சிவாவுக்கு பரிச்சை ஒரு வழியாக முடிந்தது.அன்று மதியம் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே விடுதிக்கு சென்று கொண்டு இருந்தான்.அப்போது பிரபுவுக்கு கால் வந்தது.அவன் பேசிக் கொண்டே சிவாவை முறைத்தான்.பின் சிவாவிடம் போனை குடுத்தான்.
"யாரு டா",என்றான்.
ஆனால் அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.
"ஹலோ",என்றான்.
"சிவா",என்ற குரலை கேட்ட போதே அது யார் என்று புரிந்து கொண்டான்.
பிரபுவை பார்த்தான்.அவன் தூரமாக நின்று கொண்டு சிவாவை முறைத்துக் கொண்டு இருந்தான்.
"ஆ......ஆரதனா சொல்லு என்ன விஷயம்",என்றான்.
"நான்........நீ........நீ எப்படி இருக்க.உனக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே",என்றாள்.
"நான் நல்லா தான் இருக்கிறேன்",என்றான்.
"நீ இரண்டு வாரமா காலே பன்னலையே அதான் கேட்டேன்",என்றாள்.
"ஏன் என் காலுக்காக காத்து இருந்தாயா",என்று கூறி புன்னகைத்தான்.
"இல்லை இல்லை சும்மா தான் கேட்டேன்",என்றாள்.
சிவா இப்போது சிரித்துக் கொண்டு இருந்தான்.
எதிரே நிற்கும் பிரபு பார்ப்பதை பார்த்தவுடன் அவன் வாய் மூடிக் கொண்டது.
"எனக்கு பரிச்சை இருந்துச்சு அதான் அந்த சமயம் கவனத்தை சிதற விட வேண்டாம் நு பார்த்தேன்",என்றான்.
"சரி",என்றாள்.
"எதாவது சொல்லனுமா",என்றான்.
"நான்.....அது வந்து......",என்று தடுமாறினாள்.
"சரி இன்னிக்கு 4 மணிக்கு பார்க்குல சந்திக்கலாம்.நீ சொல்ல வந்ததை சொல்லு",என்று கூறினான்.
அவள் மனம் மகிழ்ச்சியில் திகைத்தது."சரி",என்றாள்.
சிவாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.அவனால் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.அவள் தன் நினைவாக இருந்து இருக்கிறாள் என்று நினைக்கும் போதே பறக்க வேண்டும் என்று தோன்றியது.
பிரபு அருகில் வந்தான்.
"என்ன சொன்னா",என்றான்.
"என்னை பார்க்கனும் நு சொன்னா",என்றான்.
"எதுக்கு"என்றான் பிரபு.
சிவா சிரித்தான்."போனா தான் தெரியும்",என்றான்.
பிரபு அவன் கையில் இருந்து போனை வெடுக்கு என்று புடுங்கிக் கொண்டு திரும்பி பார்க்காமல் சென்றான்.
அவன் கோவமாக செல்கிறான் என்பது அவனுக்கு புரிந்தது.ஆரதனா தனக்கு பிடித்த புடவையை கட்டிக் கொண்டாள்.தலை முடியை அழகாக பின்னிக் கொண்டாள்.தான் அன்று அழகாக அதே சமயம் எளிதாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.தன் பின்பத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு கிளம்பினாள்.முதல் முறையாக காதலை சொல்லும் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.
சிவா ஒரு நீல சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்து இருந்தான்.அவளை பார்க்க செல்லும் போது எல்லாம் பல எதிர் பார்ப்புகளோடு செல்வான் சிவா ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடியும்.அதே போல் இன்றும் அவள் என்ன சொல்ல போகிறாளோ என்ற எதிர்பார்ப்புடன் சென்றான் சிவா.இந்த முறை ஒரு முடிவோடு சென்றான்.இன்றும் அவள் தம் காதலை ஏற்கவில்லை என்றால்,இதுவே அவன் அவளை பார்க்கும் கடைசி நாளாக இருக்கும்.அவள் நினைவு அவனை வாட்டினாலும்.அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைத்தான்.
சிவா அங்கே சென்ற போது ஆரதனா இன்னும் அங்கே வரவில்லை.காத்திருக்க துவங்கினான்.அவளுக்காக காத்து இருப்பது புதிது இல்லை என்றாலும்.இதுவே அவன் காத்து இருக்கும் கடைசி நாள் என்பதில் தெளிவாக இருந்தான்.
![](https://img.wattpad.com/cover/73782891-288-k70506.jpg)
YOU ARE READING
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
Non-Fictionகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...