26.

2.4K 92 6
                                    

அன்று மாலை சிவா செய்வ‌து அறியாது மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தான்.
ஆர‌த‌னாவை எப்ப‌டி ச‌மாத‌ன‌ம் செய்வ‌து.எப்ப‌டி அவ‌ளை ந‌ம்ப‌ வைப்ப‌து என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.பின்னால் ஏதோ ச‌த்த‌ம் கேட்க‌ திரும்பினான்.
"த‌ய‌க்க‌மாய் ஹாய்",என்றாள் பிரியா.
"ஹாய்",என்றான் சிவா.
"என்ன‌ இங்க‌ நின்னுட்டீங்க‌.சாப்பிட‌லையா",என்றாள் பிரியா.
"ப‌சிக்க‌லை",என்றான்.
இருவ‌ரும் அமைதி ஆனார்க‌ள்.
"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க‌",என்றாள்.
"அப்ப‌டி எல்லாம் ஒன்னும் இல்லை",என்றான்.
"இல்ல‌ சாய‌ங்கால‌ம் ந‌ல்லா பேசீட்டு இருந்தீங்க‌ திடீருன்னு மூட் அவுட் அயிட்டீங்க‌",என்றாள்.
சிவா பெரு மூச்சு விட்டான்.
"நான் காலேஜ் ப‌டிக்க‌ர‌ப்போ ஒரு பொன்ன‌ சின்சிய‌ரா ல‌வ் ப‌ன்னினேன்.ஆன‌ அவ‌கிட்ட‌ ல‌வ்வ‌ சொல்லுர‌துக்குள்ள‌ அவ‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆயிருச்சு",என்றான்.
"ஓ",என்றாள் பிரியா.
"அவ‌ள‌ என்னால‌ ம‌ற‌க்க‌ முடிய‌ல‌",என்றான்.
"அப்போ அப்பா அம்மா க‌ட்டாய‌ ப‌டுத்திய‌தால‌ தான் இந்த‌ க‌ல்யாண‌த்துக்கு ஒத்துக்கிட்டீங்க‌ளா",என்றாள்.
"அப்ப‌டி சொல்ல‌ முடியாது ஆனா அறை ம‌ன‌சோடு ஒத்துக்கிடென்",என்றான்.
"உங்க‌ பாஸ்ட் ப‌த்தி என‌க்கு க‌வ‌லை இல்ல‌.அது முடிஞ்சு போன‌து.இனிமேல் என்ன‌ ந‌ட‌க்க‌னும் நு யோசிக்க‌லாம்",என்றாள்.
அவ‌ன் அமைதியாக‌ இருந்தான்.
அவ‌ளிட‌ம் சொல்ல‌லாம‌.அவ‌ள் எப்ப‌டி எடுட்துக் கொள்வாள்.அவ‌ள் அப்பா அதிர்ச்சி அடைந்து ஏதாவ‌து ந‌ட‌ந்து விட்டால் என்ன‌ செய்வ‌து என்று அவ‌னுக்கு ஆயிர‌ம் குழ‌ப்ப‌ங்க‌ள் எழுந்த‌ன‌.
"ச‌ரி நான் கீழே போறேன்.உங்க‌ பாஸ்ட‌ நின‌ச்சு கொழ‌ப்பிக்காதீங்க‌.க‌ண்டிப்பா உங்க‌ளுக்கு ஒரு ந‌ல்ல‌ ம‌னைவியா நான் இருப்பேன்",என்று கூறி மெலிதாய் சிரித்தாள்.
அவ‌ள் சிறிது தூற‌ம் சென்ற‌ போது.
"பிரியா",என்று அழைத்தான்.
அவ‌ள் திரும்பினாள்.
அவ‌ளிட‌ம் சொல்லி விட‌லாம் என்று நினைத்து வாய் எடுத்தான் ஆனால் அத‌ற்குள் அவ‌ள் தோழிக‌ள் வ‌ந்த‌ன‌.
"இங்க‌ பாருங்க‌டி இர‌ண்டு பேரும் இங்க‌ இருக்காங்க‌.உங்க‌ல‌ காண‌ம் உ எல்லாரும் தேடினா.இங்க‌ த‌னியா வ‌ந்து என்ன‌ செய்ய‌ரீங்க‌.அதுக்குள்ள‌ அவ‌ச‌ர‌மா",என்ற‌ன‌ர்.
அவ‌ள் வெட்க‌ப்ப‌ட்டு சிரிக்க‌.அனைவ‌ரும் அவ‌ளை கீழே அழைத்து சென்ற‌ன‌ர்.
"மாப்பிள்ள‌ உங்க‌ள‌ சாப்பிட‌ கீழே கூப்பிட்ட‌ங்க‌",என்றாள் கூட்ட‌த்தில் ஒருத்தி.
"வ‌றேன் நு சொல்லுங்க‌",என்றான் சிவா.

மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!حيث تعيش القصص. اكتشف الآن