அந்த வழியே சென்ற ஒருவர் ஆரதனாவை கவனித்தார்.
"ஏன் மா இங்க நின்னுகிட்டு இருக்க",என்றார்.
ஆரதனா நடந்ததை கூறினாள்.
"உன்ன எவனோ கலவானி பய நல்லா ஏமாற்றி இருக்கான்.இந்த ஊர பொறுத்த வர எல்லாமே எங்க அய்யா தான்.அய்யா சரினு சொன்னா தான் உனக்கு வீடு கொடுப்பாங்க",என்றார்.
"யார் அவரு.அவர எப்படி போயி பாக்குறது",என்றாள்.
"அவரு பேரு மாரியப்பன்.இங்க எல்லோரும் அய்யா நு தான் கூப்பிடுவாங்க.ரொம்ப நல்லவரு.அவர் வீடு இங்க இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு.நேரா நடந்து போ.ஒரு பெரிய வீடு வரும் அது தான்",என்றார்.
அவருக்கு நன்றியை கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.தன் தந்தை இவ்வளவு சீக்கிரம் சம்மதம் சொல்லுவார் என்று சிவா நினைக்கவே இல்லை.உடனே ஊருக்கு கிளம்பினான்.
பஸ்சில் இருந்து இறங்கியதும் நேராக ஆரதனா வீட்டுக்கு சென்றான்.
கதவு பூட்டி இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.சிறிது நேரம் அவள் வாசலில் அமர்ந்தான்.
வெகு நேரம் ஆகியும் அவள் வரவில்லை.பக்கத்து வீட்டு கதவை தட்டினான்.
"யாரு வேனும்",என்றார் ஒருவர்.
"ஆரதனா எங்க போயி இருக்காங்க.எப்போ வருவாங்கனு ஏதாவது சொல்லீட்டு போனாங்களா",என்றான்.
"ஓ நீ அந்த பையனா.அனிக்கு வந்து பிரச்சனை பன்னீட்டு போனது நீ தான",என்றார்.
"ஆமாம்",என்றான் சங்கடமாக.
"அந்த பொன்னு பாட்டுக்கு நிம்மதியா இருந்துச்சு.நீ அடிகடி வந்து பிரச்சன பன்னி அது பேயர கெடுத்து விட்டுட்ட",என்றார்.
"என்ன சொல்ல வரீங்க புரியலையே",என்றான்.
"நீ அன்னிக்கு வந்து பிரச்சன பன்னீட்டு போனத்க்கு அப்புறம்.இங்க இருக்குரவங்க எல்லாம் அந்த பொன்ன தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க.அது மட்டுமா.யாரோ அவங்க மாமியார் கிட்டயும் சொல்லீட்டாங்க.மாமனாரும் மாமியாரும் அடுத்த நாள் வந்து ஏதோ சத்தம் போட்டாங்க போல இருக்கு.அந்த பொன்னு ரொம்ப மனசு ஒடஞ்சு போச்சு.இன்னிக்கு காலைல இருந்து வீடு பூட்டி இருக்கு.எங்க போச்சுன்னு ஒன்னும் தெரியலை",என்றார்.
சிவா அதிர்ந்து போனான்.அவனால் அவள் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனையா.ஊரை விட்டு போய்விட்டாளா இல்லை அவள் அப்பா அம்மா வீட்டுக்கு சென்று விட்டாளா ஒன்றும் புரியவில்லை.அவன் வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணினான்.எல்லாம் கூடி வரும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே.கடவுளுக்கு தன் மீது ஏன் இப்படி ஒரு கோவம் என்று தன்னை தானே நொந்து கொண்டான்.
பதில் எதுவும் சொல்லாமல் தன் விடுதிக்கு புறப்பட்டான்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...