இருவரும் ஒன்றாக செல்ல முடிவு எடுத்தார்கள்.30 நிமிடங்கள் அலைந்தும் ஒன்று கூட விற்க முடியவில்லை அவர்களால.்
ஒரு வீட்டின் முன் நின்று"ஆம்மா",என்றான் பிரபு.
"பழசல்லாம் ஒன்னும் இல்லை நாளைக்கு வா பா",என்றது ஒரு குரல் உள்ளே இருந்து.
"நாங்க பிச்சகாரங்க இல்லீங்க.பிஸ்கட் விற்க வந்து இருக்கோம்",என்றான் பிரபு.
"ஒன்னும் வேண்டாம் போ பா",என்றது அந்த குரல்.
வெறுப்பாக அங்கு இருந்து சென்றனர்.
வெயிலில் நடப்பது மிகவும் கடினமாக இருந்தது.ஒரு வீட்டின் வாசலில் சென்று நின்ற போது அங்கு பல குழந்தைகள் விளைடாடிக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒருவரை அழைத்தான் பிரபு.
"இங்க வா டா",என்றான்.
"என்ன அண்ணா",என்றான் அந்த சிறுவன்.
"அண்ணன் ஒரு பிஸ்கட் கம்பனில வேலை பாக்குறேன்.இப்போ ஒரு ஆஃப்பர் போடிருக்காங்க.இரண்டு பிஸ்கட் வாங்குனா ஒரு பெரியா சாக்கலேட் இலவசம்.போயி அம்மாகிட்டா எனக்கு இந்த பிஸ்கட் தான் வெனும் நு சொல்லு போ",என்றான்.
"சரி அண்ணா",என்று கூறிவிட்டு அவன் உள்ளே சென்றான்.
அவன் அம்மாவிடம் அடம் பிடித்து இரண்டு பிஸ்கட் வாங்கினான்.பக்கத்து வீட்டு குழந்தைகளும் சாக்கலேட்டுக்கு ஆசை பட்டு அவரவர் வீட்டில் அடம் பிடித்து பணம் கொண்டு வந்தனர்.
10பிஸ்கட் விற்று விட்டான் பிரபு.
"தம்பிகளா இங்கயே நில்லுங்க நாங்க போயி உங்க சாக்லேட்டை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிறோம்",என்று கூறி அங்கே இருந்து நகர்ந்தனர்.
வேகமாக நடந்து பக்கத்து தெருவிக்கு வந்தனர்.
"பாவம் டா அந்த பசங்க ஏமாந்து போயிருவாங்க",என்றான் சிவா.
"அப்படியா அப்போ போயி உன் கை காச போட்டு சாக்லேட் வாங்கி கொடுத்துட்டு வா",என்றான் பிரபு.
"ஒரு வழிய 10பிஸ்கட் விற்றுவிட்டோம்",என்றான் சிவா.
"விற்றுவிட்டோம் இல்லை டா விற்றுவிட்டேன்",என்றான் பிரபு.
"சரி சரி நீ தான் விற்ற.வா போகலாம்",என்றான் சிவா.
அதற்கு பிறகு இரண்டு மூன்று விற்றார்கள்.பல வீடுகளில் இருப்பவர்கள் கதவை கூட திறக்க மறுத்தனர்.
பிரபு கோவமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டை ரோட்டில் வீசினான்.
"டேய் பிரபு என்ன இது",என்றான் சிவா.
"கஷ்டபட்டு காலேஜ் ல சேர்ந்து படிக்க வந்த தெரு தெருவா அலைய விடுறாங்க.இப்படி விற்க வந்த எத்தனையோ பேர நான் கலாய்ச்சு அனுப்பீர்க்கேன்.இப்போ எனக்கே இந்த நிலமையா",என்றான்.
"அவங்களோட சாபம் தான் இப்படி உன்னை பழி வாங்குது",என்றான் சிவா.
ஒரு முதியவர் அவர்கள் முன்னாடி வந்து "உங்களுக்கு புடிக்கலனா இல்லாதவங்களுக்கு தரலாம் ல.எதுக்கு கீழே போடரீங்க.இதுக்காக ஏங்குர குழந்தைகள் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா",என்றார் அவர்.
பிரபுவுக்கு சங்கடமாய் இருந்தது.
"மன்னிச்சுக்கோங்க தாத்தா இனிமேல் இப்படி நடக்காது",என்றான்.
