"ஏன் பா உன் சம்மதம் வாங்கி தானே பொன்னு வீட்டுல பேசினோம்.ஏன் புடிக்கல",என்றார் அப்பா.
சிவா அமைதியாக இருந்தான்.
"வேற யாரையாவது லவ் பன்னறியா"என்றார்
சிவா நிமிர்ந்து அவரை பார்த்தான்.
"ஆமா பா",என்றான்.
"அப்போ ஏன் பா வேற பொன்னு பார்க்க சொன்ன.நிச்சயம் எல்லாம் கூட பன்னியாச்சு இப்போ இப்படி சொல்லுர",என்றார்.
"அப்போ அந்த பொன்னு ஒத்துகல பா.இப்போ தான் சரினு சொல்லுச்சு",என்றான்.
அப்பா பெருமூச்சு விட்டார்.
"இப்போ பொன்னு வீட்டு காரங்ககிட்ட என்ன சொல்லுரது",என்றார் பதட்டமாக.
"அதல்லாம் நான் பார்த்துகுறேன் அப்பா.நான் போயி பேசுறேன்",என்றான்.
"நீ யார லவ் பன்னுர",என்றார் அம்மா.
"ஆரதனா",என்றான்.
"அந்த பொன்னு உன் கூட படிச்ச பொன்னு தான.ஒரு தடவ போன்ல கூட பேசுச்சே",என்றாள் அம்மா.
"அதே பொன்னு தான் அம்மா",என்றான்.
"இத ஏன் பா நீ முன்னாடியே சொல்லல.அது நல்ல பொன்னு தான.நாங்க ஏன் வேண்டாம் நு சொல்ல போறோம்",என்றாள்.
"இல்ல மா அந்த பொன்னுக்கு கல்யாணம் அயிருச்சு",என்றான்.
"என்ன டா குழப்புற அப்புறம் எப்படி நீ கல்யாணம் பன்ன முடியும்",என்றாள்.
"அவளோட கணவன் இறந்துட்டார்",என்றான்.
அவர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.அவர்கள் அதிர்ச்சியில் இருக்கும் போதே அவன்,"அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கு",என்றான்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்பா எழுந்து உள்ளே சென்றார்.
"அப்பா நில்லுங்க",என்றான் ஆனால் அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
"அம்மா உன் பதில் என்ன",என்றான்.
"உனக்கு வேற பொன்னே கிடைக்கலையா காதலிக்க.கல்யாணம் ஆகி குழந்தை இருக்க பொன்ன மருமகளை வீட்டுக்கு கூட்டீட்டு வந்து நம்ம சொந்தகாரங்க எல்லாம் என்ன டா நினைப்பாங்க.என்னையும் உங்க அப்பாவையும் காரி துப்ப மாட்டாங்க.அது மட்டுமா பயனுக்கு ஏதோ குறை இருக்கு போல அதான் இப்படி ஒரு பொன்ன கட்டிகிட்டு வந்து இருப்பான் நு பேசுவாங்க",என்றாள்.
"மத்தவங்கள விடு மா.நீ என்ன நினைக்குர.யாரையோ கல்யாணம் பன்னிக்குரதுக்கு நான் காதலிச்ச அந்த பொன்ன கட்டிகறது நல்லது இல்லையா",என்றான்.
"நான் யோசிக்கனும்.கொஞ்சம் டயம் குடு நான் உங்க அப்பா கூட கலந்து பேசி எங்க முடிவ சொல்லுறென்",என்றாள்.
"சரி இன்னும் இரண்டு நாள் இங்க தான் இருப்பேன்.நல்ல முடிவா சொல்லுங்க",என்றான்.
"முடிவ சொல்லுறென்.அது நல்லத இருக்குமா நு எனக்கு தெரியாது",என்று கூறிவிட்டு உள்ளே சமைக்க சென்றாள்.
சிவா குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டான்.யாரும் அந்த விஷயத்தை பற்றி பேசவே இல்லை.
சிவா வெளியே கிளம்பினான்.
கோவில் குளத்தின் அருகில் அமர்ந்து இருந்தான்.
குழப்பமான தருணங்களில் அவன் அங்கே தான் செல்வான்.மெல்ல வீசும் தென்றலும் அமைதியான சூழலும் அவனுக்கு நிம்மதி தரும்.
"மாப்பிள்ள",என்ற சத்தம் கேட்டு திரும்பினான் சிவா.
ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள்.
"யார் நீங்க ",என்றான்.
"நான் பிரியா பிரன்டு.உங்க நிச்சயம்ல பார்த்தோமே நியாபகம் இல்லையா",என்றாள்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...