுத்து முகநூலை அலசிக் கொண்டு இருந்தாள்.
சற்று என்று ஒரு புகைப்படம் அவளின் கவனத்தை ஈர்த்தது.சிவா மாலையோடு ஒரு பெண்ணின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தான்.
அவன் நண்பன் சிவாவின் நிச்சயத்தில் நான் இருக்கிறேன் என்று போட்டு இருந்தான்.
ஆரதனாவுக்கு தலை சுற்றியது.மனது பதறியது.கைகள் நடுங்கின.மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தாள்.அவனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன.சிவாவுக்கு உடனே போன் செய்தாள் ஆனால் அவன் எடுக்கவில்லை.
பிரபுவுக்கு போன் செய்தாள்.
"சொல்லு ஆரதனா",என்றான் சங்கடமாக.
"அண்ணா முகநூலில் ஒரு புகைப்படத்தை பார்த்தேன்.சிவாவுக்கு நிச்சயமா",என்றாள் உடைந்த குரலில்.
"ஆமா இப்போ நானும் அங்கே தான் இருக்கேன்",என்றான்.
அவள் அதிர்ச்சியில் வாய் அடைத்து போனாள்.
"அவன இனியும் நம்பி உன் வாழ்க்கைய கெடுத்துகாத.அவன் கூட பழகன கொஞ்ச நாளை மறக்க முயற்சி செய்",என்றான் பிரபு.
"மறக்கறதா அண்ணே அவர கட்டாயம் பன்னி தான இந்த ஏற்பாடு நடக்குது.இஷ்டம் இல்லாம தன இதுக்கு ஒத்துகிட்டான்",என்றாள்.
"ஒருதனோட சம்மதம் இல்லாம நிச்சயம் வரைக்கும் வர முடியுமா.இன்னுமா நீ அவன நம்புர.எல்லாம் அவன் சம்மதத்தோட தான் நடக்குது",என்றான்.
ஆரதனா உடைந்து போனாள்.கனத்த இதயத்துடன் போனை வைத்தாள்.சிவா அவளை ஏமாற்றிவிட்டான் என்பதை புரிந்து கொள்ளுவதர்க்கே அவளுக்கு பல நிமிடம் எடுத்தது."வேறு எதை எதிர் பார்த்தாய் அவனிடம்.கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் உன்னை மனப்பான் என்றா.பைதியகாரி.அவன் உன்னை பயன்படுத்திக் கொண்டு இப்போது ஏமாற்றிவிட்டான்",என்று ஒரு குரல் அவள் தலையில் ஒலித்தது.அவள் அழ துவங்கினாள்.
ரக் ஷிதா அவள் பக்கத்தில் வந்து அவள் கண்ணீரை துடைத்தாள்.அவளை கட்டிக் கொண்டு மீண்டும் அழுதாள்.
இரவு 10 மணிக்கு சிவாவிடம் இருந்து போன் வந்தது.
கலங்கிய கண்களோடும் நடுங்கிய கைகளோடும் போனை எடுத்தாள்.
"ஆரதனா போன் பன்னி இருந்தியா.இப்போ தான் பார்த்தேன்",என்றான்.
"ஏன் என்ன பன்னிகிட்டு இருந்த",என்றாள்.
"நான் ஊருக்க் வந்து இருக்கேன்.உறவினர்கள் கூட பேசிக் கொண்டு இருந்தேன்",என்றான்.
"என்ன திடீருனு ஊருக்கு? உன் நிச்சயதார்தத்துகாக போயி இருந்தயா",என்றாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...