அவர் அவனை முறைத்துக் கொண்டே போயிவிட்டார்.
இருவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.
"டேய் மச்சி அங்க பாரு டா",என்றான் ஒரு வீட்டின் பெயர் பலகையை பார்த்து.
"பேராசிரீயர் கோபாலன்",என்று போடப்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
"மேடம்",என்றான் பிரபு
உள்ளே இருந்து அவர் மனைவி வெளிப்பட்டாள்.
"இது பேராசிரீயர் கோபாலன் வீடு தான",என்றான் பிரபு.
"ஆமா பா நீங்க யாரு",என்றாள்.
"நாங்க அவர்கிட்ட படிக்கர பசங்க மேடம்.இது எங்க I.D.",என்று எடுத்து காட்டினார்கள்.
"சரி என்ன வேனும் சொல்லுங்க",என்றாள்.
"சார் ரொம்ப இரக்க மனசு படைச்சவர் மேடம்.ஒரு அனாதை இல்லத்துக்கு குடுக்கரதுக்காக 25பிஸ்கட் பாக்கேட் வாங்கீட்டு வர சொன்னாரு.அதான் குடுத்துட்டு போக வந்தோம்",என்றான் பிரபு.
அவள் யோசித்தாள்.
"வேனும்னா பிஸ்கட் விற்க பசங்களை அனுப்புனீங்களா நு அவருக்கு போன் பன்னி கேட்டுப் பாருங்க",என்றான் சிவா.
"டேய்",என்று கூறி அவன் காலை மிதித்தான் பிரபு.
"என்ன டா மேடம் அவ்வளவு சந்தேக படுர ஆளு மாதரியா தெரியுது.அதான் நம்ம காலேஜ் I.D அ காட்டுரோமே.வேனும்ன நாங்க ஃபீஸ் கட்டண ரசீதை காட்டட்டுமா",என்றான் பிரபு.
"அதல்லாம் தெவை இல்லை பா.ஆனா நீங்க வருவீங்கனு அவர் எதுவும் சொல்லீட்டு போகலை அது தான் யோசிக்குறேன்",என்றாள்.
"என்னங்க நீங்க அவருக்கு எவ்வளவு வேலை இருக்கும்.இதல்லாம் கூடவா நியாபகம் வச்சு இருப்பார்.மறந்து போயிருப்பார்",என்றான் சிவா.
"சரி எவ்வளவு பா",என்றாள்.
"சாதாரனமா ஒன்னு 15 ரூவாய்.சார் நல்ல காரியத்துக்காக வாங்கரது நால 10 ரூவாயிக்கு பேரம் பேசி வாங்கீட்டு வந்து இருக்கோம் மேடம்",என்றான் பிரபு.
"சரி பா குடு",என்று கூறி வாங்கினாள்.
"மேடம் இந்தாங்க",என்று கூறி ஒரு பாக்கெட் அதிகமாக குடுத்தான் பிரபு.
"இது எதுக்கு பா",என்றாள்.
"இது இலவசம்",என்றான் சிவா.
அவள் அகம் மகிழ்ந்து போனாள்.
அவர் வீட்டில் இருந்து சில அடி வந்த பிறகு இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
எதிரெ பேராசிரியர் தன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.
"டேய் சார் சாப்பிட வீட்டுக்கு போயிட்டு இருக்காரு டா.முகத்தை மற டா",என்றான் பிரபு.
இருவரும் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு வேகமாக நடந்தார்கள்.
ஒரு ஓரமாக வந்து நிமிர்ந்து பார்த்தார்கள்.
"அம்மா இவங்க தான் காலைல சாக்கலேட் தரேன் நு சொல்லி ஏமாத்தீட்டு போனார்கள்",என்றான் சிறுவன் ஒருவன்.
"டேய் நில்லுங்க டா.மரியாதையா என் காச திருப்பி தா.இல்லாட்டீ எல்லோரையும் கூப்பிடுவேன் ",என்று அவன் தாய் கூறினாள்.
"டேய் ஓடு டா",என்று கூறி பிரபு ஓடினான்.
சிவா அவன் பின்னால் ஓடினான்.
அந்த பெண,"திருடன் புடிங்க",என்று கூறி அவர்களை பின் தொடர்ந்தாள்.
இருவரும் தலை தெறிக்க ஓடினர்.
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...